27 நட்சத்திரத்திற்குரிய தொழில் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி நின்ற நட்சத்திரத்திற்குரிய தொழில்களுடன் ஜாதகர்கள் தங்களுடைய தொடர்பை ஏற்படுத்திக் கொள்வர்

 

27 நட்சத்திரத்திற்குரிய தொழில் முதல் பகுதி

27 நட்சத்திரத்திற்குரிய தொழில் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி நின்ற நட்சத்திரத்திற்குரிய தொழில்களுடன் ஜாதகர்கள் தங்களுடைய தொடர்பை ஏற்படுத்திக் கொள்வர்.

1. அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய தொழில் 

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஞானம் மற்றும் அளவிட முடியாத ஆற்றல் உடையவர்கள்.சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி அஸ்வினி நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள். 

வாகன வர்த்தகம்

வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளி, வாகன ஓட்டுநர் பயிற்சியாளர்கள், போக்குவரத்து துறை,ஆர்.டி.ஓ அலுவலகம் சம்பந்தப்பட்ட வேலை.

அனைத்து வகையான மருத்துவர்கள், மருத்துவம் படிக்கவிட்டாலும் மருத்துவ அறிவு அதாவது ஒரு நோயை குணப்படுத்தும் அறிவு இருக்கும்.

வேதியியல் துறை, (ஆசிரியர,லேப் அசிஸ்டன்ட், கெமிக்கல் இன்ஜினியரிங் ), தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் (மினரல் வாட்டர் பிளானட்)

ஊக்கமளிக்கும் பயிற்சியாளர்கள் (மென்டார்), ஆலோசகர்கள்.

விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான வேலைகள்(உடற்கல்வி ஆசிரியர், விளையாட்டு பயிற்சியாளர்கள், விளையாட்டு உபகரணங்கள் தயாரிப்பவர்கள்)

சாகச விளையாட்டு, ஸ்டண்ட் மேன், நடனம் 

காவல்துறை, இராணுவ வீரர்கள்‌.

கட்டிடத் தொழில், கான்க்ரீட் போடுபவர்கள்

இயந்திர மேலாளர்கள், பொறியியல் சம்பந்தப்பட்ட துறை.

2. பரணி நட்சத்திரத்திற்குரிய தொழில் 

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நிர்வாக திறமை கொண்டவர்கள்.சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி அஸ்வினி நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள். 

அலுவலக மேலாளர்கள்

குழந்தை பராமரிப்பாளர், குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்பவர் அல்லது விற்பவர், மகப்பேறு மருத்துவர்கள்.

மகளிர் மருத்துவம் 

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் உள்ள பணிகள் (முக்கியமாக பதிவாளர் பணி)

தேயிலை தொழில், டீ கடை , ஹோட்டல் உரிமையாளர், இறைச்சி விற்பனை , சமையல்காரர்கள்

கால்நடை மருத்துவர்கள்

திரைத்துறை(திரைப்படம், இசைத் துறை) பொழுதுபோக்கு சாதனங்கள் விற்பனை

உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல்

உரம் மற்றும் விதை விற்பனை 

நீதிபதிகள் 

அமானுஷ்ய நிபுணர்கள்

3. கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய தொழில் 

கார்த்திகை நட்சத்திரம் மேஷ ராசியில் 26°40"-இல் இருந்து ரிஷப ராசியில் 10° 00 வரையிலும் உள்ளது. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் தாங்கள் செய்யும் காரியங்களை திறம்படச் செய்யக்கூடியவர்கள்.சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி அஸ்வினி நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள். 

பைனான்ஸ், வங்கிப் பணிகள் 

பாத்திரங்கள் உற்பத்தி மற்றும் பாத்திர வியாபாரம்

விமர்சகர்கள் 

இராணுவ ஜெனரல், மேலாளர்கள்

நகைக்கடை, கண்ணாடி தயாரிப்பாளர்கள் மற்றும் கண்ணாடிகள் விற்பவர்கள்.

கத்திகள், அரிவாள், அரிவாள்மனை போன்ற கூர்மையான ஆயுதங்கள் உற்பத்தி

சிகையலங்கார நிபுணர்,முடி திருத்துபவர்,மேக் அப் நிபுணர்

தையல்காரர்கள் , எம்பிராய்டிங்

வீடு கட்டுவதற்கு தேவையான கட்டுமானப் பொருட்கள் விற்பனை 

நெருப்பை பயன்படுத்தி செய்யக் கூடிய தொழில்கள்.

4. ரோகிணி நட்சத்திரத்திற்குரிய தொழில்

ரோகிணி நட்சத்திரத்தில் தான் சந்திரன் உச்சம் பெறுவார்.பேச்சு சாதுர்யம் மிக்க ரோகிணி நட்சத்திரத்திற்குரிய தொழில் பற்றி காண்போம். சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி அஸ்வினி நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள். 

விவசாயம், அனைத்து வகையான விவசாய தொழில் செய்பவர்கள்.

உணவு பதப்படுத்தும் துறை

அறிவியல் ஆசிரியர்

வணிகம், டிரேடிங், கனிம வர்த்தகம்

பைலட், கப்பல் போக்குவரத்தில் உள்ள பணிகள்

ஜவுளிக்கடை

ஃபேஷன், அழகு நிலையம் 

பேக்கேஜிங் மற்றும் விநியோகம்

நிதி ஆலோசகர்

பூக்கடை

பாடலாசிரியர், கவிஞர் , பாட்டு பாடுதல்.

டிரைவர் (மிகப்பெரிய பணக்காரர், மந்திரி, கலெக்டர் போன்ற அதிகாரிகளுக்கு டிரைவராக பணிபுரிபவர்கள்)

மீன் விற்பனை(கடல் வாழ் பொருட்கள் அனைத்தும்)

ஆடை வடிவமைப்பாளர்

நடனம் மற்றும் இசை 

5. மிருகசீரிஷம்

நட்சத்திரத்திற்குரிய தொழில் 

மிருகசீரிஷம் நட்சத்திரம் ரிஷபம் மற்றும் மிதுனம் இராசிகளில் வரும். மொழி இனப்பற்று அதிகம் உடைய மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்குரிய தொழில் பற்றி காண்போம்.சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி அஸ்வினி நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள். 

மென்பொருள் பொறியாளர்

அனைத்து வகையான இசைக் கலைஞர்கள்

மொழி ஆராய்ச்சி செய்பவர்கள்

நாவலாசிரியர், கதை ஆசிரியர் 

செல்லப்பிராணி விற்பனை (பூனை, நாய்)

ஃபேஷன் டிசைனர் 

ரியல் எஸ்டேட்

ஜவுளி கடை

அலுவலக உதவியாளர்

சுற்றுலா அழைத்துச் செல்லும் தொழில்

மனோதத்துவ நிபுணர்கள் 

சிவில் நீதிபதிகள்

பத்திர பதிவுத்துறை

பெண்கள் சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை (வளையல், அழகு சாதனப் பொருட்கள் விற்பனை)

நிலம் சம்பந்தப்பட்ட தொழில் 

6. திருவாதிரை

நட்சத்திரத்திற்குரிய தொழில் 

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சோடை(சோடை என்றால் பருப்பு இல்லாமல் வெறும் கூடாக இருக்கும் கடலை) போனதில்லை என்று கூறுகிறது ஜாதக அலங்கார நூல். திருவாதிரை நட்சத்திரத்திற்குரிய தொழில் பற்றி இங்கு காண்போம். சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி அஸ்வினி நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களுடன் தங்களுக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொள்வார்கள்.

மின் பொறியாளர்,எலக்ட்ரீசியன், மின்னணு மற்றும் கணினி தொழில்

போட்டோகிராபர், போட்டோ ஸ்டுடியோ மற்றும் பிளக்ஸ் டிசைனிங்

பர்னிச்சர் விற்பனை

வழக்கறிஞர்கள் 

அரசியல்வாதிகள்

ஜெராக்ஸ் கடை

காவல்துறை 

செல்போன், கணினி விற்பனை 

ஆயுத தொழிற்சாலைகளில் வேலை

நகைச்சுவை நடிகர்கள் 

ஒலிபெருக்கி,ரேடியோ செட்

திருமண மண்டபம் 

எழுத்தாளர்கள் 

உயிரியல் ஆசிரியர் 

ஜோதிடர்கள் 

7. புனர்பூசம் நட்சத்திரத்திற்குரிய தொழில்

புணர்பூசம் நட்சத்திரம் மிதுனம் மற்றும் கடக ராசியில் வரும்.படைப்பாற்றல் மிக்க புனர்பூசம் நட்சத்திரத்திற்குரிய தொழில் பற்றி காண்போம்.சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி அஸ்வினி நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களுடன் தங்களுக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொள்வார்கள். 

கணித ஆசிரியர்

வங்கி மேலாளர்

ஆடம்பர பொருட்கள் விற்பனை

ஹோமியோபதி மருத்துவம்

ஹோட்டல் மற்றும் உணவக தொழில்

ஆசிரியர்கள்

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி

சிவில் இன்ஜினியர்கள் 

ஆன்மீக ஆசிரியர்கள் 

கோவில்கள் மற்றும் தேவாலயங்கள் சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை

விமானிகள் மற்றும் விண்வெளி வீரர்கள்.

நடிப்பு மற்றும் பொழுதுபோக்கு வேலை

8. பூசம் நட்சத்திரத்திற்குரிய தொழில் 

மிக கடுமையான பிரச்சனைகளுக்கு கூட எளிதாக தீர்வு காணக் கூடிய பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்ற தொழில் பற்றி இங்கு காண்போம். சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி பூசம் நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள். 

பால் சார்ந்த தொழில் (பால் பண்ணை,டீ கடை, பால்கோவா, பால் சார்ந்த பலகாரங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை).

அறுவை சிகிச்சை மருத்துவர்.

அரிசி, கோதுமை வியாபாரம், பலசரக்கு வியாபாரம்.

எண்ணெய் விற்பனை

இரும்பு விற்பனை அல்லது பழைய இரும்பு கடைகள்.

பழைய வாகனங்கள் விற்பனை

அரசியல்

ஆசிரியர்கள், ஆன்மீக குருமார்கள்.

உளவியலாளர்கள் 

ரியல் எஸ்டேட் முகவர்கள்.

தொண்டு நிறுவனங்கள் 

குழந்தைகள் நல மருத்துவர்கள்

பாரம்பரிய உணவு விற்பனை அல்லது பாரம்பரிய மருந்து விற்பனை.

கைவினைக் கலைஞர்கள்.

9. ஆயில்யம் நட்சத்திரத்திற்குரிய தொழில்

எதற்கும் துணிந்த ஆயில்யம் நட்சத்திரத்திற்குரிய தொழில் பற்றி இங்கு காண்போம்.சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி ஆயில்யம் நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள். 

வணிகம் 

ஆயுர்வேத மருத்துவர்.

மெடிக்கல், மருந்து பொருட்கள் விற்பனை,மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை சார்ந்த வேலை‌

இரசாயன பொறியாளர்கள்

வக்கீல், வழக்கறிஞர்களுக்கான புத்தகம் விற்பனை.

யோகா ஆசிரியர்கள்

செல்லப்பிராணி விற்பனை.

மனநல மருத்துவர்

இ-சேவை மையம்

அடகு கடை

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை 

கப்பல் தொழில்நுட்பம்

விண்வெளி மற்றும் கடல் ஆராய்ச்சி

மீனவர்கள்

10. மகம் நட்சத்திரத்திற்குரிய தொழில் 

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் சொந்த தொழில் செய்வதையே விரும்புவார்கள்.மகம் நட்சத்திரத்திற்குரிய தொழில் பற்றி இங்கு காண்போம்.சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி மகம் நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள். 

நிர்வாகிகள், மேலாளர்

வணிகம் (முக்கிய இடங்களில் இவர்கள் கடைகள் அமைந்திருப்பார்கள்)

சிறந்த ஜோதிடர்

இராணுவம்

பெரிய நகரங்களில் வர்த்தகம்

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்

பரம்பரை பரம்பரையாக செய்த தொழில்

வரலாற்று ஆசிரியர்கள்

நீதிபதிகள்

நடுவர்கள் (கிரிக்கெட், கால்பந்து மற்றும் இதர விளையாட்டு போட்டிகளில் உள்ள நடுவர்கள்)

நூல் பதிப்பகம்

ஆன்மீக நூல்கள் மொழிபெயர்ப்பு

ஒரு நாட்டின் ஜனாதிபதி

மின்னணு பொருட்கள் விற்பனை 

இராணுவ சேவைகள் 

11. பூரம் நட்சத்திரத்திற்குரிய தொழில்

படைப்புத் திறன் மிக்க பூரம் நட்சத்திரத்திற்குரிய தொழில் பற்றி இங்கு காண்போம்.சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி பூரம் நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள். 

சினிமா, பொழுதுபோக்கு கலைஞர்கள்

அழகு கலைஞர்கள்

எண்ணெய் விற்பனை, ஜவுளி விற்பனை

சுற்றுலா தொழில்

திருமண விழாக்களுக்கு தேவையான பொருட்கள் விற்பனை அல்லது திருமண மண்டபம், கேட்டரிங், ரேடியோ செட், மேடை அலங்காரம் போன்ற தொழில் செய்தல்

கழிவறை சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை. (கழிவறை சம்பந்தப்பட்ட டைல்ஸ், செப்டிக் டேங்க் கிளினிங், கழிவறை நறுமணமூட்டி )

ரோஜாப்பூ விற்பனை

பருத்தி மற்றும் பட்டு விற்பனை

கம்பளி விற்பனை 

நறுமணப் பொருட்கள் விற்பனை

திரையரங்கு 

ஊடக பிரபலங்கள் (ஊடகங்களில் கமென்ட்ரி, விவாதம் செய்பவர்கள்,செய்தி வாசிப்பாளர்)

நகை செய்பவர்கள் மற்றும் நகை வியாபாரிகள்.

12.உத்திரம் நட்சத்திரத்திற்குரிய தொழில்

எதிலும் தனித்துவமாக நிகழக்கூடிய மற்றும் பகுத்தறிவு மிக்க உத்திரம் நட்சத்திரத்திற்குரிய தொழில் பற்றி இங்கு காண்போம்‌.சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி உத்திரம் நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள். 

இந்திய ஆட்சிப் பணி

மேலாளர்கள்

ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை

கோவில் தலைமை அர்ச்சகர், சர்ச் பாதிரியார், மசூதி மௌலானாக்கள் மற்றும் இதர மதங்களில் உள்ள தலைமை பூசாரி அல்லது போதகர்கள்.

ஆசிரியர்கள் 

அனைத்து துறைகளிலும் தொழில் முறை ஆலோசகர்கள்

செவிலியர்கள்

சுகாதார பராமரிப்பாளர்

கவுன்சிலர்கள்

விலங்குகளுடன் பணிபுரிபவர்கள் (வனத்துறை, வனவிலங்கு காப்பகம், பறவைகள் சரணாலயம் போன்றவற்றில் பணி)

இதய மருத்துவர்கள்

ஊட்டச்சத்து நிபுணர்கள்

சமையல்காரர்

விமானப் பணிப்பெண்கள்

தானியம் வியாபாரம்

பால் விவியாபாரம்

13. அஸ்தம் நட்சத்திரத்திற்குரிய தொழில்

எடுத்துக் காரியங்களை முடிக்க நினைக்கும் அஸ்தம் நட்சத்திரத்திற்குரிய தொழில் பற்றி இங்கு காண்போம்.

சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி அஸ்தம் நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள். 

ஆடிட்டர்

டீலர் 

பில்டர்

தினசரி பயன்பாட்டு பொருட்கள் விற்பனை (காய்கறிகள்,மளிகை சாமான்)

கமிஷன் ஏஜன்ட்

நோட்புக் விற்பனை

காகிதத் தொழிற்சாலை

பதிப்பகம் மற்றும் அச்சிடுதல் சம்பந்தப்பட்ட துறை

பேக்கேஜிங் தொழில்

பொம்மை தயாரிப்பாளர்கள்

தச்சர்கள்

ஜோதிடர்கள், கைரேகை நிபுணர்கள்

நகைச்சுவை நடிகர்கள்

வர்ணனையாளர் 

மந்திரவாதிகள்

கைவினைக் கலைஞர்கள்

நகைச்சுவை நடிகர்கள் 

தட்டச்சு செய்பவர்கள்

கணக்காளர்கள் 

பூங்கா பராமரிப்பாளர்

14. சித்திரை நட்சத்திரத்திற்குரிய தொழில்

எதையும் உருவாக்க கூடிய சித்திரை நட்சத்திரத்திற்குரிய தொழில் பற்றி இங்கு காண்போம்.சந்திரன், லக்னம் அல்லது லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி சித்திரை நட்சத்திரத்தில் நின்றால் அவர்கள் கீழ்க்கண்ட தொழில்களை செய்வார்கள் அல்லது அந்த துறையில் நல்ல அறிவைப் பெற்றிருப்பார்கள். 

கட்டிடக் கலைஞர்கள்

சிற்பிகள்

ஜவுளிக்கடை

விவசாயம்

ஆடை வடிவமைப்பாளர்

இயந்திர பாகங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை

சிறை அதிகாரி

வழக்கறிஞர்கள்

பாடகர், இசையமைப்பாளர்

ஓவியர்கள்

திரைக்கதை எழுத்தாளர்

நகைக்கடை தொழில் (நகைக்கடையில் வேலை பார்ப்பவர்களையும் குறிக்கும்)

விளம்பரத் தொழில்

மார்கெட்டிங் வேலைகள் 

கிராஃபிக்ஸ் கலைஞர்கள்

வாஸ்து நிபுணர்கள்

சொற்பொழிவாளர்

பொது மருத்துவர்கள்



0/Post a Comment/Comments