சமையல் டிப்ஸ்
#வாழை_இலை_அல்வா
#தேவையான_பொருட்கள்
1. வாழை இலை – 2 (இளசாகவோ, முற்றியதாகவோ இல்லாமல் நடுத்தரமானதாக பார்த்துக் கொள்ளுங்கள்)
2. சோள மாவு – கால் கப்
3. சர்க்கரை – கால் கப்
4. முந்திரி – தேவையான அளவு
எலுமிச்சம் பழச்சாறு – 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – கால் டீஸ்பூன்
நெய் – 6 டேபிள் ஸ்பூன்
#செய்முறை
* இரண்டு வாழை இலைகளையும் எடுத்து நன்றாக சுத்தப்படுத்தி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
* அவற்றை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு ஊற்றி விழுதாக அரைக்கவும்.
* அந்த விழுதை நன்றாகப் பிழிந்து
சாறாக எடுத்துக் கொள்ளவும்.
* அதன்பின் அடுப்பில் கடாய் வைத்து, சிறிது நெய் ஊற்றி சூடானதும் அதில் முந்திரியைப் போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
* அதே கடாயில் மேலும் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், வாழை இலை சாற்றை ஊற்றி பச்சை வாசம் போகும் வரை கிண்டவும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் சோள மாவுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைக்கவும்.
* கரைத்த சோள மாவினை வாழை இலை சாற்றோடு ஊற்றி கட்டிகள் விழாமல் கிளறவும். பின்னர் ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாகக் கிளறவும்.
*இறுதியாக அதில் சிறிது சிறிதாக நெய்யை ஊற்றிக் கிளறி, கடாயில் ஒட்டாமல் வரும் பதத்தில் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
* இந்த அல்வாவை நெய் தடவிய தட்டில் கொட்டி, வறுத்த முந்திரியை மேலே தூவி அலங்கரிக்கவும்.
இப்போது சூப்பரான வாழை இலை அல்வா ரெடி.
Post a Comment