சில நாட்களில் பல கோடிகளை அள்ளி வசூல் சாதனை படைத்த பொன்னியின் செல்வன் – 2.


சில நாட்களில் பல கோடிகளை அள்ளி வசூல் சாதனை படைத்த பொன்னியின் செல்வன் – 2.

திரை விமர்சனம்

கல்கி எழுதிய இந்நாவலை நான் எனது பதின் பருவம் (teen Age) தொடங்கும் ஒரு வருடத்திற்கு முன்பே வாசித்தவன் என்ற முறையில் இத்திரைப்படைத்தை விமர்சிக்கும் உரிமை எனக்கிருக்கிறது.

(இந்நாவலை நான் முதன் முறையாக வாசித்தபோது எனக்கு பன்னிரண்டு வயது.....

ஏழாம் வகுப்பு கோடை விடுமுறையில்...

இதுவரை இந்நாவலை எத்தனை முறை வாசித்தேன் என எனக்கே தெரியவில்லை...

நிறைய முறை...

நிறைய முறை.)

அத உடுங்க... மக்களே....

இப்போ நாம இந்த பொன்னியின் செல்வன் PART II - க்கு வரலாம்

இலங்கை நாட்டில்  இருந்து தஞ்சை வரும் நிலையில்  

அருண்மொழி வர்மனான பொன்னியின் செல்வனும், வந்தியத்தேவனும் கடலில் மூழ்குகிறார்கள் 

ஊமை ராணி என்கிற ஒரு வயதான மூதாட்டி இவர்கள் இருவரையும் காப்பாற்றுவதாகச் முதல்பாகத்தை ஒரு பெரும் நிம்மதியுடன் முடித்திருப்பார்  மணிரத்னம்.

இந்த இரண்டாம் பாகத்தில் - பொன்னியின் செல்வனை ஊமை ராணி காப்பாற்றுகிறார் என்பதைக் காட்டி  மற்றொரு பக்கம் சோழர் குலத்தை பூண்டோடு அழிக்க பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளோடு இணைந்து சூழ்ச்சியில் இறங்குகிறார் பெரிய பழுவேட்டரையரின் இளைய ராணி நந்தினி. 

அச்சூழ்ச்சி அறிந்தும் கூட அதை உதாசீனப் படுத்திவிட்டு நந்தினியைத் தேடிச் செல்லும் ஆதித்த கரிகாலன்  அந்த சூச்சியில் கொல்லப்படுகிறான் . 

ஆதித்தனைக்  கொன்றது யார்?

வந்தியதேவன் மீது குந்தவை  கொண்ட காதல் என்ன ஆனது...?

உண்மையில் நந்தினி என்ற பெண்மணி யார்? 

பொன்னியின் செல்வனைக் காப்பாற்றிய ஊமை ராணி என்ற அந்த மூதாட்டி யார்? 

என்பது போன்ற பல  கேள்விகளுக்கு விடை சொல்ல வந்திருக்கிறது  பொன்னியின் செல்வன் 2

சில பல  இடங்களில் திரைக்கதை மெதுவாக நகருவதுபோல் ஒரு உணர்வு நமக்கு ஏற்படுவதைத் தவிர்க்கவே  முடியவில்லை என்றாலும் வரலாற்றின் கதையையும் அந்தக் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் நாம்  முழுமையாக உள்வாங்க வேண்டும் 

ரசிக்க வேண்டும் என்பதற்காக  பல  முக்கியத்துவம் இந்த இரண்டாம் பாகத்தில் கொடுக்கப்பட்டிருப்பது உண்மையில் பாராட்டுக்குரியது.


கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை அந்தப் புத்தகத்தை பலமுறை பலமுறையாக என்னைப்போல் வாசித்தவர்கள் அனைவரும் நாவலில் கல்கி சொன்னதை எப்படி நீங்கள் மாற்றலாம், அதை எப்படி மாற்றி அமைக்கலாம்  என பெரும் சண்டையையே போட்டுக் கொண்டிருந்தார்கள்...

இந்த இரண்டாம்  பாகத்தில் அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியே காத்திருக்கிறது எனச்சொன்னால் அது மிகையில்லை...

சில பல கதாபாத்திரங்களை இயக்குனர் மொத்தமாய் நீக்கியே விட்டார்.

சில கதாபாத்திரங்களின் முடிவை மாற்றியே விட்டார்.

துணிச்சலாக பலத்தையும் செய்திருக்கிறார்கள்...

துணிச்சலாக பலதையும் மாற்றியிருக்கிறார்கள்...

மூன்று மணி நேரம்  ஓடும் ஒரு திரைப்படத்தில் எப்படிச்  சொன்னால் கல்கியின் நாவலைப் படிக்காமல், 

இந்தத் திரைப்படம் பார்க்க வரும் ஒருவனுக்குப் புரிய வேண்டுமோ'

அதை மட்டுமே வைத்து அது தொடர்பான சில காட்சிகளை வைத்து இரண்டாம் பாகத்தின் திரைக்கதையை மெனக்கிட்டு எழுதியிருக்கிறார்கள்.

நாவலைப் படிக்காமல் இருக்கும்  ரசிகனை மிகவும்  குழப்பாமல், 

அதே நேரத்தில் , 

கல்கி எழுதிய புத்தகத்தில் இல்லாத  சில வினாக்களுக்கு பல இடங்களில்  தெளிவாகவும் பதில் சொல்லியிருக்கிறார்கள். 

குறிப்பாக -

அரசர் சொல்லும் பொய் அரசியல் எனப்படும்.

பேராசைதானே அரசர்களுக்கு அழகு - போன்ற ஜெய மோகனின் வசனங்கள் செம்ம....

ஆதித்த கரிகாலன் என்கிற நாவலின் மிக முக்கியமான கதாபாத்திரனாமானது தாம் தன் காதலியைச் சந்திக்கும் இடத்தில் நிறைய நிறைய நிதானத்தையும்...

தம் தம்பியான அருண்மொழி வர்மனைச் சந்திக்கும் இடத்தில் நிறைய நிறைய பாசத்தையும்...

தம் சோழ தேசம் காக்க விட்டுக்கொடுக்கும் உயரிய இடத்தில் பொறுமையையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் விக்ரம் என்கிற அந்த மகா கலைஞன்.

இப்படிபட்டக் காட்சிகளினாலே 

இதனாலேயே இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனைக் நாம் சற்று கூடுதலாக ரசிக்க முடிகிறது என்றால் அதை படம் பார்த்தவர்கள் நிச்சயம் உணர முடியும்.

மன்னர்  சுந்தரச்சோழர் குந்தவையிடம் ஊமை ராணி குறித்து அவர் சொல்லும் காட்சியின் காட்சிகளில்  ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சிறப்பாகவே கைதட்ட வைத்திருக்கிறார்..

மன்னர்  சுந்தரச்சோழரைக் கொல்ல எதிரிகளாகின பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் சுரங்கப்பாதைக்குள் உள்ளே செல்லும் காட்சி முழுவதும் பெரும்  சவாலாக இருந்தாலும் - ஒளிப்பதிவில் சும்மா காட்டு காட்டுன்னு காட்டியிருக்கிறார் ரவி வர்மன்.

நமது சங்க இலக்கிய புறநானூற்றுப் பாடலான இளையோர் சூடார -  பாடல், திரையில் ஒரு அற்புதமானச் சூழலுக்கு அந்த சங்கத்தமிழ் பாடலை எப்படிப் நாம் இந்த திரைக்கதைக்கு பயன்படுத்தி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறப்பாகவே அந்த காட்சிகள் அமைந்திருக்கிறது.

இந்தக் காட்சியை அமைத்தது யாராகிலும் என் பாராட்டுகள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த 

பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார்...?

என்பவை எல்லாம் முன்னர் வந்த ஒரு வினாதான் . 

ஆனால் - இப்போது 

ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் யார்...?

என்ற கேள்வி என்பது கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் வெளியான நாள் தொடங்கி இன்று முதல் இருக்கும் ஒரு மாபெரும் கேள்வி. 

அந்த ஒரு  கேள்விக்கான ஒரு பதிலை கவித்துவமாக சொன்ன பொன்னியின் செல்வன் படைப்பில் , 

இதை - இந்த நாவலை எவருமே  திரைப்படமாக  எடுக்க முடியவே முடியாது என கடந்த ஐம்பது ஆண்டுகளாக மிகவும் பிரமிப்பாக நம்மிடையே இருந்த அந்த பொன்னியின் செல்வனின் திரைக்  காவியத்தை செம்மையாக நிகழ்த்திக் காட்டியதற்காகவும் , 

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் இரண்டை நாம் ஒருமித்துப் பார்த்தோமானால் நிறையவே மனதார நாம் ரசிக்கலாம்.


கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் - நாவலில் பலதும் தகவல்களாக மட்டுமே நமக்குச் சொல்லப்பட்டிருக்கும்.

ஆதித்த கரிகாலனுக்கும் நந்தினிக்கும் இடையிலான அந்த இளமைப் பருவக் காதலை, 

அழகான சில காட்சிகளாக்கி இந்த இரண்டாம் பாகத்தை மிகச் சிறப்பாகவே படத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். 

சோழர் குலத்தை எதிரிகள் பழிவாங்குவதில் தொடங்கி

நந்தினிக்குள்  இருக்கும் மீதி வன்மமும்,..

கதையின் பிற்பகுதியில் கடம்பூர் அரண்மனையில் நம் ஆதித்த கரிகாலனுக்கும், 

வில்லி - நந்தினிக்கும் இடையிலான அந்த உணர்ச்சிப் பரிமாற்றமும்

மிக மிக வலுவானத் தாக்கம் செலுத்துவதற்கும் இக்காட்சிகள் மிகவும் அட்டகாசமாய் உதவியிருக்கின்றன.

அதிலும் நந்தினி 

என்னால முடியாத எதுவும் உன்னாலயும் முடியாது போடா...

என்று ரவிதாசனிடம் அவர் அழுத்தமாக சொல்லும் அந்த இடம், 

அந்த ,நந்தினிப்  பாத்திரத்தின் தன்மையை நமக்கு விளக்க ஒரு மாபெரும் காட்சி.

அடுத்ததாகச் சொல்லவேண்டுமென்றால் -

வந்தியத்தேவன் - குந்தவை காதல் காட்சிகள். 

இயக்குனர் - மணிரத்னத்தின் இளமை என்பது அன்று தொட்ட மௌன ராகத்திலிருந்து இன்னமும் துளியும் குறையவில்லை என்பதை மிக அழகாக உணர்த்துகின்றன பல காட்சிகள்....

நம்ம வந்தியத்தேவன் பழுவேட்டையர்களால் சிறைபிடிக்கப்பட்டு அவனுடைய கண்ணைக் கட்டி வைத்திருக்கும்போது, 

குந்தவை அவனைச் சந்திக்கும் அந்தக் காட்சியும்... 

அதைத் தொடர்ந்து வரும் பாடலான அக நக - பாடலும் 

அடடா -

இது - மிகச்சிறந்த காதல் ஒரு காட்சிகளில் ஒன்றாக வரும் காலத்தில் இடம் பிடிக்கும். 

இந்தக் காட்சி நடைபெறும்  இடம்...

அந்தச் சூழல்... 

கேமரா அமைத்தக் கோணம் - என 

அனைத்துமே ஒரு கவித்துமான அழகு.

அந்த இடம் செம்ம....

காலஞ்சென்ற நம்ம கல்கி அவர்கள் தாம் எழுதிய கதையில் இல்லாத பல செய்திகள் இல்லாத பல தகவல்கள் இந்த இரண்டாம் பாகத்தில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. 

கல்கி அவர்கள்  சொல்லாமல் விட்ட பல தகவல்களை, சோழர் வரலாற்றுத் தகவல்களின் துணைகொண்டு பல இடங்களில்  நிரப்ப முயன்றிருக்கிறார்கள் என்பது நிறையவே தெரிகிறது....

பல கற்பனைக் காட்சிகளையும் ஆங்காங்கே சேர்த்திருக்கிறார்கள். 

பொன்னியின் செல்வன் - கதையின் அந்தத் தொடர்ச்சி தம் திரைக்கதையில் விடுபடாமல் இருப்பதற்கு இந்த உத்தியை அவர்கள் பயன்படுத்தியிருப்பதாகப் படம் பார்க்கும் நாம் நன்றாகவே புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால்-

ஆனால்-

பொன்னியின் செல்வன் - நாவலை படித்தவர்கள் அதை - அப்படியே எதிர்பார்த்து திரையரங்கம் செல்பவர்கள்  இந்த படத்தின் பல மாற்றங்கள் சற்று ஏமாற்றம் அளிக்கலாம் என்றால் அது மிகையில்லை.

கல்கி அவர்கள் தாம் எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில்  அதில் இல்லாத ராஷ்ட்ரகூடர்களுடனான இறுதிப் போர்க்காட்சி என்பது

பாகுபலி’ என்ற படத்தின் பாதிப்பில் அதன் பிரமாண்டத்தை தானும் தம் படைப்பில் 

வைக்கவேண்டும் என்று வைக்கப்பட்டிருப்பதாகவே நாம் உணர முடிகிறது.

ஆனால் - இறுதியில் யார் சோழ மணிமுடி ஏற்கிறார் என்பதை நாவலிலிருந்து சற்று கொஞ்சம் மாறுபட்டு சற்று கொஞ்சம் - நாம் படித்த வரலாற்றுக்கு கொஞ்சம் நெருக்கமாகவும் மணி ரத்தினம் அமைந்திருக்கிறார்கள்.

ஆனால் -

ஆனால்-

அடடா....

தமக்கு எல்லாம் கடந்தப் பின்னும் 

எஞ்சியிருக்கும் அவளுடையக் காதலுக்காக தனக்குத்தானே மனதோடு போராடும் அந்த நொடியில் நடிப்பில் நம்மையெல்லாம் வென்றுவிடுகிறான் அந்த ஆதித்த கரிகாலன்.

எரியும் அத்தனை விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு இருள் அங்கே கொஞ்சம் கொஞ்சமாய் அந்த அறையை விழுங்க ஆரம்பிக்கும் நேரத்தில்  அந்த பட்டத்து இளவரசன் அணைந்த ஒளியின் இருட்டிலும் அந்த நந்தினியின் முன்பு ஆதித்தன்  நம்மை முழுவதுமாய் ஆட்கொள்கிறான்....

(இப்படிப்பட்ட ஒரு காட்சியமைப்பு இனி எந்தத் திரைப்படத்திலும் வர வாய்ப்பே இல்லை....)

ஆதித்த கரிகாலன் தாம் கொண்ட 

வீரத்தையும் , விரக்தியையும் தமது கண்களிலேயே அசாத்தியமாக கலக்கலாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நந்தினியுடன் அவன் உணர்ச்சிகரமான நீண்ட அந்த உரையாடலை சொல்லும்  அந்தக் காட்சி, தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்கர்களில் இவனும் ஒருவன்   என்று நம்மை அப்பட்டமாகவே உணர வைக்கிற அந்தக் காட்சி.

இந்தக் காட்சியில் நடித்த அவன்  பெயர் சொல்லும். மிகவும் பிரமாண்டமான அந்தக் கடம்பூர் மாளிகையின் ஒளிவிளக்குகள் சூழ்ந்த வஞ்சகம் சூழ்ந்த  அந்த அறையில் வன்மத்துடன் வாளுடன் நிற்கும் காதலி நந்தினியிடம் தன் உயிரை துச்சமென தாம் எண்ணி ஆதித்த கரிகாலன் நந்தினியிடம் பேசும் அந்தக் காட்சியும், 

அதற்காக ரவிவர்மன் ஒளிப்பதிவு தூரிகையால் தீட்டியிருக்கும் அந்த ரம்மியமான காட்சிகளும் 

பின்னணியில் ‘சின்னஞ் சிறு நிலவே - பாடலின் ஒலிப்பதியுவும் 

அதை சேமித்த ஒளிப்பதிவும் மிக மிக  அற்புதமானவை...

இதை 

படம் பார்த்த ஒருவரால்தான்

ஒப்புக்கொள்ள முடியும்...

ஏனெனில்- 

ஒளிப்பதிவாளரின்

மிக ரசனையான ஒரு பதிவு இது.

இந்த இரண்டாம்  பாகத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை 

நம் - ஆதித்த கரிகாலன் - நந்தினியின் காதல் நிரம்பவே நிரம்பியிருக்கிறது

அந்த - அக நக - , 

சின்னஞ்சிறு நிலவே - பாடல் தேவையான சில பல அளவில் ஒலித்து தம் அட்டகாசமானப் பின்னணி இசையில் ஏ.ஆர்.ரஹ்மான் நம் மனதுக்குள் பல  வீணை வாசித்திருக்கிறார்.

வசனம் எழுதிய ஜெயமோகனின் பல வசனங்கள் திரைக் கதைக்குப் பொருத்தமாக இருக்கின்றன என்றால் அது மிகையில்லை...

ரவிவர்மனின் ஒளிப்பதிவு பல காட்சிகளைக் நாம் உணராத போதே அதை கவிதைகளாக்கி 

நெஞ்சில் தவழ விட்டிருக்கிறது...

அரண்மனைக் காட்சிகள் 

போர் காட்சிகள் 

சண்டைக்   காட்சிகள் 

சிறிய பல  கடைவீதிகள் 

எனச் சுருங்கி 

பார்க்கும் நமக்கு பல தூக்கங்களைத் தராமல், 

நாகை -  புத்த விஹாரம், 

சதுப்புநிலக்காடுகளில் உள்ள அழகான ஓடைகள், 

அவற்றின் ஊடே பல காட்டுப் பகுதிகள், 

திருவிழா சந்தை - என 

வெவ்வேறு பல  இடங்களில் இந்தப் படத்தின் பல காட்சிகள்  படமாக்கப்பட்டிருப்பது பார்க்கும் ரசிகனுக்குக் கொஞ்சம் சுவாரஸ்யத்தைத்  தருகிறது.

ஒவ்வொரு காட்சியிலும் நம் ஒளிப்பதிவாளர் அவர்களும் 

இசையமைப்பாளர் அவர்களும் 

கலை இயக்குநர் அவர்களும் 

இணைந்து ஒரு - கூட்டு உழைப்பைக்  கொடுத்தது நமக்கு நன்கு வெளிப்படுகிறது.

ஒரு  முரண்பாடு என்னவென்றால்

நமது சோழ அரச குடும்பமே இங்கே பெரும் ஆபத்தில் இருக்கிறது, நமது இளவரசர்களே பயந்து பயந்து பல இடங்களுக்கும் தாம் பயணிக்கும்போது, ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரம் மட்டும் ஆங்காங்கே எந்த பயமும் இல்லாமல், 

எந்தக் காரணமும் இல்லாமல், 

எந்த இடையூறும் அவர்களுக்கு இல்லாமல் 

படத்தில் வரும் எல்லாக் காட்சிகளிலும், 

எல்லா இடங்களிலும் குறுக்கும் நெடுக்குமாக  வந்து போகிறார். 

அவர் - எதில் பயணிக்கிறார் என்பது படம்பார்த்த எனக்கே தெரியவில்லை. 

அடுத்ததாக -

பொன்னியின்  செல்வர்  

மதுராந்தகனுக்கு முடி சூட்டும்போது 

நாம் இந்த பாரத தேசம் முழுதும் கைப்பற்றவேண்டும்   என சபதம் இடுகிறார்.

ஏனெனில் -

மதுராந்தகன் முடி சூடும் நாளில் பாரதம் என்ற பெயர் எப்படி வந்திருக்க  முடியும்...

இதில் சற்று எனக்கு இடர்பாடு.

ஆனால் -

இதையெல்லாம் விலக்கிவிட்டுப் பார்த்தோமானால்

இந்த பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்

மிக 

அற்புதமான ஒன்றுதான்.


ஆதித்தனின் நண்பன் பார்த்திபேந்திர பல்லவன், 

மற்றும் 

பட்டத்துக்கு உரிய மதுராந்தகன் ஆகியோரின் சில பல மனமாற்றங்களுக்குக் சொல்லிக்கொள்ளும்படியாக பல காரணங்கள் இருந்தாலும், அதற்கு ஏற்ற அழுத்தமான காட்சிகள் இதில் இல்லை. 

போர் என்பது  பிரதானம் என்ற திரைக்கதையின் அவசரப்போக்கு,  மீறல்கள் எனப் பயணித்து படத்தின் சண்டைக் காட்சிகள்.

அதன் பிறகு வரும் உணர்வுபூர்வமான அந்த பொன்னியின் செல்வனின் முடிசூட்டு விழாவைச் சம்பிரதாயச் சடங்காக காட்சிகள் மாற்றிவிடுகின்றன. 

அருண் மொழியின் அந்தத் தியாகமும், 

அவன் எடுத்த அந்த முக்கிய முடிவும் 

படம் பார்த்த அந்தப் பார்வையாளர்களுக்கு இது எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

எந்த வரலாற்று நிகழ்வின் நினைவையும் ஏற்படுத்தவில்லை.


ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் -

பொன்னியின் செல்வன்  -  

என்ற இந்த இரண்டாம் பாகம்\

ஆதித்த கரிகாலனுக்கும் – நந்தினிக்குமானது.

விமர்சனம்,

செல்வா ஆறுமுகம்,

#கோவாலு

எழுத்தாளர்,

சென்னை .

0/Post a Comment/Comments