ஹைக்கூ போட்டி எண் 127ன் வெற்றியாளர்கள் ஹைக்கூ கவிதைகள்
1. மேலெழும்பும் சூரியன்
மெல்ல மெல்ல விலகும்
மரத்தில் பனித்துளி
நாகலெக்ஷ்மி இராஜகோபாலன்
2. ராட்சத அலை
மேலெழும்பி வருகிறது
உதய சூரியன்
கவிஞர் கவிதா அசோகன்
3. அந்திச்சூரியன்
மறைந்து கொண்டு செல்கிறது
மீனினம்
யோ.யேசு யுயேனியன்
4. அலைகடல்
ஆர்ப்பரித்து வருகிறது
மிதக்கும் கப்பல்
சுமி முருகன்
5. கடல் அலை
அங்குமிங்கும் அசைந்தபடியே
மரத்தின் நிழல்
ம.பழனிச்சாமி
6. மேல் எழுந்த அலை
மெல்ல கீழே விழுகிறது
மரத்தின் இலை
பா. இராமர்
7. மாலைச் சூரியன்
தகதகவென ஒளியாய்
குளத்து நீர்
Dr.சிவகாமசுந்தரி நாகமணி
8. சூரிய வெளிச்சம்
புத்துணர்வு அளிக்கிறது
கடலலையில் குளியல்
மு.சு.பொன் வீட்டாத்தாள்
9. கடல் சீற்றத்தில் அலை
வேகமாய் மேலெழும்பி மறைகிறது
ராட்சத சுறா
கவிஞர் கோவை ஆறுமுகம்
10. அலையின் வேகம்
அதிகமாக இருக்கிறது
நீரின் அளவு
ச.கோட்டீஸ்வரன்
11. மேலெழும்பும் அலையில்
துள்ளிக் குதித்திடும்
மீனவச் சிறுவன்
பாண்டிச்செல்வி கருப்பசாமி
12. உதிக்கும் சூரியன்
எதிர் திசையில் நகர்கிறது
அலையில் மீன்
அ. நாராயணசாமி
13. அந்திநேரக் கடற்கரை
பேரமைதியைத் தருகிறது
தேவாலயத்தின் மணியோசை
கோ.கார்த்திகா கண்ணன்
14. சுழலும் அலைக்குள்
கலங்கித் தெளிகின்றது
அந்திச் சூரியன்
ம.ஞானசம்பந்தன்
15. முழுமதி இரவு
பரவசமாய் இருக்கிறது
உயரும் கடலலை
கலாராணி லோகநாதன்
16. கடல் அலை
சுழன்று கொண்டே வருகிறது
கரையில் நுரை
தேவேந்திரன் சாமி
17. கடலில் படகு
அலையில் தத்தளித்தும் மூழ்கவில்லை
மரத்தின் பிம்பம்
ச.ரமேஷ் பாபு
நடுவர் கவிஞர் கவி நிலா மோகன் அவர்கள்
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்

Post a Comment