எளிய முறையில் ஆழமாகவும், அழுத்தமாகவும் மனதில் பதிந்து மயக்கிடும் அற்புதம் ஹைக்கூ

 

வாழ்த்துரை

புதியவர்களுக்கும் அங்கீகாரம்

       அனைவருக்கும் வணக்கம், அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழாவை சிறப்பிற்கும் விதமாக அமெரிக்கா ஹைக்கூ பேரவையின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகள் இடம்பெற்றுள்ள தொகுப்பு நூல் வெளியிடப் படுவது உள்ளபடியே மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தருகின்றது. 

         புதிதாக ஹைக்கூ எழுதும் கவிஞர்களுக்கு இது ஒரு அங்கீகாரமாக அமைவதுடன் அவர்களின் கவிதைகள் உலக அரங்கிற்க்குள் கொண்டு செல்லப்பட்டு அவர்களை அனைவரும் அறிந்திட செய்திடும். 

      இப்படியான சிறப்பான நூல் வெளியீடு செய்வதற்கு பேருதவி செய்து கொண்டிருக்கும் அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவையின் நிறுவனர் ஐயா உதய நேசன் அவர்களுக்கும்  

         ஹைக்கூ பேரவையை சிறப்பாக வழிநடத்தி சிறப்புமிக்க ஹைக்கூ தொகுப்பு நூல் வெளியீடு செய்வதற்கு அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கும் அன்புச் சகோதரி ரேணுகா ஸ்டாலின் அவர்களுக்கும் நூல் தொகுப்பில் மிகச் சிறப்பாக பணியாற்றிய ஹைக்கூ ஆசான்களுக்கும் நூலில் இடம் பெற்றுள்ள கவிஞர்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

                        என்றும் வாழ்த்துகளுடன்,          

                           கரு.கிருஷ்ணமூர்த்தி

                            உடுமலைப்பேட்டை


0/Post a Comment/Comments