ஹைக்கூ போட்டி 135ன் வெற்றியாளர்கள் ஹைக்கூ கவிதைகள்
1. முதியவரின் கண்பார்வை
மெல்ல குறைந்து வருகிறது
மழையின் அளவு
சுமி முருகன்
2.
முதியவரின் பார்வை
மங்கலாக இருக்கிறது
தெரு விளக்கின் வெளிச்சம்
மகேஸ்வரி கிருஷ்ணசாமி
3.
சாரல் மழை
நடுக்கத்தை ஏற்படுத்துகிறது
முதுமைப் பருவம்
அ.நாராயணசாமி
4. மரம் நடுதல்
தொடர்ந்து கொண்டே இருக்கின்றது
முதியவரின் முயற்சி
யோ.யேசு யுயேனியன்
5.
நட்ட செடி
நாளை மரமாகித் தரும்
வான் மழை
தனராஜ் பாப்பணன்
6.
பெய்யும் மழை
இலைக்குள் அடங்குகிறது
மெலிந்த தேகம்
வ பரிமளாதேவி
7.
முதியவரின் பார்வை
மழையை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறது
வானம் பார்த்த பூமி
கோவை ஆறுமுகம்
8.
மழைக்கு இலைக்குடை
சற்றே விலகி இருக்கின்றது
முதியவரின் ஆடை
கவிதா அசோகன்
9.
கொட்டும் மழை
கொஞ்சமும் குறைய வில்லை
பெரியவர் எதிர்பார்ப்பு
10. மழையின் வேகம்
அதிகரித்தபடி இருக்கிறது
வயிற்றுப்பசி
நிஸ்வா ஸலாம்
11. திடீர் மழை
பாதுகாப்பாய் இல்லை
முதியவரின் வேலை
ஜெய வெங்கட்
12. நூறாவது மரம்
நட்டதும் நீர் ஊற்றுகிறது
வானம்
நாகலெக்ஷ்மி இராஜகோபாலன்.
13. கொட்டும் மழை
தாகத்தை தீர்த்திடும்
கோப்பைத் தண்ணீர்
இரா.கி.இராமகிருஷ்ணன்
14. மழைத் தூறல்
விசிறியடிக்கிறது
வீசும் காற்று
Dr ஜலீலா முஸம்மில்
15. மழையின்றி பயிர்
வாடிப் போயிருக்கிறது
முதியவரின் முகம்
16. செடி ஒன்றை நடுகிறேன்
மனதை ஆர்ப்பரிக்கிறது
முதல் மழைத்துளி
17. முதியவளின் கவலை
திடீரெனக் காணாமல் போகிறது
பொழியும் மழை
பிரியநிலா
18. மழைத்துளி
மேலிருந்து விழுகிறது
காய்ந்த இலை
கு.கதிரேசன்
19. வீசும் காற்று
திசைமாறிப் போகும்
தெறிக்கும் மழைத்துளிகள்
கவிநிலா மோகன்
20. முதுமையின் ஏக்கம்
கலைந்து விடுகிறது
மழை முகில்
பொன்.தமிழரசன்
21. பசுமையான செடி
மழைநீர் பட்டு வளைந்துள்ளது
முதியவர் முதுகெலும்பு
தாஜ்.நியாஜ் அஹமது
22. இலையில் மழைத்துளி
வழிந்தோடுகிறது
விவசாயின் முகத்தில் புன்னகை
எ.சீனிவாச வரதன்
அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்

Post a Comment