துவரம்பருப்பு சோறு (திருநெல்வேலி பருப்பு சோறு) - Toor Dal Rice
தேவையான பொருட்கள்
1 கப் புழுங்கல் அரிசி
1/4 கப் துவரம்பருப்பு
சிறிய எலுமிச்சை அளவு புளி
1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
2.75 கப் தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
உப்பு தேவையான அளவு
அரைக்க
10 சின்ன வெங்காயம்
7 பூண்டு பற்கள்
1 டீஸ்பூன் சீரகம்
7 காய்ந்த மிளகாய்
2 பச்சை மிளகாய்
5 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
தாளிக்க
1/2 டீஸ்பூன் கடுகு
1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
2 வெங்காய வடகம் அல்லது 2 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்
20 கறிவேப்பிலை
செய்முறை
1. துவரம்பருப்பை கழுவி சிறிது நேரம் ஊறவைக்கவும். அரிசியையும் கழுவி சிறிது நேரம் ஊறவைக்கவும். புளியை இளம் சூடான நீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
2. குக்கரில் நேரடியாக ஊறவைத்த துவரம்பருப்பை சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.
3. அவை வேகும் போது தேங்காய் துருவல், சின்ன வெங்காயம், மிளகாய் வற்றல், பச்சை மிளகாய், பூண்டு பற்கள் மற்றும் சீரகம் சேர்த்து நன்கு கெட்டியாக அரைக்கவும்.
4. துவரம்பருப்பு பாதி வெந்ததும் அரிசியையும் சேர்த்து நன்கு கலந்து 1 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
இப்போது புளியை 1 கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். இந்த புளிக்கரைச்சலோடு அரைத்த தேங்காய் விழுது சேர்த்துக் கொள்ளவும்.
5. பின் அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
6. அரிசி பாதி வெந்ததும் கரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காய வடகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வாசம் வரும் வரை தாளித்து வெந்து கொண்டிருக்கும் சாதத்தில் போட்டு நன்கு கலந்து மூடி வைத்து மிதமான சூட்டில் 7 நிமிடங்கள் அல்லது 2 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும்.
7. அதில் இருக்கும் ஆவி தானாக அடங்கியதும் குக்கரை திறந்து சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து இறக்கவும்.
இதற்கு அப்பளம், வத்தல் மற்றும் நார்த்தங்காய் ஊறுகாய் வைத்து பரிமாறவும்.
#southindianreceipe #receipeintamil #samayal
Post a Comment