விடுதலை-1 திரைவிமர்சனம் ரசிகனின் பார்வையில் விடுதலை-1

 


விடுதலை-1 திரை விமர்சனம்   

இது சாமானியனின் மனதைச் சொல்லும் அழகிய காவியம்

தமிழ் திரைப்பட உலகில் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் 

ஆறாவது கலைப்படைப்பு -விடுதலை 1-

மதுரை பிரியா திரை அரங்கில் அடியேன் இல்லத்தோடு இத்திரைக்காவியத்தை பார்த்ததன் மகிழ்வில்  ....

இப்படத்தின் மூலக்கதை - எழுத்தாளர்  திரு.ஜெயமோகன் அவர்களின் "துணைவன்" என்ற சிறுகதையின் - இன்னொரு பரிணாமமாக - 

"விடுதலை" என்ற பெரில் வெள்ளித்திரையில் வெற்றிமாறனுக்கே உரிய திரைக்கலைப் படைப்புத் திறனில் திரைப்படமாக மிளிர்ந்து வந்துள்ளது.

திரைஅரங்கு இருக்கை முழுவதும் இப்போது முழுவதும் நிரம்புவது என்பது இன்றையக் காலக்கட்டத்தில் மிக அரிது.

ஆனால் நல்ல திரைக்கதைப் படைப்பை தமிழ் திரைப்பட ரசிகர்கள் கொண்டாடித் தீர்ப்பார்கள் என்பது திண்ணம்.

ஆம்..

இப்படம் வெளியான திரை அரங்குகள் அனைத்திலும் அதன் இருக்கைகள் முழுவதும் நிரம்பி  வருவது அதை நிரூபித்து உள்ளது.


அந்த நிறைவான கூட்டத்தோடு அமர்ந்து இத்திரைப்படத்தை பார்ப்பதே அலாதி சுகம் தான்.

அதுவும் எந்த ரசிகரும் இப்படத்தை பார்க்கும் போது எக்காரணத்தைக் கொண்டும் படம் முடியும் வரை எழுந்து போகவில்லை என்பதே -

இப்படத்தின் திரைக்கதையின் பிரமாண்ட வெற்றிக்கு உதாரணம் ஆகும்.

ஆம்...

இயக்குனர் வெற்றிமாறன் படம் என்றாலே அது வெற்றிப் படம் தான்.

படம் ஆரம்பம் முதல் முடியும் வரை திரை ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர்ந்து விடுதலையோடு ஒன்றிப் பார்க்க வைக்க வெற்றிமாறன் ஒருவரால் தான் முடியும் என்றால் அது மிகையல்ல...

விடுதலை படத்தில்- அடித்தட்டு மக்களாய் வாழும் ஏழை & எளியவர்களின் மனசாட்சியாக -அதையே மனதில் நினைத்து வாழும் ஒரு சாமான்ய காவலராக உள்ள கதையின் நாயகனாக -இதுவரை நாம் அறிந்த நகைச்சுவை & குணச்சித்திர - நடிகர் சூரி அவர்கள் - குமரேசன் என்ற பெயரில் தம் திறமை முமுவதையும் அர்ப்பணித்து இப்படத்தில் வாழ்ந்து உள்ளார் என்பதே நிதர்சனமான உண்மை.

சூரி அவர்களைப் படத்தில் அவர் வரும் ஒவ்வொரு பிரேமிலும் தங்கமாக செதுக்கி சூரியின் இன்னொரு பரிணாமமாக ஒரு கதாநாயகனாக மிளிர வைத்து நமக்கு அறிமுகப்படுத்தி வைத்து உள்ளது இயக்குனர் வெற்றிமாறனால் மட்டுமே சாத்தியமாகும்.

அதை உள்வாங்கி நிரூபித்துள்ள நடிகர் சூரி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் & வாழ்த்தினாலும் தகும்.

கதைநாயகியாக பாப்பா என்ற கதாபாத்திரத்தில் தமிழரசி என்ற  பெயரில் விடுதலைப் படத்தின் மலைக்கிராமவாசியாகவே மாறி 

படம் முழுவதும் வாழ்ந்துள்ளார் நடிகை பவானி ஸ்ரீ - அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இவர் சென்னையைச் சேர்ந்தவர் என்பதும் திரைக்கலைஞரும் & இசை அமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ் அவர்களின் தங்கை என்பதும் கூடுதல் சந்தோச தகவல்.

இப்படத்தில் அதிகார வர்க்கத்திற்கும் மற்றும் அதிதீவிரவாத மக்கள் படைக்கும் நடக்கும் வன்முறையே திரைக்களமாக அமைத்து இருந்தாலும் -  ஓர் மென்மையான காதல் கதையை அனைவரும் ஆவலுடன் - ரசிக்கும் வகையில் திரைக்கதையை நகர்த்தி யார் மனதையும் புண்படுத்தாமல் , ஒட்டு மொத்த திரைரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்து செல்லும் கலைத்திறன் இயக்குனர் வெற்றிமாறன் ஒருவரால் மட்டுமே முடியும் .

கிராமவாசிகளை அடக்கி வைக்க லாக்அப்பில் காவல்துறையினர் நடத்தும் வன்முறைக் காட்சிகள் -

நமது நெஞ்சங்களை உலுத்துவதோடு &  இதற்கு முன் வெளிவந்த  ஜெய்பீம் படக் காட்சிகளை நினைவு படுத்துகின்றது.

வாத்தியார் பெருமாள் ஆக விடுதலை படத்தின் முதல் பாகத்தில் - ஒரு சில காட்சிகளிலே மட்டுமே வந்து போனாலும் -அப்பாத்திரத்துக்கு வலு சேர்க்கும் வகையில்-

இன்றைய முன்னணி கதாநாயகன்களில் ஒருவரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எந்தவித ஈகோவும் இல்லாமல் நடித்திருப்பது -  

அவர் ஒருவரால் மட்டுமே சாத்தியம்  என்பதை இயக்குனர்.வெற்றிமாறனின் எண்ணத்துக்கு ஏற்ப நிரூபித்து உள்ளது.

இது விடுதலையின் பிரமாண்டமான வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் .

திரைக்கலைஞர்கள் கவுதம் வாசுதேவன்,ராஜீவ் மேனன்,சேட்டன், இளவரசன் , தமிழ் & அனைத்து கலைஞர்களும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு விடுதலையில் வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதே உண்மை.

இசை ஞானி இளையராஜா அவர்கள்- மனதை வருடிக் கொடுக்கும் மெல்லிசையான பாடல்களாலும் & பின்னணி இசையிலும் மிரட்டியுள்ளார்.

ராஜா என்றுமே ராஜா தான்.

ஔிப்பதிவாளர் வேல்ராஜ் நம்மை கதைக்களமான மலைக்கிராமத்திலேயே- படம் ஆரம்பித்து முடியும் வரை - அக்கிராமத்தின் சாட்சியாக -அங்கு நாமே வாழ்வது போல்- நமது மனதில் நினைக்கும் வகையில் படத்தோடு ஒன்ற வைத்துள்ளார்.


இக் கலைப்படைப்பை உருவாக்க கடினமாக உழைத்த அத்துணை தொழிற்கலைஞர்களுக்கும் - இப்படத்தின்  வெற்றியே அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும்.

இவ் அரிய கலைப்படைப்பை தயாரித்த திரு.எல்ரெட் குமார் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இந்த அருமையான விடுதலை 1 திரைப்படத்தை -நாம் குடும்பத்தோடு திரை அரங்குகளுக்கு சென்று பார்த்து- அதை ரசித்து கொண்டாடித் தீர்ப்பதே இயக்குனர் வெற்றிமாறனை வாழ்த்துவதும் & பாராட்டுவதும் ஆகும்.

அதுவே இம்மாதிரியான நல்ல கலைப் படைப்புகள்-

தமிழ் திரை உலகில் அடுத்தடுத்து வருவதற்கு வழி வகுக்கும்.

     -ரா.ரமேஷ் பாண்டியன்

           பட்டிவீரன்பட்டி



0/Post a Comment/Comments