ஹைக்கூ போட்டி எண் - 122 ன் வெற்றியாளர்கள் ஹைக்கூ கவிதைகள்
1. இளைப்பாற நிழல்
தேடி அலைகிறான்
மரம் வெட்டுபவன்
ஓசூர் மணிமேகலை
2. வெட்டப் பட்ட மரம்
ஆற்றில் மிதக்கிறது
மீனவனின் படகு
ச.ரமேஷ் பாபு
3. மரம் வெட்டியவனுக்கு
மூச்சுத் திணறல் அதிகமாகிறது
பிராணவாயு பற்றாக்குறை
கவியருவி ஜோதிபாரதி
4. வெட்டப்படும் மரம்
கீழே விழுகிறது
பறவையின் கூடு
மலர் மைந்தன்
5. தாயன்பின் சிறப்பு
தெளிவாகத் தெரிகிறது
மரத்தின் நிழல்
சென்னிமலை அ.சீனிவாசன்
6. வெட்டப்பட்ட மரம்
ஓசையுடன் அசையும்
கூடிழந்த பறவைகள்
Dr ஜலீலா முஸம்மில்
7. கூரிய கோடாரி
பட்டுத் தெறிக்கிறது
சூரியக் கதிர்
வ பரிமளாதேவி
8. வெட்டப்படும் மரம்
கூச்சலிடுகின்றன
கூடுகளில் பறவைக்குஞ்சுகள்
அருணா ரகுராமன்
9. மரத்தின் இலைகள்
ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன
வெட்டப்பட்ட துகள்கள்
பா.இராமர்
10. மரம்
ஓங்கி வெட்டப் படுகின்றது
மனிதனுக்கு குழி
யோ. யேசு யுயேனியன்
11. தச்சரின் கைவண்ணம்
நுணுக்கமாக உணர்த்துகிறது
இயற்கைப் பாதுகாப்பு
கவிஞர் கவிதா அசோகன்
12. பசுமை புரட்சி
பிரசாரத்திற்கு நிதிவழங்குகிறார்
கோடரியுடன் வியாபாரி
13. வெட்டப்பட்ட மரத்தின் துகள்கள்
சிதறிப் பறக்கின்றன
இளைப்பாறிய பறவைகள்
த. நரேஸ் நியூட்டன்
14. கிளை இழந்த மரத்தை
வெட்டியதும் தெரிகின்றது
மரத்தின் வாழ்நாள்
பாண்டிச்செல்வி கருப்பசாமி
15. மண்ணினை வேர்கள்
இறுக்கமாய் பிடித்திருக்கின்றன
கோடாரியைக் கைகள்
கோவை ஆறுமுகம்
16. மரத்தின் கனி
குழந்தை பசியாற பயன்படுகிறது
தாய்ப்பால்
கோட்டீஸ்வரி ராமசாமி
17. மரம்வெட்டியின் ஓங்கிய கை
கோடரியின் பிடியைத் தளர்த்துகிறது
சுட்டெரிக்கும் வெயில்
நாகலெக்ஷ்மி இராஜகோபாலன்
18. மரத்தின் கிளைகள்
வீழ்ந்து கிடக்கின்றன
பறவையின் இறகுகள்
மகேஸ்வரி கிருஷ்ணசாமி
19. மரம்வெட்டி மனிதன்
தவறாமல் கலந்துகொள்கிறான்
மழைக்காக பிரார்த்தனை
குறிஞ்சி நைனாமுகம்மது
20.வெட்டப்பட்ட மரம்
எங்கு சென்றிருக்கும்
அந்தப் பட்டாம்பூச்சி
Dr.சிவகாமசுந்தரி நாகமணி
21. மரத்தின் வேர்
மிகவும் உறுதியுடன் இருக்கிறது
வெட்டும் கோடாரி
மு.சு.பொன்.வீட்டாத்தாள்
22. மரம் வெட்டியை
யோசிக்க வைக்கிறது
வெப்பத்தின் தாக்கம்
கவிச்சிகரம் சாக்கை.பொன்னழகு
23. கோடாரியின் வீச்சு
காடு முழுதும் எதிரொலிக்கிறது
பறவைகளின் சப்தம்
தேவேந்திரன் சாமி
நடுவர் - கவிஞர் கவிநிலா மோகன் அவர்கள்
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்
Post a Comment