ஹைக்கூ போட்டி 132ன் ஹைக்கூ வெற்றியாளர்கள் ஹைக்கூ கவிதைகள்
1. செருப்புத் தைப்பவர்
இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறார்
பசிக்கும் வயிற்றை
பிரேமா ரமணி
2. காலணி செப்பனிடுதல்
குறைந்து வருகிறது
முதியவரின் வருமானம்
முனைவர் கண்மணி கண்ணன்
3. தைக்கும் ஊசி
மிகவும் கூராக இருக்கிறது
முதியவரின் பார்வை
தி.ஸ்ரீராமன்
4. கிழிந்த காலணிகள்
இன்னும் சரிசெய்யப்படவில்லை
தொழிலாளியின் வாழ்க்கை
சிவராமன்
5. அறுந்த மிதியடிகள்
வறுமையைப் பறைசாற்றுகின்றன
முதியவரின் உடைகள்
வள்ளல் இராமமூர்த்தி
6. தோலில் இறங்கும் ஊசி
எளிதாக வெளிப்படும்
தொழிலாளியின் திறமை
பொம்மிடி மோகன்தாஸ்
7. பிய்ந்த செருப்புகள்
பசியைப் போக்கிடும்
கடின உழைப்பு
சேனைத் தமிழன்
8. வாரறுந்த காலணிகள்
அதிகமாக இருக்கின்றன
செருப்பில் தையல்கள்
கோவை ஆறுமுகம்
9. பெரியவர் வருமானம்
மிகவும் குறைந்து வருகிறது
காலணி சீர்செய்தல்
செண்பக ஜெகதீசன்
10. தைக்கப்பட்ட செருப்பு
நீண்ட நாள் பயன்படுத்தப்படுகிறது
முதியவரின் ஊன்றுகோல்
சோ.ஸ்ரீதரன்
11. அறுந்த காலணி
நம்மை வருந்தச் செய்கிறது
தைப்பவரின் வாழ்வியல்
பெருநில வேந்தன்
12. கைத் தொழில்
இறுதி வரை தொடரும்
ஏழையின் வறுமை
கே.கல்பனா
13. அறுந்த செருப்பு
தைத்து முடித்ததும்
நகர்கிறது வாழ்க்கை ஓட்டம்
ச.இராஜ்குமார்
14. அறுந்த கால்மிதி
பழுது பார்க்கப்படுகிறது
அன்றாடம் வறுமை
எம்.சீனி இப்ராஹிம்ஷா
15. தைக்கும் காலணி
கால் வயிற்றை நிரப்பும்
அரசின் உதவி
ஆ.முருகேஸ்வரி
நடுவர் கவிஞர் கரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்
அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்

Post a Comment