சொல்லடா என் மாயக்கண்ணா
ஒன்றை இழந்து தான்
மற்றொன்றை பெற முடியுமாம்
உன்னை இழந்து
வேறொன்றைப் பெற
என்னால் எப்படி முடியும் . . .
நீயில்லா மனம் முழுதும்
வெறுமை நிரம்பி
வெம்மைப் படுத்துமே
நான் என் செய்குவேன் . . .
ஒருவாசல் மூடி மறுவாசல்
வைப்பானாம் இறைவன்,
நான் வரும் திசை பார்த்து
வாஞ்சையுடன் நீயிருக்கும்
அவ்வாச லடைத்த பின்
மறுவாசல் திறந்தென்ன பயன் . . .
உனைக்காணா கண்கள்
ஏக்கமுடன் எட்டி எட்டிப்
பார்த்து துடிதுடிக்குமே
நான் என் செய்குவேன் . . .
அகில உலகம் அனைத்திலும்
ஒன்றிற்கு ஈடாய்
மற்றொன்று உண்டென்று
உறுதியாய்ச் சொல்கிறார்கள் . . .
ஈரேழுலகத்திலும் உனக்கு
ஈடாய் வேறொன்றில்லை
நீயே என் வேர் என்று
எப்படி உரைப்பேன் . . .
உயிர் உருகி ஓடும் முன்
சடுதியில் வந்து சட்டென
விடை பகர்ந்திடடா - என்
மாயக் கண்ணா . . .
*ரேணுகா ஸ்டாலின்*

Post a Comment