ஹைக்கூ - Hykoo போட்டி எண் : 142ன் ஹைக்கூ வெற்றியாளர்கள் கவிதைகள்

 


ஹைக்கூ போட்டி எண் : 142ன் வெற்றியாளர்கள் ஹைக்கூ கவிதைகள்

1. விளைந்த சூரியகாந்தி

தரை நோக்கி சாய்கிறது

செடியின் நிழல்

          மலர்மைந்தன்

2. தென்னை மரங்கள்

நீண்டு வளர்ந்திருக்கின்றன

சூரியகாந்தி பூக்கள்

       கற்பகம் தங்கப்பாண்டியன்

3. சூரியகாந்திப் பூக்கள்

தலை நிமிர்ந்து நிற்கின்றன

விவசாயிகளின் குடும்பங்கள்

       மு.நாகராஜன்

4. சூரியகாந்தி  பூக்கள்  

காற்றின்திசையில்  வேகமாக 

தலையசைக்கின்றன  

தென்னை  மரங்கள்  

        அ .ஜேசுலாஸ் லெலிஸ்                       

5. சூரியகாந்திப்பூ தோட்டம் 

நிழல் தருகின்றது

தென்னங் கீற்று

        ஓசூர் மணிமேகலை

6. உயரமான மரங்கள்

நெருக்கமாக காணப்படுகின்றன

சூரியகாந்தி பூக்கள்

          சுமி முருகன்

7. மகரந்த மணிகள் 

ஓரிடத்தில் குவிந்து காணப்படுகின்றன 

தென்னை மரங்கள் 

          யோ.யேசு

8. சூரியகாந்திப் பூக்கள்

சூரியனை சுற்றியே வருகின்றன 

வான்வெளி கோள்கள்

          கி. க்ஷபுஷ்பராஜ் 

9. யாரிடம் கற்றுக்கொண்டதோ

சூரியனை கண்டதும் திரும்ப

சூரியகாந்தி பூக்கள்

     காவத்தையூர் பழனியாண்டி கனகராசா

10. மாலைச் சூரியன்

மேற்கே சாய்கிறது

சூரியகாந்தி மலர்

          சேனைத்தமிழன்

11. சூரியகாந்தி பூக்கள்

சூரியன் திசைப்படி மாறுபடுகின்றன

மரங்களின் நிழல்கள்

         கோவை ஆறுமுகம்

12. மழலையின் கன்னம்

கிள்ளத் தோன்றுகிறது

விரிந்த சூரியகாந்தி

         வ.பரிமளாதேவி

13. சூரிய காந்திப்பூக்கள்

வரிசையாக நிற்கின்றன

சாலையோரம் விளக்குகள்

         மகேஸ்வரி கிருஷ்ணசாமி

14. விரிந்த தென்னம்பாளைகள் 

மலர்ந்து சிரிக்கின்றன 

சூரியகாந்தி பூக்கள் 

          தனம் மீனாட்சிநாதன்

15. சூர்யகாந்தி மலர்கள்

அதிகரித்துக் கொண்டிருக்கிறது

 சமையல்எண்ணை விலை

         அருணா ரகுராமன்

16. மலர்ந்த பூக்கள்

அழகாய்க் காட்சித் தரும்

பூக்கடைகள்

          சோ.ஸ்ரீதரன்

17. உதயக் காட்சி

மனதைக் கவர்கிறது

சூரியகாந்தித் தோட்டம்

          கலாராணி லோகநாதன் 

18. வெளிச்சம் தேடுகின்றன

நீளும் நிழலுடன்

சூரிய காந்தி மலர்கள்

          ஷர்ஜிலா பர்வீன் யாகூப்

19. தென்னங்கீற்றுக்கள்

மஞ்சளாக மங்கலமாய்

சூரிய காந்தி மலர்கள்

         Dr.சிவகாமசுந்தரி நாகமணி

20. தென்னை மரம்

மேலெழுந்து பார்க்கின்றது

சூரியகாந்தி பூ

           கு.கதிரேசன்

21. சூரிய வணக்கத்தில்

பூக்களின் அழகு 

சாய்ந்து பார்க்கும் தென்னை

          நாகலெக்ஷ்மி இராஜகோபாலன்

22. சூரியகாந்திப் பூக்கள்

நல்ல விளைச்சல் தருகின்றன

தென்னை மரங்கள்

          ச.மஞ்சுளா 

23. தென்னை ஓலைகள்

நன்கு விரிந்து இருக்கின்றன

சூரியகாந்திப்பூக்கள்

         'கண்மணி'-கண்ணன்.            

24. சூரியகாந்திப் பூக்கள்

காற்றில் ஆட்டம் போடுகின்றன

சோளக்காட்டு  பொம்மைகள்

           சு.கேசவன்

25. சூரிய காந்தி மலர்

எண்ணெய் எடுக்கப் பயன்படுகிறது

முற்றிய தேங்காய் 

            கவிதா அசோகன் 

26. சூரியகாந்தி மலர்

காற்றில் அசைகிறது

குருவிக்கூடு

         எஸ்.அம்பிகா

27. சூரியகாந்தி மலர்கள்

மெல்ல திரும்புகின்றன

தேன் குடிக்கும்  வண்டுகள்

        எ.சீனிவாச வரதன்

அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்

நடுவர் : கவிஞர் கவிநிலா மோகன் அவர்கள் 

0/Post a Comment/Comments