அறிவோம் அறிவியல்
யட்ரியம், கியூரியம் லந்தனம், சீரியம், பிரஸோடைமியம், நியோடைமியம், ப்ரோமெத்தியம், சமாரியம், யூரோபியம், கடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம், ஹோல்மியம், எர்பியம், துலியம், எட்டர்பியம், லுடீடியம்.
இதெல்லாம் இன்னான்னு கேக்கறீங்க
Any typing problem...?
No...No...
All is correct.
ம்....
ஹாரி பாட்டர் கதையில் வரும் மந்திர உச்சாடனம்போலத் தென்படும் இவை உள்ளபடியே நடப்பு காலத்தில் மாயம் செய்யும் அறிய வகை தனிமங்கள். இவற்றை அருமண் (Rare Earth) தனிமங்கள் என்பார்கள். 1787இல்தான் சுவீடன் நாட்டில் உள்ள இட்டெர்பி எனும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட காடோலினைட் கனிமத்தில் சீரியம், யட்ரியம் ஆகிய இரண்டு அருமண் (Rare Earth) தனிமங்கள் முதன்முதலில் இனம் காணப்பட்டது. எனினும் இன்று இவை தங்கத்தைவிட மதிப்பு.
சமீபகாலம் வரை வெறும் வியப்பாக மட்டுமே இருந்த இந்த அருமண் தனிமங்கள் நம்மை அறியாமலேயே இன்று நமது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துவிட்டது. நம்மிடம் உள்ள திறன் பேசிகள், நவீன தொலைக்காட்சி திரைகள், கையடக்க தொடுதிரை கருவிகள், மின்சார வாகனங்கள், பசுமை ஆற்றல் உற்பத்திக் கருவிகள், எல்ஈடி பல்புகள் என எங்கும் எதிலும் அருமண் தனிமங்கள் உள்ளன.
நான்காம் தொழில்நுட்பப் புரட்சியின் பருப்பொருள் அடிப்படை அருமண் தனிமம் என்றால் மிகையாகாது. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தங்கம் எனக் கருதப்படும் அருமண் தனிமங்களை நிலவிலிருந்து வெட்டி எடுத்துவருவதுதான்
நிலவு நோக்கிய பயணம்.
சோவியத் யூனியனின் விண்கலம் லூனா-1, 1959 ஜனவரி 2இல் நிலவு நோக்கி ஏவப்பட்டது. வெறும் 34 மணிநேர பயணத்துக்குப் பின்னர் நிலவுக்கு அருகே 5,995 கி.மீ. தொலைவில் பறந்து சென்று நிலவை அடைந்த முதல் விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது.
அதன் தொடர்ச்சியாக, 1959 செப்டம்பர் 14இல் லூனா-2 விண்கலம் நிலவை நெருங்கி அதன் மீது விழுந்து மோதியது. நிலவைத் தொட்ட முதல் விண்கலம் என்ற பெருமையை அடைந்தது. மேலும், 1966 பிப்ரவரி 3இல் லூனா-9 விண்கலம் நிலவில் மென்மையாகத் தரையிறங்கி நிலவில் கால் பதித்த முதல் விண்கலம் என்ற பெயரைப் பெற்றது.
சோவியத் யூனியனுக்கு போட்டியாக அமெரிக்காவும் நிலவு நோக்கிய பயணங்களை முடுக்கி விட்டது. நீல் ஆம்ஸ்ட்ரோங் மைக்கேல் கொலின்சஸ் ஆகியோரை சுமந்து, 1969 ஜூலை மாதம் அப்போலோ-11 விண்கலம் நிலவில் தரையிறங்கியது. முதல் மனிதக் காலடி நிலவில் பதிந்தது.
இடைப்பட்ட காலத்தில் நிலவின் அருகே செல்வது, நிலவைச் சுற்றிச் செயற்கை கோள் போலச் சுற்றிவந்து ஆய்வுசெய்வது. நிலவில் தரையிறங்குவது, ஆளில்லா விண்கலங்களைத் தரையிறக்கம் செய்து நிலவு கல் மண் மாதிரிகளைச் சேகரித்து பூமிக்குக் கொண்டுவருவது போன்ற பல்வேறு நிலவு நோக்கிய விண்வெளி பயணங்கள் நிகழ்ந்தன.
இதில் 1976 ஆகஸ்ட் 19இல் கல், மண் மாதிரிகளைச் சேகரித்து பூமிக்கு திரும்பிய சோவியத் லூனா-24தான் கடைசி நிலவுப் பயணம். 1959இல் லூனா-1 முதல் 1976இல் லூனா-24 வரை மொத்தம் தொண்ணூற்றி எட்டு சோவியத் மற்றும் அமெரிக்க விண்கலங்கள் நிலவை நோக்கிச் சென்றன. அதன் பின்னர் யாரும் நிலவை அடைய முயற்சியை மேற் கொள்ளவில்லை.
மீண்டும் 2000ஆம் ஆண்டு வாக்கில்தான் நிலவை நோக்கிய விண்கல ஆய்வு சூடுபிடித்தது. அதுவும் கடந்த ஐந்து ஆண்டுகளில்தான் மீண்டும் நிலவில் தரையிறங்க முயற்சிகள் மேற் கொள்ளப் பட்டு வருகின்றன. இந்தியா இரண்டு முறை; ஒன்றில் வெற்றி. சீனா இரண்டு முறை இரண்டிலும் வெற்றி. ரஷ்யா இஸ்ரேல் ஜப்பான் முயற்சிகள் தோல்வி. இன்று இரண்டு ஆசிய நாடுகளின் தரையிறங்கி கலம் மற்றும் ஊர்திக் கலங்கள்தான் நிலவின் மீது துடிப்பாக இருக்கிறது.
ஏன் மீண்டும் நிலவு மீது மோகம்?
குடுமி சும்மா ஆடுமா?
அருமண் தனிமங்கள், ஹீலியம்-3 போன்ற அறிய பொருள்களை நிலவிலிருந்து வெட்டி எடுத்துவரும் முயற்சியின் துவக்கப் படிகளே தற்போது மேற்கொள்ளப்படும் நிலவு நோக்கிய பயணம்.
இதை விளங்கிக்கொள்ள நான்காம் தொழில்நுட்பப் புரட்சி குறித்து கவனம் செலுத்த வேண்டும். பருத்தியை இடுபொருளாகப் பயன்படுத்தி நூல் துணி உற்பத்தி செய்ய இயந்திரங்கள் உருவானது முதலாம் தொழில் புரட்சி. நிலக்கரியைப் பயன்படுத்தி நீராவி எஞ்சின் இயக்கி இயந்திரங்கள் செயல்பட்டன. இந்தப் புரட்சியின்போது நிலக்கரி மற்றும் இரும்பு மீது பெரும் பசி இருந்தது.
பெட்ரோல் கொண்டு இயங்கும் எஞ்சின்கள், மின்சாரம் கொண்டு இயங்கும் மோட்டர்கள் - உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் தகவல் தொடர்புத் தொலைபேசி முதலியவற்றை இயக்கியது இரண்டாம் தொழில்நுட்பப் புரட்சி. பெட்ரோல் எக்கு முதலியவை இந்தப் புரட்சியின் அத்தியாவசிய தேவையாக இருந்தது.
மின்னணு சாதனங்கள், கணினி இண்டர்நெட் முதலியவைக் கொண்டு கருவிகளைப் படைத்தது உற்பத்தி, தகவல் தொடர்பு முதலியவை நடத்தியது மூன்றாம் தொழில்நுட்பப் புரட்சி. சிலிகான் போன்ற பொருள்களோடு ஆற்றல் மூலங்கள் இந்தப் புரட்சிக்கு இன்றியமையாததாக அமைந்தது. தற்போது நடைபெற்றுவரும் நான்காம் தொழில்நுட்பப் புரட்சியின் வளர்ந்துவரும் முக்கிய தொழில்நுட்பங்கள்:
காற்றலை, பசுமை ஹைட்ரஜன் முதலிய ஆற்றல் உற்பத்தித் தொழில்நுட்பம், கணினி வலைபின்னல், சமூக ஊடகம், போன்ற தகவல் தொடர்பு தொழில்நுட்பம், நம்மைச் சுற்றி இருக்கும் பல்வேறு நிலைகளை உணரும் தன்மை கொண்ட மிகுநுட்பத் திறன் கொண்ட உணர்வீ தொழில்நுட்பங்கள், இன்டர்நெட் ஒப் திங்ஸ், செயற்கை நுண்ணறிவு, பிளாக் செயின் மற்றும் கிரிப்டோ தொழில்நுட்பங்கள், 3D பிரிண்டர், ஆக்மெண்டெட் ரியாலிட்டி வெர்ச்சுவல் தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ்.
இந்தத் தொழில்நுட்பக் கருவிகளை உற்பத்தி செய்ய அருமண் தனிமங்கள் அத்தியாவசியம்.
ஒரு சிட்டிகை உப்புதான்; ஆனால் உப்பிலாத பண்டம் குப்பையிலே. அதுபோலத்தான் அருமண் தனிமங்கள். ஒவ்வொருவர் கைகளில் உள்ள கைபேசி முதல் கணினி வரை அனைத்து மின்னணுக் கருவிகளிலும் சிறிதளவு அருமண் தனிமம் உள்ளது. சூரிய ஆற்றலை எடுக்க உதவும் சூரிய மின் தகடு முதல் காற்றாலைகள், மின் தேக்கிகள் வரை அருமண் தனிமங்கள் இல்லாமல் சாத்தியமே இல்லை. எல்ஈடி பல்புகள் முதல் நம்மைச் சுற்றிப் பசுமை தொழில்நுட்பங்களில் இந்தத் தனிமங்கள் உள்ளன.
மின்சார வாகன எஞ்சின், காற்றாலைகள், கணினி ஹார்ட் டிஸ்க்குகள், போர்ட்டபிள் எலக்ட்ரானிக்ஸ் கைபேசிகளில் நியோடைமியம் (Nd) மற்றும் சமாரியம் (Sm) ஆன காந்தங்கள் பயன்படுத்தப்படுகிறது. சீரியம், யூரோபியம், காடோலினியம், லாந்தனம், டெர்பியம் யட்ரியம் முதலிய அரிய மண் தாதுக்கள் இல்லாமல் எல்ஈடி (LED) குறைக்கடத்திகலை தயார்செய்ய முடியாது. வழமையான காரைவிட மின்சார காருக்கு ஆறு மடங்கு அரிய மண் தனிமங்கள் தேவை. ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் காற்றலையில் சுமார் 170 கிலோ அரிய மண் தாதுக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஏன் இவை ‘அரு’மண் தனிமங்கள்?
பூமியில் இவை அரிதாகத்தான் கிடைக்கும். பல்வேறு பொருள்களோடு பிணைந்து இருக்கும். எனவே, வெட்டி எடுத்துப் பிரித்தெடுப்பதும் கடினம். இவற்றைச் சுரங்கம் செய்து வெட்டி எடுப்பது என்பது பெரும் சூழல் மாசு ஏற்படுத்தும்.
ஆனால், நிலவின் தரைபரப்பில் அருமண் தனிமங்களும் ஹீலியம் 3 ஐசொடோப்பும் செய்வாக உள்ளது. சில டன் அளவில் இவற்றை வெட்டிப் பிரித்தெடுத்துப் பதம் செய்து பூமிக்கு எடுத்துவந்தால் போதும் பல பத்தாண்டுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து விடலாம் .
தோதான இடம் நிலவின் தென் துருவப் பகுதி.
இதுவரை எங்கே எளிதாக இறங்க முடியுமோ அங்கே தரையிறங்குவது என்று செயல் பட்டார்கள்; நாங்கள் இங்கே இறங்க வேண்டும் என முடிவுசெய்து அங்கே சரியாக இறங்குவோம் - அப்புடின்னு சொல்லியடிச்ச கில்லிதான் நம்ம இந்தியா.
டார்க் எனர்ஜின்னு ஒரு மேட்டர பத்தி ஐன்ஸ்ட்டின் ஒரு விஷயம் சொல்லியிருப்பார்.
அப்புறமா வந்த ஸ்டீபன் ஹாக்கிங்கும் இதே மேட்டர சொல்லியிருப்பார்
இந்த டார்க் எனர்ஜி நம்ம ஸ்பேஸ்லதான் இருக்கு.
ஆனா அது அடையமுடியாத இடத்துல இருக்குன்னு ரெண்டு பேருமே சொல்லியிருப்பாங்க.
இப்போ இது மேலே சொன்ன எல்லா கனிமம், தனிமத்துடனும் ஒத்துப்போவுது.
இப்போ முக்கியமான மேட்டரு இன்னான்னா
நாம இப்போ கண்டுபுடிச்சிட்டோம்...
நெருங்கிட்டோம்..
அடுத்த கட்டம், அதை நாம எடுத்துக்கிட்டு வர்றது.
இன்னும் சில நாட்களுக்குள்ளாறவே நிறைய நாடுங்க நிலாவுக்கு வரும்.
(7 - பேரு இருங்காய்ங்க)
அப்பாலிக்கா இன்னா...?
சண்டை. (ஆத்தாடி )
இன்னுங் கொஞ்சம் நாலு கழிச்சி
அந்தந்த நாட்டுக்கென எல்லைகோடுங்க நிலாவுலியே போடுவாய்ங்க.
சுருக்க சொல்லனும்னா
ஆற்றல் உற்பத்திதான் மிகப்பெரிய மூலதனம்.
#நம்மகிட்ட_மனித_ஆற்றல்_மித_மிஞ்சிப்_போயி_இருக்குஇப்போ_இந்த_நிலவுல_இருக்கற_ஆற்றலையும்_கைப்பற்றிட்டோமுன்னா
#கொய்யால...
#சும்மா_கிழி.
இன்னா ஒன்னு.
இனிமே நம்ம கவிஞருங்க நிலாவைப் பத்தி
அழகால்லாம் கவிதை எழுத முடியாது.
சும்மா - டெர்ரராத்தான் எழுதணும்.
நன்றி: #அருஞ்சொல் தகவல்களோடு
கூடுதல் தகவல்களையும் தந்துதவிய
நம்ம : #கோவாலு
Post a Comment