நவராத்திரியின் 2ம் நாள் எந்த தெய்வத்தை எப்படி வணங்குவது?
How to celebrate navratri Second day
சக்தி தேவியின் மகிமையை கொண்டாட, அம்பாளின் அனுகிரகம் பெற, நவராத்திரி புரட்டாசி அமாவசைக்கு அடுத்த நாள் தொடங்கி, ஒன்பது நாட்கள் நடைபெறுகிறது. நவராத்திரியில் ஒன்பது நாட்களும் ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்து, பூஜைகள், விருந்தினர்கள், நண்பர்களை அழைத்து உபசரிப்பது, தாம்பூலம் கொடுப்பது, என்று விமரிசையாகக் கொண்டாடப்படும்.
To celebrate the glory of Goddess Shakti and to seek the blessings of Ambal, Navratri begins on the day after Puratasi Amavasi and lasts for nine days. Navratri is celebrated with nine days of nine types of decorations, pujas, inviting guests and friends, offering tambulam, etc.
ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு விதமான நைவேத்தியம், அம்பாளுக்கு அர்ச்சிக்க, பூஜை செய்து சாற்ற என்று தினமும் ஒரு வகை மலர், தினசரி வாசிக்க ஒரு விதவிதமான ராகம் மற்றும் வாத்தியங்கள், பூஜையில் பாராயணம் செய்ய மந்திரங்கள் என்று அன்றாடம் ஒரு திருவிழாவே வீட்டில் நடக்கும். செப்டம்பர் 26 அன்று நவராத்திரி தொடங்கி, நவராத்திரியின் 2 ஆம் நாள், செப்டம்பர் 27 ஆம் தேதி வருகிறது.
Every day there is a festival in the house with a different type of Naivetiya, a flower to be offered to Ambal, a flower to be plucked for puja, a raga and vadyam to be played daily, mantras to be recited in the pooja. Navratri begins on September 26 and the 2nd day of Navratri falls on September 27.
வழிபட வேண்டிய சக்தி தேவி : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி, கௌமாரி அம்மன் மற்றும் பிரம்மச்சாரிணி
Goddess Shakti to Worship : Sri Raja Rajeshwari, Goddess Kaumari and Brahmacharini.
திதி : துவதியை
நிறம் : சிவப்பு
மலர் : முல்லைப் பூ
கோலம் : கோதுமை மாவினால் கட்டம் போட்ட கோலம் இட வேண்டும்
ராகம் : கல்யாணி ராகம்
நைவேத்தியம் : காலை நேரத்தில் புளி சாதம் மற்றும் மாலை நேரத்தில் வெள்ளை பயத்தம் பருப்பு சுண்டல்
மந்திரம் : ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம்
பலன்கள் : ஐஸ்வர்யம் பெருகும்
Diti : Dvati
Color : Red
Flower : Mulberry
Golam : Golam should be made of wheat flour
Ragam : Kalyani Ragam
Modern : Tamarind rice in the morning and White Peatham dal Sundal in the evening
Mantra : Raja Rajeshwari Ashtakam
Benefits : Wealth increases
நவராத்திரியின் இரண்டாம் நாளில், துர்க்கையின் பல வடிவங்களை வழிபடலாம். பார்வதி தேவியின் மிகவும் சக்தி வாய்ந்த அம்சங்கள் தான் கொற்றவை தேவி. அதில் மிகவும் சக்தி வாய்ந்த அவதாரம் தான் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி. முல்லைப்பூவும் மறு என்ற இலையும், ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு மிகவும் விருப்பம் என்று நம்பப்படுகிறது.
மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தாலான பொருட்களை தானம் செய்வது, சகல சௌபாக்கியங்களையும் கொடுக்கும்.
செவ்வாய் கிரகத்தைக் கட்டுப்படுத்தும் கிரகம் தான் பிரமச்சாரிணி தேவி, இவரை பூஜிப்பவருக்கு செவ்வாய் கிரக தோஷம் மற்றும் தாக்கம் நீங்கும் என்பது ஐதீகம்.
On the second day of Navratri, many forms of Durga can be worshipped. Goddess Parvati is the most powerful aspect of Goddess Kotavai. The most powerful avatar is Sri Raja Rajeshwari. Mullaipoo and re leaves are believed to be the favorite of Goddess Raja Rajeshwari. Donation of yellow and red colored items will bring all the blessings. Brahmacharini Devi is the ruling planet of Mars and it is believed that one who worships her will get rid of Mars dosha and influence.
பூஜை செய்யும் முறை :
பூஜை அறையிலேயே கொலு வைத்திருந்தால், கொலுவுக்கு முன்பு அமர்ந்து, தினசரி அந்தந்த தேவியருக்கான மந்திரத்தை பாராயணம் செய்யலாம். இன்று ராஜ ராஜேஸ்வரி அஷ்டகத்தை ஒலிக்கச் செய்து பூஜை செய்யலாம். அம்பாளின் திருவுருவப் படத்துக்கு முல்லை மாலை சூட்டி அலங்கரிக்கலாம். கொலு வைக்கப்பட்ட இடத்தில், கோதுமை மாவில் கட்டம் கோலம் போட்டு, முதல் படிக்கு கீழே விளக்குகள் ஏற்றி, தட்டில் வெற்றிலை பாக்கு பழம் வைத்து, நைவேத்தியம் வைத்து கற்பூரம் காட்டி ஆரத்தி எடுக்க வேண்டும்.
கொலு வைத்த இடமும் பூஜை அறையும் தனித்தனியாக இருந்தால், இரண்டு இடங்களிலும் விளக்கேற்றி, கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும்.
நைவேத்தியமாக புளி சாதம் செய்து அம்மனுக்கு படைக்கலாம். அதை வீட்டில் பெண்களுக்கு முதலில் சாப்பிடக் கொடுத்து அனைவருக்கும் விநியோகிக்கலாம்.
Mode of Worship :
If the kolu is kept in the pooja room, one can sit in front of the kolu and recite the mantra for the respective goddess daily. Today Raja Rajeshwari can be worshiped by sounding the Ashtaka. Garland garlands can be used to decorate Ambal's portrait. At the place where the kolu has been killed, khatam kolam should be made in wheat flour, lamps should be lit below the first step, betel nut should be placed on the plate, naivedhyam should be placed and camphor should be offered. If the killing place and the puja room are separate, then both places should be lit and camphor should be worshipped. You can make tamarind rice and offer it to Goddess. It can be given to women at home first and then distributed to everyone.
Post a Comment