பசித்திமிர் கவிதை - Pasithimir

 


#பசித்திமிர்


இடைவெளி என்னவோ!!

வயிற்றுக்கும் தொண்டைக்குமே 

இதற்க்கிடையே எத்தனை

இடைவெளியற்ற இடர்கள் 


சுதந்திரமாய் மூச்சுவிட

முடியாததோர் வலியால் 

வாட்டும் பசியில்

உறக்கந்துறக்கும் விழிகள்


நாசுரக்கும் உமிழ்நீர்

விழுங்கி உயிர்வாழ்ந்து

ஒவ்வொரு நொடியும்

யுகங்களாய் கடந்திடும் காலங்கள்


வெட்ட வெட்டத் 

துளிர்க்கும் வறுமையிலும் 

பொறுமையாகக் காத்திருக்கும்

நல்வழி பிறக்குமா 

என்று பார்த்திருக்கும் 


பசிதான் மானுடத்தின்

பொதுமொழி அறிந்திருந்தும் 

பஞ்சத்திலும் எவர்காலடியிலும்

தஞ்சம் கொள்ளாமல்


இறக்கும் தருவாயிலும்

எவரிடமும் இரந்துவாழாமல்

வேதனைகள் தீர்ந்திட

போதனைகள் பெறத்துடிக்கும் 


மனோ"திடம் மனதுள்

நுழைந்து மண்றாடி 

வறுமை ரேகையழித்து

வாழ்ந்திடும்படி உரைக்கும் 


ஆயிரமாயிரம் பணத்திமிரில்

வராத போதையெல்லாம் 

நல்பாதை நோக்கிக்

காத்திருக்கும் பசித்திமிரில் 


திமிறியெழுந்து மனதுள்

மறைந்திருக்கும் மனிதத்தை 

தட்டியெழுப்பி வாய்ப்பை

கட்டியிழுக்க காத்திருக்கும்


பசியோடு இருப்பவனுக்கு

இத்தனை இன்னல்களும் 

இயற்கையின் விதியா!!

இறைவனின் சதியா!! 


வினாக்களோடு - நீயே 

கதியென்று ஆனபோதும் 

கொண்ட கொள்கையில்

மாறாது எப்போதும் 


தடுமாற்றம் கொள்ளாமல் 

தடம்மாறியும் செல்லாமல் 

ஊனோடு உயிராகி

உணர்வோடு வாழவைக்கும் 


பசித்திமிர் போதைகளில் 

சிறந்த  ராஜபோதையே 


            *ரேணுகா ஸ்டாலின்*

0/Post a Comment/Comments