ஹைக்கூ நூல் விமர்சனம் (ச.இராஜ்குமார்)

 


நூல் விமர்சனம்

நூலின் பெயர் : உக்ரைனிலிருந்து கடைசி விமானம் 

நூலாசிரியர் : ஷர்ஜிலா பர்வின் யாகூப்

நூலின் விலை : 60 

நூல் வெளியீடு : அகநி பதிப்பகம்

அகநி வெளியீடாக வந்திருக்கும்  உக்ரைனிலிருந்து கடைசி விமானம் ஹைக்கூ நூல் எல்லோரிடமும்  மிகவும் நல்ல வரவேற்ப்பை பெற்ற நூல் ..


     என்ன வேண்டுதலோ? 

     கோயில்மணியை அடித்தபடி 

     மழைக்காற்று .....!


முதல் கவிதையிலே கவிஞர் நம் மனதில் மணியை அடிக்க செய்கிறார் ..

இதுபோன்ற நல்ல கவிதையை வாசிக்கின்ற பொழுது நம் சிந்தனையிலும் ஒரு மணி அடிக்கத்தானே செய்யும் ...


          சோற்றுக்குக் கரையும் காகம் 

          எப்படிச் சொல்வேன் 

          என் பட்டினியை ....!


பசியும் பட்டினியும் மட்டும் ஒரு மனிதனுக்கு வரவே கூடாது 

வந்தாலும் அதை யாரிடமும் சொல்வதில்லை 

காரணம் ஏழ்மை ... 

அந்த ஏழ்மையின் வெளிப்பாடாக இந்த கவிதை மூலம் தன் பட்டினியை வெளிப்படுத்தாமல் வெளிப்படுத்தியிருக்கிறார் கவிஞர் ...

மனிதனாக பிறந்த ஒருவன் ஒருவேளையாவது அவன்  பட்டினியை உணர்ந்திருப்பான் நானும் பட்டினி கிடந்ததுண்டு அந்த சமயம் நான் கவிதையை எழுதவே ஆரம்பிக்காத காலம் அது இப்போது இந்த கவிதையை படித்ததும் எனக்கு அந்த பட்டினியாய்  கிடந்த நினைவுகள் ஞாபகம் வருகிறது ...


 தூறல் விழ 

கண்ணாடிச் சன்னலில் 

புழுதி ஓவியம் ...!


  ஒரு ஓவியக் கலைஞன் ஒரு ஓவியத்தை வரைய எவ்வளவு கஷ்ட்டம்

எவ்வளவு மெனக்கெடலோடு வரைகிறான் .. 

ஆனால் இந்த தூறல் மழை  தூசிபடிந்த கண்ணாடியில் எளிதில் பல ஓவியத்தை வரைந்து செல்கிறது ...! 


காட்டுவெளி 

மகளின் விரல்கள் பின்தொடரும்

நத்தைப் போன பாதை ...!


விளையாட்டு குழந்தைகள் பட்டாம்பூச்சியை பின்தொடர்ந்ததுண்டு 

ஆனால் நத்தையின் பின் பயணித்ததில்லை ..

ஏனெனில் நத்தை ஆமையைவிட மெதுவாகத்தான் நகரும் ..அவ்வளவு பொறுமை குழந்தைகளுக்கு இல்லை ..

ஆனால் நாங்கள் 90 களில் பிறந்தவர்கள் மழை நாட்களில் வயலில் சாலையில் நத்தை நகர்வதை கண்டு  அடிபாடமல் செல்ல சாலையிலிருந்து எடுத்து மரக்கிளையில் வைத்த அனுபவம் எல்லாம் எனக்கு உண்டு ...!

உங்களுக்கும் இதுபோல அனுபவம் இருக்காலாம் ...


"உக்ரைனிலிருந்து கடைசி விமானம் 

அனுமதி மறுக்கப்பட்ட நாய்க்குட்டியுடன் 

என் பயணச்சீட்டு" ...!!


என்ன நடந்தது அங்கே பயணச்சீட்டு இருந்தும் ஏன் அனுமதி மறுக்கப்பட்டது அந்த கடைசி விமானத்தில் ஏன் அவர்களை  ஏற்றவில்லை 

நாய்க்குட்டி வேற இருக்கிறது என்ன நடந்திருக்கும் பல காட்சியை நமக்குள் விரிவடைய செய்கிறார் கவிஞர் .. உக்ரைனில் போர் நடந்து கொண்டிருப்பதை நீங்களும் பார்த்திருப்பீர்கள் அந்த நிகழ்வு இன்னும் நம் மனதை பதபதைத்துக் கொண்டுதானிருக்கிறது ..


"ஆளில்லாத மரத்தடி 

ஆடுபுலி கட்டங்களில் உதிர்ந்த பூக்களை 

நகர்த்தியாடும் காற்று " ....!


காற்றும் பூவும் சிரசம் கொள்ளும்

கவிஞரின் கண்களை அது   கவரும் 

அதுவே கவிதையில் மீண்டும் பூவாய் மலரும் ....! 

இப்போது என்மனதில் பூவாய் மலர்ந்துவிட்டது இந்த கவிதை ..  அழகு ..


சிறுவனின் மடியில் 

சுருண்டிருக்கும் 

தாயில்லா பூனைக்குட்டி ....!


தாய் இருந்தாலும் இல்லையென்றால் 

அன்பையும் அரவணைப்பையும் தேடி

 மடியில் உறங்குகையில் நாமும் 

ஒரு பூனைக்குட்டி தான் ....!!


அடுத்த இலை 

காற்றே தீர்மானிக்கும் 

மரத்திடமிருந்து விடுதலை ...!


மரங்களை வெட்டாத வரை 

உதிரும் இலையின் நிலையை 

 காற்றே தீர்மானிக்கும் 

தீர்மானிக்கட்டுமே ..

எப்பொழுதும் போல அதனதன் போக்கில் 

அதுவாகவே நிகழ்வது தானே இயற்க்கையின் நியதி ...!


ஹைக்கூ கவிதையும் அந்த காற்றை போல 

அந்த உதிரும் இலையை போல 

ஹைக்கூ கவிதை என்பதும் அதுவாகவே எல்லோர் மனதிலும்  

உதிக்கட்டும் ...

வாழ்த்துகள் ..

கவிஞர் ஷர்ஜிலா பர்வின் யாகூப் ...


வாழ்த்துகளுடன் 

நூல் விமர்சகர் 

கவிஞர் ச. இராஜ்குமார்

0/Post a Comment/Comments