ஹைக்கூ போட்டி எண் : 141ன் வெற்றியாளர்கள் ஹைக்கூ கவிதைகள்
1. மண்ணில் புதைந்தாலும்
உயிர் பெற்று எழுகின்றன
விதைகள்
இரா.இராஜாமணி
2. சிறிய விதைகள்
மண்ணில் புதைந்து துளிர்க்கின்றன
அழகிய செடிகள்
மு.சு.பொன்.வீட்டாத்தாள்
3. நஞ்சுடைய உரம்
ஆபத்தான விளைவைத் தருகின்றது
விஞ்ஞான வளர்ச்சி
யோ.யேசு
4. செழிப்பான பயிர்
மண்ணின் வளத்தைக் காட்டுகிறது
இயற்கை உரம்
நாகலெக்ஷ்மி இராஜகோபாலன்
5. தூவும் பசளை
செழித்து வளர்கின்றது
மிளகாய் கன்று
புவனேஸ்வரி சண்
6. இடுகின்ற உரம்
செடியைச் செழிப்பாக்குகிறது
பாய்ச்சும் தண்ணீர்
செ.மூ.வேடியப்பன்
6. ரசாயன உரங்கள்
பெருகிக் கொண்டே போகிறது
புதிய நோய்கள்
ச.மஞ்சுளா
7. செயற்கை உரம்
இயற்கையை மாற்றுகிறது
புதியரக பயிர்முறைகள்
பானுமதி இராஜேந்திரன்
8. இயற்கை உரம்
தாவரம் வளர்வதற்கு உதவுகின்றது
வான் மழை
மு.மங்கையர்க்கரசி
9. ஊற்றிய தண்ணீர்
வேரினால் உறிஞ்சி எடுக்கப்படுகிறது
இடப்பட்ட உரச்சத்து
கோவை ஆறுமுகம்
10. விளையும் பயிர்
முளையில் தெரிந்து விடும்
நெளியும் புழுக்கள்
சோ. ஸ்ரீதரன்
11. விதைத்த விதைகள்
முட்டி மோதி மேலெழும்புகின்றன
ஏழை மாணவர்களின் திறன்
கவிதா அசோகன்
12. மண்ணின் வளம்
உரமிட்ட பின்கூடுதலாகிறது
செடியின் வளர்ச்சி
ஜெய வெங்கட்
13. துளிர்க்கும் செடிகள்
கண்ணுக்குத் தெரிவதில்லை
புதைந்த விதைகள்
ஓசூர் மணிமேகலை
14. கருப்புமண்
வீரியம் கூட்டுகிறது
வெள்ளை உரம்
வ பரிமளாதேவி
15. நாற்றின் வேர்
சுற்றிலும் பரவுகிறது
இட்ட உரச்சத்து
'கண்மணி'-கண்ணன்
16. இயற்கை உரங்களே
பயிர்களைக் காக்கிறது
உழவனின் பராமரிப்பு
கவியருவி ஜோதிபாரதி
17. தூவிய விதைகள்
முளைத்து செடியாக உதவும்
இயற்கை உரம்
கற்பகம் தங்கப்பாண்டியன்
18. வீட்டுத் தோட்டம்
விதைகள் முளைத்து வளர்ந்திட பரவும்
மண்புழு உரம்
கவிநிலா மோகன்
19. இயற்கை உரம்
அதிகமான மகசூல் தருகிறது/
புதிய உத்தி
ஜெக.சுகமணியன்
20. தூவும் விதைகள்
வயலில் பரவி இருக்கின்றன
செயற்கை உரங்கள்
எ.சீனிவாச வரதன்
21. உரமிடும் பயிர்
நன்கு செழித்து வளர்கிறது
நாட்டின் பொருளாதாரம்
செபா சவிரிமுத்து
அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்
Post a Comment