வாழ்வில் முன்னேற சிறந்த வழி என்ன? தெரியுமா!! - கடுமையான உழைப்பு

 


உழைப்பே உன்னதம்

இடுக்கம் நித்தம்

வந்துன்னை வாட்டிடினும்

அழலிலிட்ட புழுவெனவே

துடித்திடச் செய்திடினும்

பார்ப்போர் எல்லாம்

ஒச்சியமாய் பேசிடினும்

இடுக்கம் கொண்டேநீ

மூலையில் முடங்கிடாதே

நெற்றியின் வியர்வைத்துளி 

நிலத்தினில் வீழ்ந்திடவே

நேற்றைய தோல்விகளை

தூரத்தில் துரத்திடவே

அன்பான துணைவியாய்

ஐயையவள் உடனிருக்க

அச்சங்கள் அகற்றிவிட்டு

அனுதினமும் எக்காளத்தோடு

ஏற்றிழிவு களைந்துவிட்டு

ஏற்றம்பெற பாடுபடு

எப்போதும் தளர்வின்றி

ஒச்சியம்பெற போராடு

ஓக்கியம் எதுவென்று

தெளிந்துநீ நடைபோடு

எந்நாளும் மனச்சோர்வை

ஏற்றிடாதே உன்னுள்ளே

களைப்பை கணநேரம்கூட

கொண்டிடாதே மனதுள்ளே

எக்காளம் பேசினோர்

வெட்கித் தலைகுனிந்திடவே

உழைப்பினை உறுதுணையாய்

உன்னோடு வைத்தாலே

உவர்க்கம் கொஞ்சும்

கடல் ஊர்மி போலே

உழைப்பு உன்னை

கொஞ்சி மகிழ்ந்திடுமே

எக்காளம் பொங்கிடவே

எடுத்துன்னை அணைத்திடுமே

இஃதே உழைப்பதன்

உன்னதமென உணர்த்திடுமே

விரக்தியை உன்னுள்ளிருந்து

ஒதுக்கியே விரட்டிடுமே

வெற்றித் திருமகளை

உனதில்லம் சேர்த்திடுமே

ஆழ்மனதும் சஞ்சலமின்றி

நிம்மதி கொண்டிடுமே

உழைப்பே உனை உயர்த்தும்

ஆயுதம் எனஅறிந்தாலே

அகிலம் போற்ற உயர்ந்திடலாம்

அறிவீர் இச்செகத்தீரே


அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்


           *ரேணுகா ஸ்டாலின்*


         




0/Post a Comment/Comments