ஹைக்கூ - hykoo போட்டி 130ன் வெற்றியாளர்கள்

 


ஹைக்கூ போட்டி 130ன் வெற்றியாளர்கள் ஹைக்கூ கவிதைகள் 


1) பசுமை ஒழிப்பு

அதிகரித்து செல்கிறது

ஓசோனில் துவாரம்

            த. நரேஸ் நியூட்டன்

2) வளரும் செடியை

நசுக்க பார்க்கின்றன

வளர்ந்த நாடுகள்

           ச.கோட்டீஸ்வரன்

3) வளரும் செடிகள்

மிதித்து நசுக்கப்படுகின்றன

வறுமையில் குழந்தைகள் கனவு

          பஞ்சநாதன் சின்னா

4) மிதிபடும் சிறு செடி 

குறையும் வனம்

சுருங்கும் மனித மனம் 

         ச. இராஜ்குமார்

5) மழையின்மை

பசுமைக்குத் தடையாய் உள்ளது

காடழிப்பு

           பா சவிரிமுத்து

6) மீள் வனமாக்கல் 

முயற்சி தொடர்ந்து கொண்டேயிருக்கிறது 

காடழிப்பு 

          யோ. யேசு யுயேனியன்

7) துளிர்க்கும் செடிகள்/

கால் மிதிபட்டு அழிகின்றன

பாதையில் சிற்றெறும்புகள்

             கோவை ஆறுமுகம்

8) நட்டு வைத்த செடி

தடைதாண்டி வளர்ந்து கொண்டிருக்கிறது

செம்மரக் கடத்தல்

           கவிதா அசோகன் 

9) வளரும் தாவரம் 

மனிதனால் சீரழிக்கப் படுகின்றது 

தூயக் காற்று

           மு.மங்கையர்க்கரசி

10) காலைத் தூக்கிய விவசாயி

சற்றே ஆறுதல் தருகிறது

மிதிபடாத விருட்சம்

           சு.கேசவன்

11) முளைத்த மரக்கன்று

வேரூன்றி வளர்கிறது

உழவனது நம்பிக்கை

             சேனைத்தமிழன்

12) இயற்கையின் அழிவு

அச்சத்தைத் தருகிறது

பொழுதுசாய்ந்த இருட்டு

            இரமணி ராஜன் 

அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் 


0/Post a Comment/Comments