ஹைக்கூ - hykoo போட்டி 136ன் வெற்றியாளர்கள் ஹைக்கூ கவிதைகள்

 


ஹைக்கூ போட்டி 136ன் வெற்றியாளரகள் ஹைக்கூ கவிதைகள் 

1.   அவசர சிகிச்சை

தொடர்ந்து நடக்கிறது

குருதிக் கொடை

ஓசூர் மணிமேகலை

 

2.   இரத்ததானம்

வழங்க வழங்க ஊறும்

இரக்க உணர்வு

Dr ஜலீலா முஸம்மில்

 

3.   மனித உதிரம்

மகத்துவம் வாய்ந்தது

இரத்த தானம்

Dr.சிவகாமசுந்தரி நாகமணி

 

4.   இரத்த தானம்

மனிதநேய வெளிப்பாடு

உறுப்பு தானம்.

தென்னன்

 

5.   குருதி தானம்

உயிர் காக்கிறது

அவசர ஆபரேஷன்

எஸ்.சந்திரிகா ஷண்முகம்

 

6.   குருதிக் கொடை

பேருவுவகையைத் தரும்

குழந்தை பிறப்பு

- சி.கேதீஸ்வரன்

 

 

7.   இரத்த தானம்

உயிர் காத்து நிற்கும்

மருத்துவரின் சேவை!

கவிதா அசோகன்

 

8.   உடம்பிற்குள் குருதி

ஊடுருவிச் செல்கிறது

குழாயின் வழியே தானம்

மு.சு.பொன்.வீட்டாத்தாள்

 

9.   ரத்ததான முகாம்

அடிக்கடி நடைபெறுகிறது

விழிப்புணர்வு பிரச்சாரம்

. நாராயணசாமி

 

10. அறுவை சிகிச்சை

அவசியமாகி விடுகிறது

குருதி மாற்றம்

'கண்மணி'-கண்ணன்

 

11. துடிக்கும் இதயம்

தெளிவாகத் தெரிகிறது

மனிதநேயம்

சென்னிமலை .சீனிவாசன்

 

12. குருதிக்கொடை

அவசரத் தேவைக்கு பெறப்படும்

கந்துவட்டிக் கடன்

ரேணுகா ஸ்டாலின்

 

13. இரத்த தானம்

மனநிறைவைத் தருகின்றது

உயிர்காப்புப் பணி

.ஞானசம்பந்தன்

 

14. இதயத் துடிப்பு

தொடர்ந்து கொண்டே இருக்கிறது

அறுவை சிகிச்சை

பா. இராமர் 

 

15. குருதிக்கொடை

கொடுத்திடப் பெருகும்

இரக்க குணம்

தனம்_மீனாட்சிநாதன்

 

16. குருதிக் கொடை

மிகுந்து கொண்டே செல்கிறது

கொடையாளர் எண்ணிக்கை

-இரா.வேணு கோபாலகிருஷ்ணன்

 

17. அவசரத் தேவை

வளாகம் நிறைந்து இருக்கிறது

நண்பர்கள் கூட்டம்

நாகலெக்ஷ்மி இராஜகோபாலன்

 

18. குருதி தானம்

சீரான இடைவெளியில் வழங்கப்படும்

உயிர் காக்கும் மகத்துவம்

அம்சத் இப்ராஹிம்

 

19. இரத்தம் தேவை செய்தி

கண்டதும் உதவிடும்

கல்லூரி மாணவர்கள்

பாண்டிச்செல்வி கருப்பசாமி

 

20. ரத்த தானம்

எல்லோருக்கும் ஏற்றதாக இல்லை

பலவகைப் பிரிவுகள்

பரிமளாதேவி

 

21. குருதிக் கொடை

உயிரைக் காக்கிறது

அறிவியல் வளர்ச்சி

பொன்.தமிழரசன்

 

22. இரத்த தானம்

மனிதநேயம் நிறைந்தது

மருத்துவர் பணி

 ஜெ.தேவதாஸ்

 

23. குருதிக்கொடை

உயிரைக் காக்கிறது

தலைக்கவசம்

சேனைத்தமிழன்

 

24. இரத்த தானம்

விரைவாக தேடப்படுகிறது

விபத்தில் மனிதநேயம்

எம்.சீனி இப்ராஹிம்ஷா

 

25. சாதி மதம்

மரித்துப் போகிறது

இரத்த தானம்

ஜெய வெங்கட்

 

26. இரக்க குணம்

இதயத்தை உயிர்ப்புடன் வைக்கிறது

இரத்த தானம்

திஶ்ரீராமன்

 

27. குருதிக் கொடை

மனித நேயத்தைக் காட்டுகிறது

அன்னதானம்

கோவை ஆறுமுகம்

 

28. இரத்த தானம்

உயிர் காக்க உதவுகிறது

மறையாத மனிதம்

ஜெக.சுகமணியன்

 

29. குருதிக் கொடை

அதிகரித்து காணப்படுகின்றன

சாலை விபத்துகள்

கி. புஷ்பராஜ்

 

30.  நிறை உணவு

உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்

குருதிக்கொடை

சோ. ஸ்ரீதரன்

 

31. கைப்பிடி இதயம்

துடிப்பை நிறுத்திக் கொண்டது

கடிகாரம்

சிங்கை கார்முகிலன்

 

0/Post a Comment/Comments