பெண்கள் மாதவிடாய் காலத்தில்கவனிக்க வேண்டியவை


பெண்கள் மாதவிடாய் காலத்தில் கவனிக்க வேண்டியவை

பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஒருசில உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். 

பதப்படுத்தப்பட்ட உணவுகள் : - 

மாதவிடாய் காலத்தில் வயிற்று உப்புசப் பிரச்சனை பொதுவானது தான். 

இக்காலத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொண்டால், 

அது வயிற்றில் நீர்த்தேக்கத்தை உண்டாக்கி, 

வயிற்றை மீண்டும் வீங்கச் செய்யும். 

ஆகவே எவ்வளவு தான் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் மீது ஆசை இருந்தாலும், 

கட்டுப்பாட்டுடன் இருங்கள்.

இல்லையெனில் நிலைமை மோசமாகும்.

மாட்டிறைச்சி : - 

மாட்டிறைச்சிகளில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகளவில் இருக்கும். 

இம்மாதிரியான உணவை மாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டும். 

இல்லாவிட்டால் வயிற்று பிடிப்பு, 

வயிற்று உப்புசம் மற்றும் வயிற்று வலி 

போன்றவற்றை கடுமையாக சந்திக்க வேண்டியிருக்கும். 

ஒருவேளை உங்களுக்கு இறைச்சி சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், 

தோல் நீக்கப்பட்ட சிக்கன் நெஞ்சுக் கறி அல்லது மீன் போன்றவற்றை சாப்பிடுங்கள்.

பால் பொருட்கள் : - 

ஆச்சரியப்படாதீர்கள். 

பால் பொருட்களான பால், மில்க் க்ரீம் மற்றும் சீஸ் போன்றவற்றை சாப்பிடக்கூடாது என்று கூறவில்லை.

 இருப்பினும் மாதவிடாய் காலத்தில் உட்கொள்ளாதீர்கள்.

 ஏனெனில் இவற்றில் உள்ள அராசிடோனிக் அமிலம், மாதவிடாய் கால பிடிப்புக்களைத் தூண்டும். 

வேண்டுமானால் மோர் குடியுங்கள். 

இதனால் வயிற்று வலி குறையும்.

காப்ஃபைன் : - 

காப்ஃபைன் நிறைந்த காபி, டீ போன்றவற்றை மாதவிடாய் காலத்தில் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

 காப்ஃபைன் உயர் இரத்த அழுத்தத்தை உண்டாக்குவதோடு, 

பதற்றம், உடல் வறட்சி போன்றவற்றை ஏற்படுத்தும் மற்றும் தூக்க சுழற்சியில் இடையூறு ஏற்படும். 

வேண்டுமானால், 

காபி, டீ போன்றவற்றிற்கு பதிலாக மூலிகை டீ குடியுங்கள்.

கொழுப்புமிக்க உணவுகள் : - 

கொழுப்புமிக்க உணவுகளான பர்கர், சிப்ஸ் மற்றும் ப்ரைஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். 

இவை ஹார்மோன்களில் தாக்கத்தை ஏற்படுத்தி, 

வயிற்று பிடிப்பு மற்றும் வாய்வு தொல்லையால் அவஸ்தைப்படச் செய்யும். 

மாதவிடாய் காலத்தில் தவறான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டால், 

அதனால் மாதவிடாய் கால பிரச்சனைகள் தீவிரமாகி, உடல் வறட்சி ஏற்படக்கூடும்.

சுத்திகரிக்கப்பட்ட  தானியங்கள் : - 

சுத்திகரிக்கப்பட்ட தானியங்களால் தயாரிக்கப்பட்ட 

பிரட், பிட்சா, செரில்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். 

ஏனெனில் இவை வயிற்று உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றை உண்டாக்கும். 

இதற்கு மாற்றாக முழு தானிய உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். 

இவற்றில் க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவு. 

இதனால் செரிமான மண்டலம் இடையூறு இல்லாமல் சிறப்பாக செயல்படுவதோடு, 

அடிக்கடி பசி எடுக்காமலும் இருக்கும்.

உப்புமிக்க உணவுகள் : - 

உப்புமிக்க உணவுகளான கேன்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சூப், பேகான், சிப்ஸ் போற்வற்றை மாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டும். 

ஏனெனில் இவற்றில் உப்பு மிகவும் அதிகளவில் இருக்கும். 

ஏற்கனவே மாதவிடாய் சுழற்சிக்குக் காரணமான ஹார்மோன் உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும். 

இந்நிலையில் உப்புமிக்க உணவுகளை உட்கொண்டால், 

அது வயிற்று உப்புசத்தால் அவஸ்தைப்படச் செய்யும்.

சர்க்கரை உணவுகள் : - 

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், 

இரத்த சர்க்கரை அளவு நிலையாக இருக்காது மற்றும் பல பெண்களுக்கு இனிப்பு உணவுகளின் மீது ஆவல் அதிகரிக்கும். 

சர்க்கரை உணவுகளை உட்கொண்டால், 

இரத்த சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்துவதோடு, 

ஏற்றஇறக்க மனநிலை மற்றும் டென்சனை உண்டாக்கும்.

இதற்கு மாற்றாக, 

நார்ச்சத்துள்ள பழங்களை சாலட்டுகளாக செய்து சாப்பிடலாம்.

காரமான உணவுகள் : - 

மாதவிடாய் காலத்தில் காரமான உணவுகளை உட்கொண்டால், 

அது உடல் சூட்டை அதிகரித்து, 

மாதவிடாய் சுழற்சியை தள்ளிப் போடுவதோடு, 

சரும அரிப்புக்கள் மற்றும் பருக்களையும் உண்டாக்கும்.

 அதோடு இரைப்பை மற்றும் குடல் சுவற்றை பாதித்து, 

அசிடிட்டி, வலிமிக்க வயிற்றுப் பிடிப்புக்களையும் ஏற்படுத்தும். 

ஆகவே மாதவிடாய் காலத்தில் அதிக காரம் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடாமல் அளவாக வேண்டுமானால் சாப்பிடுங்கள்.

1. வைத்தியர்_வைத்தியம்

மாதவிடாயின் போது  உண்டாகும் வலிக்கு எளிய மருத்துவம்

வெற்றிலை - 2

சாம்பார் வெங்காயம் - 2

சீரகம் - 1 ஸ்பூன்...

பூண்டுபல் - 2

இவையனைத்தையும் நன்கு தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி அந்த சாறை,மாதவிடாய் வருவதற்கு முன்பும், வந்த பின்னும் காலை மாலை இருவேளை வெறும் வயிற்றில் 

5 நாட்கள் தொடர்ந்து கொடுத்து வந்தால் தீராத வயிற்று வலியும் தீரும்.

மாதவிடாயின் போது தீராத வயிற்றுலி நீங்கும்.

வெள்ளைப் பூசணி - 100 கிராம்

வெள்ளரி விதை - 10 கிராம்

சாம்பார் வெங்காயம் - 2

வெள்ளை மிளகு - 5 கிராம்

பூண்டு - 2 பல்

பனங்கற்கண்டு - 100 கிராம்

இவையனைத்தையும் ஒன்றாக்கிச் சாறெடுத்து காலை, மாலை என்று இருவேளை 50 மிலி சாப்பிட மாதவிடாயின்போது உண்டாகும் வயிற்று வலி நீங்கும்.

மாதவிடாயில் சரியான அளவு இரத்தப்போக்கு இல்லாதவர்கள், இரத்தத்தை மிகுதிப்படுத்தும் உணவுகளையும், இரத்த சுழற்சிக்கு உகந்த உணவுகளையும் மிகுதியாக உட்கொள்ள வேண்டும்.

உணவில்

முருங்கைக்கீரை, 

அகத்திக் கீரை, 

மணத்தக்காளிக் கீரை, 

பசலைக் கீரை, 

பிரண்டை, 

பாகற்காய், 

சுண்டைக்காய், 

முருங்கைக்காய், 

பப்பாளிப்பழம், 

அன்னாசிப்பழம், 

பேரீச்சம்பழம், 

அத்திப்பழம் 

போன்றவற்றைத் தேவையான அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

√√ முன்று கிராம் மாம்பருப்பை பாலில் அரைத்துச் சாப்பிட அதிக உதிரப்போக்கு சரியாகும்.

√√ மாதும் பழத் தோலை ஐந்து கிராம் அளவில் அரைத்து புளிப்பு மோரில் கலந்து சாப்பிட உதிரம் நிற்கும்.

√√ பொட்டுக்கடலையை நெய்யுடன் வறுத்து, உலர்ந்த திராட்சையுடன் எடுத்துக் கொண்டால், அது அதிகப்படியான ஃப்ளோவினை சரி செய்யும்.

ரத்தம் அதிகம் வெளியேறினால் ரத்தசோகை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். 

எனவே இரும்புச்சத்து, கால்சியம் சத்து, வைட்டமின் ஏ போன்றவை நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்வது அவசியம். 

மாதவிடாயின்போது அதிகளவு உதிரப்போக்கு ஏற்படும் பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள், #கருப்பைக்_கட்டிகள் (#Fibroid) அல்லது கருப்பையில் புற்றுநோயின் பாதிப்போ இருக்கக்கூடும்.

இந்த கோளாறு உள்ளவர்கள் தக்க மருத்துவரை அணுகி பரிசோதனைகள் செய்து நிவாரணம் பெறலாம். இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. அனாலும் அதிக உதிரப்போக்கு உள்ளவர்கள் உண்டு. 

இது சாதாரணமாக உதிரப்போக்கு நிற்கும் காலத்திற்கு ஓரிரு வருடங்கள் முன்பாக நிகழக்கூடிய ஒரு நிகழ்வு. இதற்கு சில வாழ்வியல் மாற்றங்கள் உணவுமுறை மாற்றங்கள் அவசியம். தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை கடைபிடிக்கவேண்டும். 

மனதை அமைதியான மனநிலைக்கு கொண்டுவர இவ்விரண்டும் உதவும். மேலும் எளிய, சீரணமாகின்ற உணவுகளை சரியான கால அளவில் எடுத்துக்கொள்ளுதல், எண்ணெயில் பொரித்த பண்டங்கள், பலகாரங்களைத் தவிர்த்தல், நேரம் தவறி உண்பதைத் தவிர்த்தல் இவற்றைக் கடைபிடித்தால் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கு குறைய வழி உண்டு.

♦♦ சில பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் இருக்கும். அந்த நாட்களில் அடிவயிறு கனமாகி, சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும். 

இதற்கு

கருஞ்சீரகம் மருந்தாக பயன்படுகிறது. அதை வறுத்து லேசாக வெடிக்க விட்டு தூள் செய்து வைத்துக்கொண்டு மாதவிடாய் ஏற்படும் தேதிக்கு, பத்து நாட்கள் முன்பிருந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, தினமும், இருவேளை தேன் அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிட வேண்டும். இது மாதவிடாய் சிக்கலை போக்கும்.

0/Post a Comment/Comments