முருகனின் ஆறுபடை வீடுகளுக்கு எதன் அடிப்படையில் எண் தரப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டது தெரியுமா?
முருகனுக்கு ஆறுபடைவீடுகள் இருக்கின்றது என அனைவருக்கும் தெரியும். ஆனால் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை ஆகிய ஆறுபடை வீடுகளுக்கும் எதன் அடிப்படையில் எண் தரப்பட்டது என்பது பலருக்கு தெரியாது.
· சூரபத்மனை வதம் செய்யச் சென்ற முருகப் பெருமான், படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்தூர் மட்டுமே படைவீடாகும்.
·
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை ஆகிய ஆறுபடை வீடுகள் இருக்கிறது.
·
முருகனின் ஆறுபடைவீடுகள் எதன் அடிப்படையில் எண் தரப்பட்டது என்பது பலருக்கு தெரியாது.
தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாகக் கருதி வழிபடப்படுகிறது. போர் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் "படைவீடு' எனப்படும். அவ்வகையில் சூரபத்மனை வதம் செய்யச் சென்ற முருகப் பெருமான், படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்தூர் மட்டுமே. ஆனாலும், மற்ற ஐந்து தலங்களையும் சேர்த்து, "ஆறுபடை வீடு' என்கிறோம்.
வறுமையில் வாடும் ஒருவரிடம், வறுமையை வென்ற ஒருவர், வள்ளல்கள் இருக்குமிடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கு சென்றால் அவரது ஏழ்மை தீரும் என்று சொல்லி அவரை ஆற்றுப் படுத்துவார் (வழி காட்டுவார்).
இந்த வகையில் அமைந்த நூல்கள் சங்க காலத்தில், "ஆற்றுப்படை' எனப்பட்டது. மக்களின் குறைகளைப் போக்கி, அருள் செய்யும் தலங்களிலுள்ள முருகனை வணங்குங்கள், உங்கள் கவலையெல்லாம் தீரும் என்று ஆற்றுப்படுத்தினார் நக்கீரர். அவர் இயற்றிய திருமுருகாற்றுப் படையே "முருகனின் ஆறுபடை' ஆயிற்று என்றும் சொல்வதுண்டு. அவர் பாடிய வரிசையிலேயே, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை ஆகிய ஆறுபடை வீடுகளுக்கும் எண் தரப்பட்டது.
பழநி : பழநி ஆறுபடைவீடுகளில் முதலாவதாகும். ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம் கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழநி.
திருச்செந்தூர் : சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு வென்ற இடமாகும். சூரபத்மனுடன் முருகன் போர்புரிந்த இடமே திருச்செந்தூர்.
திருப்பரங்குன்றம் : முருகனுக்கும் சூரபத்மனுக்கும் போரில் வெற்றி பெற்ற மறுநாள் முடிந்து தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக முருகன் , இந்திரனின் மகள் தெய்வானையைத் திருமணம் செய்து கொண்ட இடம்.
சுவாமிமலை : தந்தைக்குப் பாடம் சொன்ன இடம் சுவாமி மலை.
திருத்தணி : முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி.
பழமுதிர்சோலை : குறிஞ்சிக் கடவுளாகிய முருகன் வயோதிகனாகத் தோன்றி நக்கீரனுக்குக் காட்சியளித்த இடம் பழமுதிர்சோலையாகும்.
Post a Comment