வாழ்த்துரை
பெருமைக்குரியது
வணக்கம்.....! 1916ம் ஆண்டு மகாகவி பாரதியார் விதை போட்ட ஹைக்கூ கவிதை இன்று ஆல் போல் வளர்ந்து அருகு போல் தழைத்து நூற்றாண்டைக் கடந்து வேகமாக வெற்றிகரமாக பவனி வந்து கொண்டு இருக்கிறது.
வளர்ந்து வரும் இளம் கவிஞர்கள் முதல் வளர்ந்த மரபுக்கவிஞர்கள் வரை எல்லோரும் ஈர்க்கப்பட்டு ஆர்வமாக உற்சாகமாக எழுதத் தொடங்கி இருப்பது வரவேற்கத்தக்கது.
1995ம் ஆண்டு கவிஞர் மு.முருகேஷ் அவர்கள் தொடங்கிய ஹைக்கூ கூட்டுத் தொகுப்பு முயற்சிகள் இன்றும் தொடர்ந்து பலராலும் சிறப்பாக செய்யப்பட்டு கவிஞர்களை ஊக்கப்படுத்துவதால் ஹைக்கூ வின் வளர்ச்சி அசுர வேகத்தில் போகிறது என்றால் மிகையில்லை.
அமெரிக்க முத்தமிழ் ஹைக்கூ பேரவை தொடங்கி ஓராண்டு நிறைவுறும் இந்த இனிய வேளையில் ஒருவருக்கு 25 கவிதைகள் வீதம் 108 கவிஞர்களிடம் பெற்ற 2700 ஹைக்கூ கவிதைகள்
அடங்கிய சாதனை நூலை முதலாம் ஆண்டு விழாவில் வெளியிட உள்ளது.
இதன் நிறுவுனர் முனைவர் தாழை உதயநேசன் அவர்கள் நான்கு முகநூல் குழுமங்களையும் அமெரிக்க முத்தமிழ் தொலைக்காட்சியையும் மிகவும் சிறப்பாக திறம்பட நடத்தி உலகத் தமிழ் கவிஞர்களை ஒருங்கிணைத்து உண்மையான
முழுமையான தமிழ்ப்பணியை ஓயாமல் ஆர்வத்தோடு செய்வது தமிழர்களாகிய நாம் பெருமைப்பட வேண்டியது.
இந்த ஹைக்கூ குழுமத்தின் நிர்வாக இயக்குனராக கவிஞர் ரேணுகா ஸ்டாலின் அவர்கள் இருந்து கொண்டு,
நான் (கவிநிலா மோகன்), கரு.கிருஷ்ணமூர்த்தி, பாண்டிச்செல்வி கருப்பசாமி இவர்களோடு நடுவராகவும் பயணித்து செம்மையாக போட்டிகளை நடத்தி உடனுக்குடன்
வெற்றி சான்றிதழ் கள் வழங்கும் அவரின் பணியும் பங்களிப்பும் போற்றுதலுக்குரியது.
தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருக்கின்ற அனைத்து ஹைக்கூ கவிஞர்களையும் பாலமாக இணைத்து உற்சாகப்படுத்தி வளர்த்து சீராட்டி பாராட்டி வருகின்ற யாருமே செய்யமுடியாத தலையாய தன்னலமற்ற சேவையை நெஞ்சாரப் பாராட்டுகிறேன்.
முதலாம் ஆண்டு விழா சிந்தை குளிர செந்தமிழ் மணக்க சிறப்பாக கோலாகலமாக கவிஞர்கள் கொண்டாடும் கவிதைத் திருவிழாவாக வெற்றிகரமாக நடக்கவும் நூற்று எட்டு ஹைக்கூ கவிஞர்களின் இந்த சாதனைப் புத்தகம் பிரமிக்கத்தக்க வகையில் பிரமாண்டமாக வெளியீட்டுவிழா நடக்கவும் இதை தமிழகமே
திரும்பிப் பார்க்க வேண்டும் என்று மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மென்மேலும் வளரட்டும்.....!
மேன்மைகள் பெருகட்டும்.....!
என்றும் அன்புடன்,
கவிஞர் கவிநிலா மோகன்,
தஞ்சாவூர்.
Post a Comment