ஆத்திச்சூடி_தன்முனைக்_கவிதைகள்

 


#முதல்_முறையாக_சிறுமுயற்சி


#ஆத்திச்சூடி_தன்முனைக்_கவிதைகள்


1. #அறம்_செய்ய_விரும்பு


சந்ததியைக் காத்திடும்

சமயத்தில் செய்த தர்மம்

சட்டென அழித்திடும் நம் 

முன்வினை கர்மம்


2. #ஆறுவது_சினம்


கட்டுக்கடங்காத கோபம்

கட்டுப்பாட்டில் வைக்கிறான்

காலம் கடந்து சிந்தித்து

கவலையில் வாழ்கிறான்


3. #இயல்வது_கரவேல்


இயலாதோர் இல்லாதோர்க்கு

இருப்பதை கொஞ்சம் வழங்குங்கள்

இறையருள் பெருகி நித்தம்

செழிப்போடு வாழுங்கள்


4. #ஈவது_விலக்கேல்


அறத்தில் சிறந்த அறம்

எதுவென அறிவீரோ!!

தர்மம் செய்திட விரும்பாவிடினும்

செய்வோரை தடை செய்யாதிருத்தல்


5. #உடையது_விளம்பேல்


ஔவையாரின் ஐந்தாம் ஆத்திச்சூடி

அகத்திலிருந்து அகன்று விட்டால்

தன்னைத்தானே புகழ்திடும் 

தற்குறி எண்ணம் வளர்ந்திடும்


6. ‌#ஊக்கமது_கைவிடேல்


முயற்சியும் பயிற்சியும்

உற்சாகத்தை கூட்டிடும்

உயிர் போகும் நிலைவரினும்

ஊக்கமுடன் போராடிடும்


7.  #எண்_எழுத்து_இகழேல்


பருவத்தே பயிர் செய்தால்

கழனி எல்லாம் விளைந்திருக்கும் 

எண் எழுத்தை விரும்பி

ஏற்றால் வாழ்வது சிறக்கும்


8. ‌ #ஏற்பது_இகழ்ச்சி


உழைப்பின் உன்னதம் உணராது

இரந்து வாழ்வது இழிவானது

வறுமையிலும் தளராத 

தன்மானம் கொள்வது சிறப்பானது


9.  #ஐயம்_இட்டு_உண்


ருசிக்காக உண்ணாமல்

பசிக்காக உண்ணுங்கள்

அதையும் பசித்தவர்க்கு கொஞ்சம்

பகிர்ந்தளித்து மனம் வெல்லுங்கள் 


10.  #ஒப்புரவு_ஒழுகு


உள்ளன்போடு உதவிடும்

நல்மனம் கொண்டவர்கள்

பகைமையை வேரறுத்து

வெற்றி கொள்ள பிறந்தவர்கள்


11.  #ஓதுவது_ஒழியேல்


கற்றதை பிறருக்கு

கற்பிக்கும் பண்பாளர்கள் 

வாசிப்பை நேசித்து 

வாஞ்சையுடன் சுவாசிப்பவர்கள்


12.  #ஔவியம்_பேசேல்


நெஞ்சத்தில் வஞ்சம் இன்றி

அழகுத் தமிழில் பேசிடுவோம்

அகங்காரம் ஏதும் இன்றி 

அன்புடன் வாழ்ந்திடுவோம்


             *ரேணுகா ஸ்டாலின்*

0/Post a Comment/Comments