கண்களை சுற்றி கருவளையம் நீக்குவது எப்படி..?
கண்களை சுற்றிலும் வரும் கருவளையம் முகத்தின் அழகை பாதிக்கிறது. சில எளிய வழிமுறைகள் மூலம் கருவளையத்தை நீக்கி முகத்தை அழகாக்கலாம்.
கண்களில் கருவளையம் வந்தால் நமக்கு கஷ்டம் வரப்போகிறது என்ற நம்பிக்கை பலருக்கு உள்ளது.
கருவளையம் கண்ணில் பட்டால் உடனே வீட்டில் இருக்கும் எளிய பொருள்களை பயன்படுத்தி அதை போக்கிவிடுவது நல்லது.
செல்போன், டிவி உள்ளிட்டவற்றை அதிகமாக பார்ப்பதால் பலருக்கு கண்களில் கருவளையம் உண்டாகிறது.
அதிக மன அழுத்தம், தூக்கமின்மை கூட கண்களில் கருவளையம் உருவாக காரணமாகிறது.
நீண்ட நேரம் சூரிய வெளிச்சத்தில் நிற்பதை தவிருங்கள், ஏனெனில் அதிக நேரம் சூரிய வெளிச்சம் இருந்தால் உங்கள் உடல் அதிகளவு மெலனினை உற்பத்தி செய்யும். இதனில் உங்களுக்கு கருவளையம் தோன்றும்.
குளிர்ந்த நீரில் காட்டன் துணியை நனைத்து கண்களில் வைத்து வைத்து எடுத்தால் கருவளையம் குறைய தொடங்கும்.
வைட்டமின்-ஏ நிறைந்த ரெட்டினாயிட் க்ரீம்களை பயன்படுத்துவது கருவளையத்தை போக்க உதவும். இந்த க்ரீம் கண்களுக்கு கீழே உள்ள கருமையை போக்குவது மட்டுமின்றி கண்களுக்கு கீழ் தோன்றும் சுருக்கங்களையும் போக்க செய்யும்.
வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை தூக்கி எறியாமல் அந்த தோலின் இருமுனையை நறுக்கி விட வேண்டும். கைக்கு அடக்கமாக அந்த தோலை கத்தரித்து கண்களை மூடி கண்களுக்கு மேலும் கீழும் மெதுவாக வட்டவடிவில் மசாஜ் செய்ய வேண்டும். பத்துநிமிடம் தொடர்ந்து செய்தால் இதில் இருக்கும் பொட்டாசியம் சருமத்துக்கு வேண்டிய வைட்டமின் சத்தை கொடுப்பதோடு கருவளையத்தையும் போக்கும்.
கண்களுக்கு கீழ் கருவளையம் இல்லை என்றாலும் கூட வாழைப்பழம் சாப்பிடும் போதெல்லாம் அந்த தோலை வீசியெறியாமல் கண்களுக்கு மசாஜ் கொடுங்கள். நிச்சயம் நல்ல மாற்றம் கிடைக்கும்.
முகத்தில் தனியாக தெரியும் கருமை நிற கருப்புவளையம் தீவிரமாக இருந்தாலும் நாளடைவில் மறைந்துவிடும். மஞ்சள் சிறந்த கிரிமி நாசினி இவை முகத்துக்கு பளீர் பொலிவை தரும். ஆரஞ்சு சாறு வைட்டமின் சி நிறைந்தது. வெண்ணெய் சருமத்தின் நிறத்தை மீட்பதோடு மென்மையையும் தரும்.
தினமும் குறைந்தது 7 மணி நேர தூக்கமாவது அவசியம் இருக்க வேண்டும். கண்களுக்கு அதிகப்படியான வேலை கொடுக்க கூடாது. இருட்டில் செல்ஃ போன் உபயோகப்படுத்துவதும் கருவளையத்தை மேலும் அதிகப்படுத்திவிடும். எந்த பொருளை பயன்படுத்துவதாக இருந்தாலும் கண்களுக்குள் போகாதவாறு பார்த்துகொள்ளுங்கள்.
கண்களை மூடியபடி வட்டவடிவில் மசாஜ் செய்வது சோர்வு கொண்ட கண்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். அதே நேரம் ஊட்டசத்துகுறைபாடில்லாமல் பார்த்துகொள்வதும் உடலில் நீர் வறட்சி இல்லாமல் பார்த்து கொள்வதும் கூட உங்கள் கருமை நிற கருவளையத்தை விரைவாக போக்கி விடும்.
பாதாம் எண்ணெய் கண் கருவளையத்திற்கு சிறந்த தீர்வை கொடுக்கிறது, தினமும் சிறிது பாதாம் எண்ணெயை எடுத்து உங்கள் கண் கருவளையத்தில் தடவி வர கருவளையம் இல்லாமல் போய்விடுமமாடீஸ்பூன் வெண்ணெயுடன் இரண்டு டீஸ்பூன் மஞ்சள் தூளை கலந்து ஆரஞ்சு சாறு அரை டீஸ் பூன் சேர்த்து நன்றாக குழைத்துகொள்ளுங்கள். இதை கண்களுக்கு கீழ் தடவி இலேசாக மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து காய்ந்ததும் மிதமான நீரில் கழுவி பிறகு கற்றாழை ஜெல் கொண்டு மசாஜ் செய்யுங்கள்.
ஒரு நாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் நன்றாக தூங்கினால் கருவளையம் ஏற்படுவதை தடுக்கலாம்.
தினசரி போதுமான தூக்கம் அவசியம் அவசியம், சரியான உறக்கம் இருந்தால் தான் உங்கள் கண்கள் புத்துணர்ச்சி பெறும். சரியாக தூங்காவிட்டால் கண்களுக்கு கீழே கருவளையம் தோன்றும் அதனால் தினமும் நன்றாக உறங்க வேண்டும்.
ஒருநாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.
கருவளையங்கள் உருவாவதை தவிர்க்க நீர்சத்துள்ள ஆரஞ்சு, மாதுளை, ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட பழங்களை சாப்பிடலாம்.
Post a Comment