தேநீர்
பார்த்ததும்
கைப்"பற்றிக் கொள்ள
கைகள் துடிதுடிக்கும்
இதழோடு
ஒன்றிணைத்துக் கொள்ள
ஏக்கம் பெருக்கெடுக்கும்
உடலோடு உயிர் போல
உமிழ்நீரோடு ஒன்றிணைந்து
மெல்ல மெல்ல உள்ளிறங்கி
தொண்டைக்குழிக்குள்
செல்லச் செல்ல
உற்சாகம் ஊற்றெடுக்கும்
சோம்பலைத் துரத்தியடிக்கும்
இத்தனை இன்பங்களை
அள்ளிக் கொடுத்து
உதட்டோடு உறவாடும்
கோப்பை நிறை தேநீரின்
இன்பம் போலே
வேறு எதிலுமுண்டோ!!
தேகம் நோக உழைத்து களைத்த
பொழுதுகளி லெல்லாம்
தேனீரே தேவாமிர்தமாய் பருகி
தன் அன்றாட பணிகளை
அழகாக நகர்த்திச் செல்லும்
அனைவருக்கும் என் இனிய
#உலக_தேநீர்_தின_வாழ்த்துகள்
*ரேணுகா ஸ்டாலின்*

Post a Comment