அன்னையர் தின வாழ்த்துக் கவிதை

 

அன்னையர் தின வாழ்த்துக் கவிதை

கோயில் எதற்கு

தெய்வங்கள் எதற்கு

நடமாடும் தெய்வம்

நீ என்னோடு இருக்கையிலே


பசி தூக்கம் தனை மறந்து

உயிர் நோகும் வலி மறந்து 

ஈரைந்து திங்கள்

இன்பமுடன் எனைச்

சுமந்து ஈன்றவளே


நான் செய்த

பெருந் தவத்தால்

எந்தன் அன்னையானவளே

என் மகளுக்கும் 

அன்னையாகி 

அரவணைத்துக் காப்பவளே


நிழலாக எனைத் தொடர்ந்து  

நித்தம் என்னை ஆள்பவளே

கலங்கரை விளக்கமென 

நல்வழிகாட்டி நிற்பவளே


எந்தன் தன்னம்பிக்கையின்

தாரக மந்திரம் நீதானம்மா

 நீயின்றி நானில்லையம்மா

எத்தனை ஜென்மங்கள் 

எனக்கிருந்தாலும்

நீயே என் தாயாகி

என்னைக் காத்திடும் 

வரம் கொடுத்திடம்மா


#அம்மா என்னும் #அழகிய #கவிதைக்கு

#அன்னையர்_தின_நல்வாழ்த்துக்கள் 💐💐💐


            ❤❤I LOVE YOU AMMA❤❤


            🌷ரேணுகா ஸ்டாலின்🌷

0/Post a Comment/Comments