எனது #புதைந்த_பக்கங்கள் நூலில் இருந்து my most favourite story #மன்மத_சாவி (சிறுகதை) படிச்சிட்டு பிடிச்சிருக்கானு சொல்லுங்க . . .
இங்க பாரு சத்யா என்னைத் தவிர வேற யாரையும் ஏறெடுத்துக் கூட பாக்க கூடாது நீ-ன்னு அவ சொல்வா . . .
நானும் ஒரு புன்னகையை வீசி விட்டு சரி டி செல்லம்,
என் சஞ்சுக்குட்டிய விடவா மத்த பொண்ணுக அழகு..? என்று சொல்லி அவளை சமாதானம் செய்வேன் . . .
ஆனா என்னங்க பண்றது அப்பப்போ சபலம் தலைக்கேறி மனம் தடுமாறி சிக்குற பெண்களோடு எல்லாம் கடலை போட்டு பேசிக் கொண்டே தான் இருப்பேன் . . .
அவளுக்குத் தெரியாம. . .
அவளுக்கு என் மேல அதீத அன்பு . . .
அன்பு கூடினா சந்தோஷம் மட்டுமில்ல . . .
சந்தேகமும் கூட சேரும் . . .
என்ன உருகி உருகி காதலிச்சு கல்யாணம் செஞ்சவளுக்கு நான் மன்மதன்னு தெரியாதா என்ன !!!
என்ன கவனிக்க ஆரம்பிச்சா . . .
நாம விடுவமா . . ?
ஓடுற நாய் மேல கல் ஏறியணும்னா கைய அப்டியே பின்னாடி இழுத்து சும்மா கெத்தா குறி வைக்கணும் . . .
அப்பதான் அந்த நாய் வகையா சிக்கி அடிபடும் அத நான் தெரியாமலா இருப்பேன் . . ?
ஆனாலும் . . .
அந்த நாள் வந்தது . . .
அவ வெளியூர்ல இருக்கறான்ற தைரியத்துல . .
முதல் முறையாக வேறு ஒரு பெண்ணோட நான் உல்லாசமாக இருந்தேன் . . .
மெல்ல மெல்ல காமம் தலைக்கேற என் மனம் தறிகெட்டு போதையில் தள்ளாடிய தருணம்.
அவளுக்கு பிடிச்ச குயில் கூவற சத்தம் அதாங்க எங்க வீட்டு காலிங் பெல் சத்தம்.
காலிங் பெல் அடிக்கப்பட்டது . . .
மோகத்தின் உச்சத்தில் இருந்த நான் சற்று கோபமாய் கதவைத் திறக்கவில்லை . . .
இப்போது காலிங் பெல் இல்லை . . .
டப் . . . டப் . . . டப் . . .
கதவு தட்டப்பட்டது . . .
என் மனதில் சிறு குழப்பம் . . .
இவ்வளவு உரிமையாக கதவை யாரும் தட்ட மாட்டார்களே என்று ...!!
மெல்ல எழுந்தேன் . . .
உடன் இருந்தவளோ என்னை எழ விடவில்லை
பாவம் அவள் என்ன செய்வாள் காமம் கரை கடந்து அவள் உச்ச நிலையை அடைய வேண்டிய தருணமாய் இருக்கலாம் . . .
என்ன செய்வது . . ?
அவளை கெஞ்சும் பார்வையால் கொஞ்சி சைகை செய்து . . .
எழுந்து சென்று கதவைத் திறந்தேன் . . . அவள் தான் . . .
அவளே தான் என் மனைவி சஞ்சனா அவள் தான் அங்கு நின்றிருந்தாள் . . .
எனக்கோ உச்சந் தலை முதல் உள்ளங்கால் வரை வெள வெளக்க கை கால் உடல் முழுக்க வியர்த்துக் கொட்டி நடுக்கம் . . . நடுக்கம் . . . ஒரே நடுக்கம் . . .
அவளோ என்னாச்சுங்க உங்களுக்கு . . ? என்று கேட்டாள் . . .
நாம தான் கிங் ஆச்சே . . .
அந்த நடுக்கத்திலும் மூளை சரூராய் வேலை செய்தது அவளது கேள்வியை பயன்படுத்திக் கொண்டேன் . . .
என்னனு தெரியல சஞ்சுமா ஒரு மணி நேரமா தல சுத்துது வலி வேற
பி.பி எகிறிடுச்சுனு நினைக்கிறேன் . . .
நீ உள்ள வா டி என்றேன் . . .
என் மனைவியோ.!!
இல்ல நீங்க வாங்க . . .
நான் வந்த கால் டேக்சி இங்க தான் நிக்குது . . .
நாம உடனடியா டாக்டர் கிட்ட போவோம் என்று என்னை வற்புறுத்தினாள் . . .
இத இத இததான் எதிர்பார்த்தேன் என்பது போல சரி நீ டேக்சி-ல வெயிட் பண்ணு நான் கைலிய மாத்திட்டு வந்துடறேன் . . . ன்னு சொன்னேன் . . .
அவளும் சரிங்க . . .
சீக்கிரமா வந்துடுங்க . . . என்று டேக்சி கிட்ட போனாள் . . .
சட்டென பெட் ரூம் சென்றேன் . . .
என்நிலை புரியாத அவளோ மயக்கும் கண்களால் காமப் பார்வை வீசினாள் . . .
சற்று மயங்கி, கிறங்கினாலும் சுதாரித்து
அடியேய் . . . என் பொண்டாட்டி வந்துட்டாடி . . .
இந்தாடி . . .
இது இந்த வீட்டோட டூப்ளிகேட் சாவி . . .
நான் வீட்டை பூட்டிட்டு போயிடுவேன் . . .
நீ உள்ள இருந்து கூட திறக்கலாம் . . .
திறந்துட்டு மறக்காம வீட்ட பூட்டிட்டு போ . . .
நாம அப்பறமா சந்திக்கலாம்னு சொன்னேன் . . .
அவளோ கண்களில் காமமும் ஏக்கமும் நிறைந்திருக்க சாவியை 🔑 வாங்கிக் கொண்டாள்.
நானும் சஞ்சனாவும் அவள் வந்த டேக்சியிலேயே ஹாஸ்பிட்டல் போனோம் . . .
அரை மணி நேரப் பயணம் . . .
அந்த அரை மணி நேரத்தில் ஆயிரம் முறை என்னை முத்தமிட்டிருப்பாள் . . .
தலையை கோதி வருடி விட்டாள் . . .
அவளது அன்பிலும் அரவணைப்பிலும் காமம் கடந்த காதலை அணுஅணுவாய் ரசித்துக் கொண்டே பயணப்பட்டேன்.
கடைசியா சொன்னா பாருங்க ஒரு வார்த்தை . . .
ஆயிரம் தேள்கள் ஒன்றாக சேர்ந்து கொட்டிய உணர்வு . . . "உங்க நல்ல மனசுக்கு உங்களுக்கு ஒண்ணும் ஆகாதுங்க . . ." அப்டினு.
மறுநாள் அந்த பொண்ணு போன் பண்ணினா . .
உன்னோட வீட்டு சாவி என் கிட்ட தான் இருக்கு பேபி . . . இப்ப வரவா . . ?
பூட்டை திறக்கலாம் என்று நமட்டுச் சிரிப்புடன் . . .
நான் ஒரே ஒரு வாக்கியம் சொன்னேன் . . .
"எனக்கு சாவியும் வேண்டாம் . . .
உன் சாவகாசமும் வேண்டாம் . . .
இனிமேல் என் பொண்டாட்டிக்கு மட்டுமே புருஷனா இருக்க விரும்பறேன் . . .நீ வேற ஆளப்பாருனு . . ."
இப்பவும் நான் கிங் தாங்க எப்பவும் கெத்து தாங்க.
ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிக்கறேங்க . .
உண்மையான அன்பிற்கு செக்ஸ் தேவையா என்றால், இல்லை என்ற பதில் ஏராளம் வந்து தாராளமாய் ஏமாற்றும்.
ஆனால் பாருங்க காதலின் ஓர் அங்கமே செக்ஸ் தான் ஆயினும், சில இடங்களில் பேரன்பு பெருமழையாய் பொழியும் போது அங்கு அன்பு மட்டுமே நிறைந்திருக்கும் செக்ஸ் அநாவசியமான ஒன்றாகி ஒதுங்கி நிற்கும் . . .
உண்மைக் காதலில் காமம் கலந்திருக்கும், காமத்தின் மோகத்தில் காதலின் தேடலிருக்கும் புரிந்து கொண்டு உரியவரோடு உண்மையாக வாழ்ந்தால் வாழ்நாள் வசந்தமே.
*ரேணுகா ஸ்டாலின்*
Post a Comment