ஹைக்கூ போட்டி 143ன் ஹைக்கூ வெற்றியாளர்கள் கவிதைகள்
1. கொஞ்சம் மழை வந்ததும்
ஆங்காங்கே முளைத்து விட்டன
குடைக் கடைகள்
மலர் மைந்தன்
2. மழைப் பொழிவு
ஆங்காங்கு அதிகமாகத் தெரிகிறது
சாலையில் வெள்ளம்
கே.பி.துரைசாமி
3. மழைபாதுகாப்பு நடவடிக்கை
போதுமான அளவுக்கு இல்லை
இருவருக்குமான குடை
கோவை ஆறுமுகம்
4. நீர்நிலை ஆக்கிரமிப்பு
தீராத பிரச்சினையாக உள்ளது
தேங்கும் மழைநீர்
கா.கணேசன்
5. அடை மழை
தொடர்ந்து கொண்டே இருக்கிறது
நிவாரணப் பணி
கீழ்கரவை குலசேகரன்
6. கால்வாய் உடைப்பு
விரைவில் சீரமைக்கப் படுகிறது
மின் வழங்கல்
'கண்மணி'-கண்ணன்
7. வெள்ள நீர்
வீட்டிற்குள் நுழைகிறது
வழி தவறிய பாம்பு
பாண்டிச்செல்வி கருப்பசாமி
8. மழை வெள்ளம்
மெல்ல குறைகிறது
முகாமில் மக்கள் கூட்டம்
ஜெய வெங்கட்
9. தொடரும் மழை
சிரமத்தைக் கொடுக்கிறது
தெருவில் வெள்ளம்
செபா சவிரிமுத்து
10. அடைமழை
அவ்வப்போது வந்து மறையும்
தவளைச் சத்தம்
காவத்தையூர் பழனியாண்டி கனகராசா
11. மழை ஓய்ந்ததும்
நிரம்பி வழிகிறது
மருத்துமனையில் கூட்டம்
கவிச்சிகரம் சாக்கை.பொன்னழகு
12. மழை நீர்
தெருவில் நிரம்பி வழிகிறது
நெகிழிப் பொருட்கள்
சசி முத்து
13. மழை வெள்ளம்
குடியிருப்பைச் சுற்றி
மீட்பு படகு
தென்னன்
14. கனத்த மழை
குறைவதாக தெரியவில்லை
காய்கறி விலை
மு.நாகராஜன்
அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்
நடுவர் : கவிஞர் கரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்
Post a Comment