இப்படியும் வாழ்த்தலாமா பிறந்தநாள் வாழ்த்து நீங்களும் வாழ்த்துக் வளரட்டும் தலைமுறை

 

இன்றைய நாள் 

இன்பங்கள் இனிதாய்

என்னுள் பதிந்த 

பொன்னாள் ..!


எங்கள் ஒட்டுமொத்த 

தவத்தின் பயனாய் 

பூமகளே வரமாய்

எந்தன் கரங்களில் 

வந்து உதித்த 

பொன்னாள் ..!


சின்னஞ்சிறு 

புன்னகையில்

பெரு வலிகளையும்

வென்று கொன்ற

பொன்னாள் ..!


தேனூறும் 

செவ்விதழின்

மழலைப் பேச்சால்

பேதையிவளை

பிறவிப் பயனடையச்

செய்த பொன்னாள் ..!


முத்தங்களை 

மொத்தமாய்த் தந்து

என் சேயவள் 

எனக்குத் தாயான

பொன்னாள் ..!


பொன் மகளே

எங்கள் பூமகளே

நீ வளர வளர

நம் இல்லத்தின்

இன்பங்கள்

வளர்வதறிவாயோ!!!

பைங்கிளியே ..!


ஆண்டுகள் பல 

கடந்தும் 

இன்றும்

உன் குறுநகையும்

குறும்பும் தானே

என்னுள் 

திகட்டாமலிருந்து

தித்திக்கிறது ..!


என் உயிரில்

உறைந்த உணர்வே ..!

உணர்வில் கலந்த 

உன்னதமே ..!

என்றென்றும் நீ

புன்னகை மாறா

புதுக்கவியாய் ..!

எத்தனையோ இழப்புகள் ஏமாற்றங்களுக்கு இடையிலும் என்னை நானே மீட்டெடுத்து வலிகளை மறந்து வலிமையோடு மீண்டும் பயணிக்க  கடவுள் தந்த வரம் என் மகள். 

வரமாக வந்த செல்ல/செல்வ மகள் 

நீண்ட ஆயுளுடனும், 

நல் ஆரோக்கியத்துடனும், 

நீங்கா புகழுடனும் 

வாழ்வாங்கு வாழ 

என் #இனிய #பிறந்தநாள் 

#நல்வாழ்த்துக்கள்💐💐💐

🎂🎂🎂🍫🍫🍫🎂🎂🎂

வாழ்க வளமுடன் நலமுடன் 

ரே.ஸ்.சபரிஸ்ரீ கௌசல்யா செல்லம் ❤❤❤

           Renuga Stalin / ரேணுகா ஸ்டாலின்


             

0/Post a Comment/Comments