ஒவ்வொருவரின் வாழ்விலும் முதல் Hero யாரு?? அவர் சொல் கேட்காதோர் வாழ்க்கை Zero பாரு

 


#தந்தை_நம்மின்_தெய்வம்

அறுசீர் விருத்தம்  (சீர் வரையறை - மா மா காய்) 

உலகம் முழுதும் புகழ்ந்திடவே

உன்றன் அன்பே அரணாகும்/

விலகா  தெனக்குப் பசியாற்ற

வியர்வைத் துளியை  சிந்தியுமே/

சிலநாள்  சிந்தைத் தெளிவற்ற

சிறுபெண் யென்னைச் சீர்படுத்தும்/

மலர்ந்த மனிதன் நீதானே

மகிழ்ந்து நீயும்  வாழ்த்திடுவாய்/

எண்ண முடியா ஓட்டங்கள்

எடுத்தாய் நீயே வல்லவனே/

வண்ணம்  முழுதும் மகிழ்ந்திடவே

வரங்கள் நூறு தந்தவனே/

பண்ணால் உனையே பாடுகின்றேன் 

பாரில் நின்போல் யாருண்டு/

மண்ணில் தந்தை யுன்அன்பே

மனத்தில் இருந்து வேண்டுவதே/

என்றன் உயர்வை ரசித்திடவே

ஏக்கங் கொண்ட தூயவனே/

அன்று சொல்லைக் கேட்டதனால்

அமைதி தானென் வாழ்வினிலே/

பன்னாள் யென்னை வளர்த்திடவே

பாசம் வைத்த பிறைநிலவே/

அன்பின் உறவாய் யுனைப்போல

அகிலம்  தன்னில்   யாருமுண்டோ!!


                   *ரேணுகா ஸ்டாலின்*

0/Post a Comment/Comments