இளவேனில்_இனிமையானது
வசந்த காலத்தின் பாடல்களை
வானவில் வர்ணங்களாய்
நம்மீது தூவிச் செல்லும்
இளவேனில் காலம் இனிமையானது.!
எங்கெங்கோ சுற்றித் திரியும்
சிறகடிக்கும் பறவைகள்
பற்பல வலசையாய்
நம்தேசம் வந்து வட்டமிடக்
கண்டு கண்டு ரசித்திடும்
இளவேனில் காலம் இனிமையானது.!
பாய்ந்தோடும் வைகையாற்றில்
வந்திறங்கி அருள்புரியும்
கள்ளழகர் திருவிழாக் கண்டு
கண்களை நிறைந்/த்திடும்
இளவேனில் காலம் இனிமையானது.!
கோடை விழாக்கள் பலவந்து
குதூகலத்தைக் கூட்டிடும்
இன்பம் தரும் காலமது
இளவேனில் காலம் இனிமையானது.!
மனமதில் படிந்த கவலைகள்
யாவும் கரைந்தோடி
தன்னம்பிக்கை கரை
புரண்டோடுதல் போலே
பட்ட மரத்திலும் மெல்ல மெல்ல
இலைகள் துளிர்க்க தொடங்கும்
இளவேனில் காலம் இனிமையானது.!
இயற்கையின் கொடையாய்
இன்பம் பல தந்திடும்
கோடை வாசஸ்தலங்கள் தோறும்
மலர்க்கண்காட்சி கண்டு
மனம் மயங்கி ரசித்திட வந்த
இளவேனில் காலம் இனிமையானது/
நீண்டதொரு பகல் பொழுதை
போர்த்திய காலக்கடிகாரத்தின்
கடைசி சில நொடிகளாக வந்த
இரவு பொழுதின் இன்பம் தரும்
இளவேனில் காலம் இனிமையானது/
பனிக்காலத்தை துரத்தியடித்து
இளவேனில் விதைகளை
இன்பமுடன் விதைத்து செல்கின்ற
இளவேனில் காலம் இனிமையானது.!
நிலம் நோக்கி இறங்கிடும்
கோடையின் வெப்பமதும்
கொண்டாட்டத்தை விளைவித்திடும்
இளவேனில் காலம் இனிமையானது.!
இயற்கையின் எழிலில்
இன்பம் பல தந்திடும்
இளவேனில் காலம்
இனிமையானது..!
*ரேணுகா ஸ்டாலின்*

Post a Comment