#பழையன_கழி_போகியின்_வழி
மார்கழியை வழியனுப்பி
தைமகளை வரவேற்கும் முன்
தரணி யெங்கும் செழித்திடவே
தமிழர் வாழ்வு சிறந்திடவே
நானி லத்தில் எங்கெங்கும்
நன்மை மட்டும் நிலைத்திடவே
பழையன கழி போகியின் வழி
அதிகாலைக் கடுங் குளிர்
அங்கமெங்கும் நடுங்கச் செய்ய
ஆதவனும் எழும் முன்னே
எழுந்து நித்தம் ஓய்வின்றி
ஏரோட்டும் உழவர் வாழ்வில்
ஏற்றம் பல வந்திடவே
எத்திக்கும் உழவின் பெருமை
தித்திக்கச் செய் திடவே
பழையன கழி போகியின் வழி
மனித மென்ற மகத்துவம்
மனதி னிலே மிச்சமின்றி
தன்முகந் தனை மறைத்து
முகமூடி யணிந்து கொண்டு
பொல் லாங்கு செய்கின்ற
பொல்லாத மனிதர் இங்கே
பொடிப் பொடியாய் பொசுங்கிடவே
பழையன கழி போகியின் வழி
போலிப் புன்னகையும்
பொய் வேசங் களுமிட்டு
புத்தர்கள் போல் நடமிடும்
பித்தர்கள் சூழ் உலகமதில்
ஏளனமாய்ப் பேசியவர் முன்
ஏக்கங்களோடு கை கட்டி
வாய் முடி நிற்காமல்
ஆர்பரித் தெழும் கடலலையென
பொங்கி யெழுந் திடவே
பழையன கழி போகியின் வழி
காலக் கடிகாரமது இதயத்
துடிப்பையும் விஞ்சி மிஞ்சி
ஓடிக் கொண்டி ருக்கவே
இன்னல்களில் மூழ்கி நீயும்
இருட்டரைக்குள் அடைந் திடாமல்
இருட்டைப் பிளந்து வெளிவரும்
வெளிச்சக் கீற் றென
நம்பிக்கையின் வேர் பற்றி
விருட்சமாகி முன்னே றிடவே
பழையன கழி போகியின் வழவழி
கண்களில் நீர் சுரக்க
மனமெங்கும் உதிரம் சொட்ட
துரோகங்களால் துண்டாடப் பட்டு
திண்டாடும் நிலை வரினும்
அறியாமை இருள் அகற்றி
அகிலம் போற்ற உயர்ந்திடவே
ஆனந்தம் கொண்டிடவே
பழையன கழி போகியின் வழி
தீய மனங் கொண்டவனும்
தூய அன்பில் மாறிடவே
தன் கடமை மறந்திங்கு
தரிகெட்டுத் திரிவோரும்
தன் நிலை தானுணர்ந்து
தன்மை யோடு நடந்திடவே
சாதி மத பேதங்களால்
சச்சரவு செய் பவனும்
சண்டைகளை நிறுத்தி விட்டு
சமாதானம் ஆகிடவே
துன்பங்களை துரத்தி யடித்து
இன்பங்களை நிலை நிறுத்திடவே
பழையன கழி போகியின் வழி
வியர்வை யதை முத்தாக்கி
உலகிலுள்ள உயிர்கள் யாவும்
பசியாற உண வளித்த
உழவனையும் உழவினையும்
போற்றிப் புகழ்ந்திடவே
இயற்கை விவசாய மதை
பேணிக் காத்திடவே
தை பிறக்கும் பொழுதினிலே
நல்வழி பிறக்கும் நம்பிக்கையோடு
பழையன கழி போகியின் வழி
இன்னுமிங்கு நிலைத் துள்ள
ஏற்றத் தாழ்வுகளைப் போக்கி
திசை யெங்கும் பறையடித்து
தமிழர் மாண்பை பாடிடவே
ஆம். . .
திசை யெங்கும் பறையடித்து
தமிழர் மாண்பை பாடிடவே
பழையன கழி போகியின் வழி
#இனிய_போகி_நல்வாழ்த்துகள்
*ரேணுகா ஸ்டாலின்*
Post a Comment