ஆங்கிலேயரிடம்
அடிமைப்பட்டிருந்த தேசம்
பலரின் தியாகங்களால்
சுதந்திரம் பெற்றது . . .
புழுவென நசுக்கப்பட்ட
மனிதர்கள் யாவரும்
சிறகு விரித்து பறக்கத் தொடங்கி
புத்தொளி பெற்றனர் . . .
புதுத் தெம்புடன்
புதுயுகம் படைக்கப்
புறப்பட்டனர் . . .
நொடிகள் கடந்தன,
நிமிடங்கள் கடந்தன,
நாட்கள் கடந்தன அத்தோடு
ஆண்டுகளும் கடந்து
இன்று 75 நிறைவுற்று
76ம் ஆண்டில் அடியெடுத்து
வைக்கின்றோம் . . .
ஆயினும், அனைவரும்
சுதந்திரத்தை அனுபவித்து
வாழ்கின்றோமா !!!
என்றெண்ணும் போது
ஏனோ மனம் பதைபதைக்கிறது
சுதந்திர தேசம் எதை நோக்கி
நகர்கிறது . . .
சாதிக்கொரு சங்கம்
வீதிக்கொரு நீதி
எங்கு நோக்கினும் கொலை,
கொள்ளை, பாலியல்
வன்கொடுமைகள்
இதுவா சுதந்திரம்
இதற்கா அத்தனை உயிர்கள்
அடிபட்டு, உதைபட்டு
சிறையில் இருந்து
செக்கிழுத்து உயிர் துறந்தனர் . . .
மாற்றங்கள் ஒன்றே
மாறாத இவ்வுலகில்
நல்மாற்றங்கள் விளைய
பெற்ற சுதந்திரத்தை
பேணிப் பாதுகாப்போம் . . .
சாதிகளற்ற சமநீதி பெற
ஒன்றிணைந்து போராடுவோம் . . .
சுதந்திரத்திற்காக உயிர்நீத்த
தியாகிகளை போற்றி
வணங்குவோம் . . .
வருங்காலம் வளமாகும்
வந்தே மாதரம் . . .
எங்க அம்மா ஓர் பாடல் பாட
ஆசைப்பட்டாங்க அதனால் தான்
அவர்கள் பாடலுடன்
சுதந்திர தின வாழ்த்து

இந்திய இராணுவத்தில் இருந்து
தேசத்திற்காக பாடுபட்ட வீரரின்
பெயர்த்தி என்கின்ற பெருமிதத்தோடு
அனைவருக்கும் இனிய
ஜெய்ஹிந்த்
Post a Comment