#பாயிரம் :
#நூலின்_தன்மை :
நன்னூல் விளக்கிடும்
பாயிரம் இரண்டோடே
பாங்குடன் அமைதலே
நூலின் தன்மையாம்/
படித்தோன் பாமரன்
பாகுபாடு இன்றியே
படித்ததும் புரிந்திடும்படி
எளிமையாய் இருத்தலும்,
காலங்கள் கடந்திடினும்
கற்போர் நெஞ்சமதில்
பசுமரத்தாணியாய் பதிந்திடும்
சிறப்புடன் இலகுவாய் இருத்தலும் நல்-நூலின் தன்மையாய்
அமைந்திடல் சிறப்பாமே/
#ஆசிரியர்_தன்மை :
உயிர் மெய்யை
உலகறியச் செய்திடும்
உன்னத பணியாம்
ஆசிரியர் பணியே/
எழுத்தாணி என்னும்
ஆறாம் விரலினை
வெள்ளைத் தாளினில்
வீணை மீட்டிடச் செய்து
வாழ்வை வண்ணமயமாக்கும்
கலை வாணியாய் ஆசிரியர்
இருத்தல் என்றும் சிறப்பாமே/
#கற்பித்தல்_தன்மை :
எண்ணோடு எழுத்தையும்
எளிமையாய் கற்பித்து
ஏற்றமிகு வாழ்வினை
வழங்கிடும் இறைவனாய்/
மாணவர் திறன்களை
தெளிவுற உணர்ந்தே
தேடலைத் தூண்டிடும்
தெய்வீக சக்தியாய்/
மாணவர் திறன் மேம்படும்படியே
கற்பித்தல் தன்மை
உணர்த்திடல் சிறப்பாமே/
#கற்கும்_மாணவர்கள்_தன்மை
கோவில் குடமுழுக்கில்
சுற்றும் கழுகெனவே
நூலின் சுவையுணர்ந்து
கலைபல பயின்றிடவே
கற்றல் யுக்திகளை
தேடிச் சுற்றி கற்றல்
கற்கும் மாணவர் சாதனை
படைத்து உயர்ந்திட சிறப்பாமே/
#மாணவர்கள்_கற்றுக்கொள்ளும்
#தன்மை
அறியா தெரியா
அனைத்தையும் நன்றாய்
கற்பிக்கும் ஆசிரியரிடம்
விளக்கமாய் கேட்டு
வினாக்கள் எழுப்பி
விடைபல அறிந்தே
வாய்மொழி கற்றலையும்
எழுதித் தெளிந்தே
ஒத்த வயதோருடன்
கலந்துரையாடி பிழை
திருத்தியே
புரிதல் மேம்பட
புதுவழி அறிந்தே
கற்றுக் கொள்ளும் தன்மை
இருந்திட்டால் சிறப்பாமே/
*ரேணுகா ஸ்டாலின்*
Post a Comment