நூல் விமர்சனம்
நூலின் பெயர் : கூடை நிறைய குபேர பொம்மைகள்
நூலாசிரியர் : சாயிராம்
நூலின் விலை : 120
முதலில் கவிஞர் சாயிராம் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.
கூடை நிறைய குபேர பொம்மைகள் நூலின் தலைப்பை படித்ததுமே நாமும் நிறைய குபேர பொம்மைகளை வாங்கி வீட்டின் பூஜையறையில் வைக்க வேண்டும் என்று தோன்றியது ..
ஆனால் இந்த ஹைக்கூ புத்தகத்தை படித்ததும் எனக்குள் தோன்றியது இந்த ஒரு புத்தகத்தை அலமாரியில் வைத்தாலே போதும் ..
நிறைய ஹைக்கூ புத்தகம் வந்து சேர்ந்துவிடும் அது உண்மையும் ஆகிவிட்டது இப்போது என் அலமாரியில் 10 ஹைக்கூ புத்தகங்கள் உள்ளது ..
தலைப்பையே அசத்தலாக தந்து கவிஞர் ஹைக்கூ கவிதைகளையும் அள்ளி தெளித்திருக்கிறார் ...
வறண்ட பூமி
முதல் மழைத்துளியை சேமிக்கிறது
உயரமான தண்ணீர்த்தொட்டி ..
ஆஹா கவிஞரின் பார்வையே பார்வைதான் ..
புகைப்படக் கலைஞன்
ஒரு இடத்தில் நிற்க விடவில்லை
பட்டாம்பூச்சி ..
புகைப்பட கலைஞனை மட்டுமல்ல
பட்டாம்பூச்சியை இரசிக்கும் நம்மையும் ஒரு இடத்தில் நிற்க விடுவதில்லை ..
குடிகாரனின் மனைவி
சுமக்கும் கூடையில்
குபேர பொம்மைகள் ...
குடிகாரனின் மனைவி சுமக்கும் கூடையில் நிறைய குபேர பொம்மைகள் இருந்தும் வீட்டில் தீரவில்லை வறுமை குறையவும் இல்லை பாரம் ...
எதை வாங்குவது
ஒரே குழப்பம்
நான்குமே புத்தர் பொம்மை ..
அடடே நமக்கும் இதுபோன்ற குழப்பங்கள் நிறைய சமயங்களில் வந்திருக்கும்
ஒன்று அனைத்தையும் வாங்கி வந்திருப்போம் அல்லது எவற்றையும் வாங்காமல் வந்திருப்போம் ... சரிதானே ...
பூங்காவில் பறவைகள்
விதைகளை எடுத்துசெல்ல
தடியுடன் காந்தி ..
தடியுடன் காந்தியை மட்டுமல்ல நம்மை
நிற்க செய்கிறது இவரது கவிதைகள் ...
சாலை ஓவியத்தில் அனுமன்
வயிற்றில் விழுகிறது
எறிந்த நாணயம் ...
இந்த கவிதையை படித்ததும் எனக்கு ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது மாத மாதம் பௌர்ணமி யன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்வது வழக்கம் அங்கு சாலையில் நிறைய ஓவியங்கள் வரைந்து வைத்திருப்பார்கள் ..
நானும் 5 அல்லது 10 ரூபாய் என கொடுத்திருக்கேன் நாம் கொடுத்த பணம் அவரது வாழ்க்கையையும் வயிற்றையும் நிரப்பியதா என்று இதுவரை தெரியவில்லை ...
பாலைவன வெயில்
நடந்துசெல்பவன் கால்தடம்
ஒவ்வொன்றிலும் நிழல் ...
இந்த ஹைக்கூ கவிதை கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவுப்பரிசு போட்டியில் வென்ற கவிதை ...
அதற்கும் எனது வாழ்த்துகள் கவிஞரே ..
இனி நீங்கள் புத்தகத்தை வாங்கி வாசிக்கலாம்
வாழ்த்துகளுடன் நூல் விமர்சகர்
கவிஞர் ச. இராஜ்குமார்
Post a Comment