ஹைக்கூ போட்டி எண் 121ன் வெற்றியாளர்கள் ஹைக்கூ கவிதைகள்
1. சிலந்திவலை
செடியில் ஒட்டிக்கொண்டிருக்கிறது
பனித்துளி
மலர் மைந்தன்
2. சிலந்தி வலை
நேர்த்தியாய் இருக்கிறது
வானில் மேகம்
ச.லதாதேவி
3. சிலந்தி வலை
காற்றில் மெல்ல அசைகிறது
இறந்த பூச்சி
பா. இராமர்
4. செடியில் நூலாம்படை
பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது
சிலந்தியின் கட்டுமானம்
கவித்தென்றல் சௌ.நாகநாதன்
5. பின்னிய சிலந்தி வலை
பூச்சிகளின் அந்தர
மயானம்
ச. இராஜ்குமார்
6. வலையில் சிலந்தி
வேட்டையாட காத்திருக்கும்
செடியில் மரப்பல்லி
கவிஞர் கவிநிலா மோகன்
7. வலைக்குள் சிலந்தி
வசமாக மாட்டிக்கொண்டது
ஊர்ந்துசென்ற வண்டு
ஆ.முருகேசுவரி
8. சிலந்தியின் விடாமுயற்சி
பாராட்ட முடியவில்லை
வலையில் சிக்கிய சிறுபூச்சி
சு.கேசவன்
9. சிலந்தி வலை
சிறப்பாக இருக்கிறது
கட்டுமானப் பணி
சரஸ்வதி ராசேந்திரன்
10. சிலந்தி வலை
சுவரில் அழகாக இருக்கிறது
மழலையின் கிறுக்கல்
இரா.வேணு கோபாலகிருஷ்ணன்
11. பின்னப்பட்ட வலை
சிக்கிக் கொள்ளவில்லை
சிலந்தி
Dr ஜலீலா முஸம்மில்
12. பின்னிய வலை
காத்துக் கொண்டிருக்கிறது
பசியுடன் சிலந்தி
ரவிஜி
13. சிலந்தி வலை
நெருக்கமாக காணப்படுகின்றன
திராட்சை பழங்கள்
சுமி முருகன்
14. வலையில் சிக்கிய பூச்சி
வெளியேற வழிதெரியாமல் தவிக்கும்
அடர்வனத்தில் நாடோடி
கவிதா அசோகன்
15. சிலந்தி வலை
சிறைப்பட்டது விழுந்த பூச்சி
வானமும் தான்
மா.துரைசாமி
16. சிலந்தி வலை
வரிவரியாய் இருக்கிறது
விவசாயி பாதம்
வ பரிமளாதேவி
17. பின்னிய வலை
மின்னிய படி இருக்கும்
பனித்துளி
வே.சுசீலா
18. சிலந்தி வலை
அருமையாக தெரிகிறது
முயற்சியின் வெளிப்பாடு
அருணா ரகுராமன்
நடுவர் : பாண்டிச்செல்வி கருப்பசாமி
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்
Post a Comment