#டைம்பாஸ்_கிறுக்கல்
அகத்துள் ளிருக்கும் வலிகளை
முகத்தில் அரிதாரம் பூசி
மறைத்து விட முடியுமா !!!
நிச்சயமாக முடியாது தான் . . .
குரோதங்களும், துரோகங்களும்
தந்து சென்ற காயங்கள் ஆறினாலும்
ஆற்றுப்படுத்த முடியா
வலியைத் தந்து கொண்டிருக்கும்
மாறாத மறையாத வடுக்கள் . . .
வடுக்களைக் காணும்
கணங்கலில் எல்லாம்
காரணங்கள் தேடித் தேடி
அன்பின் பிணைப்பி லிருந்து
அகன்று விடத் துடிக்கும் மனம் . . .
ஆயினும் அரிதாரம் பூசி
இதழோரம் சிறு புன்னகையை
இழையோடச் செய்யும் பொழுது
வலிகள் கொஞ்சம் மறைந்ததாகவும்,
சற்று குறைந்ததாகவும்
ஓர் பிம்பம் தோன்றும் தெரியுமா!! . . .
அதை உணர்ந்து
ஆறுதல் அடையும் பலரில்
நானும் ஒருத்தி , இப்படியே
இருந்து விட்டுப் போகிறோமே . . .
எங்களை விட்டு விடுங்கள்
இதிலென்ன நட்டம்
வந்துவிடப் போகிறது உங்களுக்கு . . .
*ரேணுகா ஸ்டாலின்*
#இனிய_இரவு_வணக்கம்_நட்பூக்களே

Post a Comment