இங்கே திறமை இல்லாதவங்கனு யாருமே இல்லங்க - எனது வரிகளில் மெட்டுக்கு பாட்டு


வருசமெல்லாம் வசந்தம் படத்தில் எங்கே அந்த வெண்ணிலா பாடலுக்கு எனது மாற்று வரிகள்

பல்லவி :

எந்தன் உயிர் காதலா/

எந்தன் உயிர் காதலா/


எந்தன் உயிர் காதலா/

எந்தன் உயிர் காதலா/

என்னை உனதாக்கினாய்

உள்ளம் தனை தாக்கினாய்/

எந்தன் உயிர் காதலா/


எந்தன் உயிர் காதலா/

எந்தன் உயிர் காதலா/


சரணம் : 1

தனிமை சிறையில் நான் 

சருகாய் உதிர்கிறேன்/

உன் நினைவில் தானடா 

உன் நினைவில் தானடா/

என்னை மறந்து நான் 

உனையே நினைக்கிறேன்/

உன் பிரிவில்  தானடா 

உன் பிரிவில்  தானடா/

இயற்கையே இணைத்தது 

நம் காதல்/

அதில் வலிகளைக் 

கொடுக்குது உன் ஊடல்/

இணை பிரியாதது

நம் பந்தம்/

அதில் சுகங்களை கூட்டுது

தினம் கூடல்/

அன்பே பிரிவால் என்னை 

வதைத்தாய் போதும்/

நீதான் எந்தன் முதல் எழுத்து

என்றும் நீதான் எந்தன் முதலெழுத்து

(எந்தன் உயிர் காதலா)


சரணம் : 2

இருளில் நடக்கிறேன் 

ஒளியாய் தொடர்கிறாய்/

விழியில் விழுந்த நீ

மனதில் நுழைகிறாய்/

அகத்தில் நிறைந்தவன் 

புறம் ஏன் செல்கிறாய்/

புரிதல் இன்றியே 

பிரிந்தேன் வதைக்கிறாய்/

கண்களில் உந்தன் 

பிம்பங்களே/

அதைத் தீட்டிட எனக்கொரு 

துயர் எதற்கு/

நெஞ்சினல் உந்தன் 

நினைவுகளே/

அதைச் சுமப்பதில் 

எனக்கொரு சுகம் இருக்கு/

நான் உறைந்தால் என்ன? 

கரைந்தால் என்ன?

நம் காதல் என்றும் வரம் எனக்கு/

உயிர் காதல் என்றும் வரம் எனக்கு/

(எந்தன் உயிர் காதலா).


           *ரேணுகா ஸ்டாலின்*

0/Post a Comment/Comments