இந்த பதிவை ஒருவர் படிக்கிறார் எனில் அதற்கு அவர்கள் நற்காரியங்கள் செய்திருக்க வேண்டும்

இந்த பதிவை ஒருவர் படிக்கிறார் எனில் அதற்கு அவர்கள் நற்காரியங்கள் செய்திருக்க வேண்டும்


"எவன் ஒருவன் சைவனானாலும், வைஷ்ணவனானாலும், சாக்தனானாலும், காணாபத்யனானாலும், சௌரனானாலும் இறக்கும் தருவாயில் சிரசில் ருத்ராட்ஷத்தை தரித்திருப்பானாகில், எல்லா பாபங்களினின்றும் விடுபட்டு மறு பிறவியில் சகல சுகங்களையும் அனுபவித்து மோக்ஷத்தை கிரமமாய் பெறுவான்"..

பத்ம புராணத்தில் பரமேஸ்வரன் தன் குமாரனாகிய கார்திகேயனுக்கு ருத்ராக்ஷத்தின் மகிமையை வர்ணிக்கிறார்.

 ருத்ராக்ஷத்தைப் பார்ப்பது லக்ஷம் பங்கு புண்ணியாமானால், அதனை அணிவது அதினினும் 10 கோடி பங்கு புண்ணியத்தைப் பயக்கும்.

ருத்ராட்சம் தீர்த்தங்களிலும் விசேஷமான தீர்த்தம் என கருதப்படுவதால் அதை அணிந்து கொண்டு செய்யும் பூஜை, ஜபம், தானம், பிதுர்கடன்கள் எல்லாம் நூறு மடங்கு விசேஷ பலனைக் கொடுக்கும்.

 ருத்ராக்ஷத்தால் புனிதமாக்கப்பட்ட நீரை உடலில் தெளித்துக்கொள்ளவேண்டும். ஆகர்ஷண சக்தி பெற்ற இந்த ருத்ராட்சம் அணிபவருக்கு அவர்கள் நல்ல மனிதர்களைச் சந்திக்கையில் அவர்களது நல்ல சக்திகளை ஆகர்ஷிக்கும் சக்தி உண்டாகும்.

இந்த பதிவை ஒருவர் படிக்கிறார் எனில் அதற்கு அவர்கள் நற்காரியங்கள் செய்திருக்க வேண்டும் 

இதை படித்த பின் ருத்ராட்சம் அணிந்துகொள்வர் எனில் இறைவன் அவர்கள் மீது கருணை செய்திருக்க வேண்டும் 

ஏனெனில் ருத்ராட்சம் அணிந்து இருப்பவர்கள் அனைவரும் சிவ குடும்பமே சிவ குடும்பத்தில் ஒருவர் ஆவார். 

பூர்வ ஜென்மத்தில் ஒரு ஆன்மா புன்னியம் செய்திருந்தால் தான் ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும் .

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிதுபல பிறவிகள் எடுத்த பிறகே இந்த மானிடப்பிறவியை அடைகிறோம்.

சிவபுராணத்தில் "புல்லாகிப், பூடாய்ப், புழுவாய், மரமாகிப், பல்விருகமாகிப்,

பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப், பேயாய்க்

கணங்களாய் வல்லசுரர், ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ

நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்

எம்பெருமான் மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்!

என்ற பாடல் வரிக்கேற்ப நாம் பல பிறவி கஷ்டங்களை கடந்து வந்துள்ளோம். உலகில் மொத்தம் 84 நான்கு லட்சம் உயிரினங்கள் உள்ளது அதில் கடைசி பிறப்பு தான் மானிட பிறவி.

ஒரு அறிவு புல் பூண்டு மரம் செடி கொடிகள்!

இரண்டு அறிவு நீரில் வாழ்பவை மீன் தவளை முதலை நண்டு!

மூன்று அறிவு நிலத்தில் ஊர்பவை பாம்பு பல்லி ஓணான்!

நான்கு அறிவு வானில் பறப்பவை மயில் குயில் கழுகு புறா காகம்!

ஐந்து அறிவு ஆடு மாடு சிங்கம் புலி யானை எருமை நாய் பூனை!

ஆறு அறிவு ஆண் பெண், திருநங்கை

என்று இந்த ஆறு அறிவும் ஒன்று முதல் எண்பத்தி நான்கு லட்சம் முடிய பிறந்து இறந்து இறந்து பிறந்து 8399999 வரை மற்ற உயிரினங்களாக வாழ்ந்து 8400000 லட்சம் எண்ணும்போது தான் மானிடப் பிறவி

 அதுவும் 8399999 இறந்த பிறந்து வாழும்போது இதில் ஏதாவது ஒரு பிறப்பில் புண்ணிய காரியம் செய்து இருந்தால்தான் மானிட பிறவி கிடைக்கும் அப்படி பட்ட அரிதான மனித பிறவி எடுத்து பிரயோஜனம் இல்லாமல் போய்விடகூடாது

 என்பதற்காகத்தான் இறைவன் நம்மீது கருணை கொண்டு தேவர்களுக்கு கூட கிடைக்காத மஹா பொக்கிஷம்மான திருநீறு ருத்ராட்சம் பஞ்சாட்சரம் அருளியுள்ளார் ..

சிலர் சொல்லுவார்கள் சுத்தமாக இருப்பவர்கள் தான் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று?

ஆம் சுத்தம் என்பது மனதை சுத்தமாக வைத்துக்கொள்வது பிறர்க்கு துன்பம் தராமல் இருப்பது பிறரின் சொத்துக்களை அபகரிப்பது பொறாமை படுவது கொலை கொள்ளை கற்பழிப்பு திருடுவது நம்பிக்கை துரோகம் செய்வது பிறருக்கு தண்டனை தருவது தண்டிப்பது பொய் சாட்சி சொல்வது

 இதைப்போன்ற சுத்தம் இல்லாத மனிதநேயம் இல்லாத காரியங்கள் செய்பவர்கள் தான் ருத்ராட்சம் அணிய கூடாது.

தர்மம் மனிதாபிமானம் மரியாதை கனிவு அன்பு கருணை பக்தி பிரதோஷம் அன்று ஆலயம் செல்வது இதுபோன்ற நல்ல நற்காரியங்களை செய்பவர்கள் ருத்ராட்சம் கண்டிப்பாக 1000000000000000% மடங்கு அணியலாம் நாம் பிறந்ததின் பயனும் பெறலாம்.

உதாரணத்திற்கு 63 நாயன்மார்கள் பெரியபுராணம் படியுங்கள் தெளிவு கிடைக்கும் வெற்றி நிச்சயம்.

திருநீறு (நெற்றியில்) தரித்தல் 

ருத்ராட்ஷம் (கழுத்தில்) அணிதல்

பஞ்சாட்சர மந்திரம் (ஓம் நமசிவாய மனதில்) உச்சரித்தல் 

இம்மூன்றும் ஒருவர் ஒரு சேரச் செய்வார் எனில் அவர்கள் இல்லத்தில் ஐஸ்வர்யங்கள் பெறுகும் இறைவனின் (சிவபெருமானின்) கருணை கிடைக்கப்பெறும்.

4 முகம் 5முகம் 6முகம் ருத்ராட்சம் எங்கு வாங்கினாலும் ஒரிஜினல்ளாகத் தான் இருக்கும் ஏனெனில் அதன் விலை 5ருபாய் முதல் 15ருபாய் வரைதான்.

0/Post a Comment/Comments