பாருங்க பல்லியே சொல்லிருச்சு . . . இந்த திசையில் கத்தினால் இதுதான் பலன்

 


பாருங்க பல்லியே சொல்லிருச்சு . . . இந்த திசையில் கத்தினால் இதுதான் பலன்!

நம்முடைய வீட்டில் நாம் ஒரு காரியத்தை பற்றி பேசிக்கொண்டிருப்போம். அப்போது நம் வீட்டில் இருக்கும் பல்லி திடீரென சத்தம் போடும். அப்போது பெரியவர்கள் பாருங்க பல்லியே சொல்லிருச்சு..நிச்சயம் இந்த காரியம் நல்லபடியாக நடக்கும் என்று சொல்வார்கள். பல்லி எந்த நாளில் எந்த திசையில் சத்தம் எழுப்பினால் என்ன பலன் ஏற்படும் என பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ளது.

கிழக்கு திசையில் பல்லி சத்தம் போட்டால்

* ஞாயிறுக்கிழமை பயம்.
* திங்கட்கிழமை தன லாபம்.
* செவ்வாய்கிழமை சம்பத்து.
* புதன்கிழமை சந்தோஷம்.
* வியாழக்கிழமை அசுபம்.
* வெள்ளிக்கிழமை சுப செய்தி.
* சனிக்கிழமை நற்செய்தி தேடி வரப்போகிறது என்று அர்த்தம்.

தென் கிழக்கு திசையில் பல்லியின் சத்தம் ஒலித்தால்

* ஞாயிறுக்கிழமை தீமை.
* திங்கட்கிழமை கலகம்.
*செவ்வாய்கிழமை பந்து லாபம்.
* புதன்கிழமை தன லாபம்.
* வியாழக்கிழமை சன்மானம்.
* வெள்ளிக்கிழமை அலங்காரம்.
* சனிக்கிழமை திரவியம் என்று அர்த்தம்.

தெற்கு திசையில் பல்லியின் சத்தம் ஒலித்தால்

* ஞாயிறுக்கிழமை சுகம்.
* திங்கட்கிழமை பகை.
* செவ்வாய்கிழமை விசனம்.
* புதன்கிழமை சரீர பீடை.
* வியாழக்கிழமை தனலாபம்.
* வெள்ளிக்கிழமை பந்து வரவு.
* சனிக்கிழமை ராஜ தரிசனம். கிடைக்கப்போகிறது என்று அர்த்தம்.

தென் மேற்கு திசையில் பல்லியின் சத்தம் ஒலித்தால்

* ஞாயிறுக்கிழமை பந்து வரவு.
* திங்கட்கிழமை விரோதம்.
* செவ்வாய்கிழமை சத்துரு.
* புதன்கிழமை பந்து கஷ்டம்.
* வியாழக்கிழமை காரிய சித்தி. வெள்ளிக்கிழமை நற்செய்தி, சனிக்கிழமை ரோகம் என்று அர்த்தம்.

மேற்கு திசையில் பல்லியின் சத்தம் ஒலித்தால்

* ஞாயிறுக்கிழமை சண்டை
* திங்கட்கிழமை ராஜ தரிசனம்
* செவ்வாய்கிழமை அனுகூலம்.
* புதன்கிழமை பயணம்.
* வியாழக்கிழமை நஷ்டம்.
* வெள்ளிக்கிழமை சந்தோஷம்.
* சனிக்கிழமை ரோகம் என்று அர்த்தம்.

வட மேற்கு திசையில் பல்லியின் சத்தம் ஒலித்தால்

* ஞாயிறுக்கிழமை வஸ்திரம்.
* திங்கட்கிழமை அமங்கலம்.
* செவ்வாய்கிழமை தூரதேசம்.
* புதன்கிழமை தனநாசம்.
* வியாழக்கிழமை நற்செய்தி.
* வெள்ளிக்கிழமை கலகம்.
*சனிக்கிழமை ஸ்திரி என்று அர்த்தம்.

வடக்கு திசையில் பல்லியின் சத்தம் ஒலித்தால்

* ஞாயிறுக்கிழமை திரவியம்.
* திங்கட்கிழமை வஸ்திரம்.
* செவ்வாய்கிழமை சத்ரு பயம்.
* புதன்கிழமை கலகம்.
* வியாழக்கிழமை காரியம் நடைபெறாது.
* வெள்ளிக்கிழமை கலகம்.
* சனிக்கிழமை நற்செய்தி என்று அர்த்தம்.

வட கிழக்கு திசையில் பல்லியின் சத்தம் ஒலித்தால்

* ஞாயிறுக்கிழமை லாபம்.
* திங்கட்கிழமை கல்யாணம்.
* செவ்வாய்கிழமை வாகனம்.
*  புதன்கிழமை தோல்வி.
* வியாழக்கிழமை போஜனம்.
* வெள்ளிக்கிழமை சத்ரு பயம்.
* சனிக்கிழமை திருடர் பயம் என்று அர்த்தம்.

வீட்டின் கீழே பூமி பகுதியில் பல்லி சத்தமிட்டால்

* ஞாயிறுக்கிழமை காரிய நாசம்.
* திங்கட்கிழமை ஐஸ்வர்யம்.
* செவ்வாய்கிழமை மிக லாபம்.
* புதன்கிழமை ஐஸ்வர்யம்.
* வியாழக்கிழமை நஷ்டம்.
* வெள்ளிக்கிழமை கவனம்.
* சனிக்கிழமை காரிய சித்தி உண்டாகும் என்று அர்த்தம்.

வீட்டின் மேலே மேற்கூரையில் பல்லி சத்தமிட்டால்

* ஞாயிறுக்கிழமை ஜெயம்.
* திங்கட்கிழமை கேடு.
* செவ்வாய்கிழமை பிரயாணம்.
* புதன்கிழமை நற்செய்தி.
* வியாழக்கிழமை கலகம்.
* வெள்ளிக்கிழமை வஸ்து லாபம்.
*  சனிக்கிழமை காரியம் நடைபெறாது என்று அர்த்தம்

நாம் ஏதாவது ஒரு காரியமாக பேசிக் கொண்டிருந்தால் அந்த நேரத்தில் பல்லி சத்தம் எழுப்பினால் அது எந்த நாள் எந்த திசையில் இருந்து பல்லி சத்தமிட்டது என பார்த்து பலனை புரிந்து கொள்ளுங்கள். காரியம் ஜெயமாகும்.

0/Post a Comment/Comments