பருப்பு உருண்டை குழம்பு
துவரம் பருப்பு - 200 gram
சின்ன வெங்காயம் - 20
பச்சை மிளகாய் - 3
மல்லி இலை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - 1/2 spoon
உப்பு - - 1/2 spoon
பருப்பு உருண்டை செய்முறை :
பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து வழுவழுப்பாக அரைத்து கொள்ளவும்.
சின்னவெங்காயம், பச்சை மிளகாய்,கருவேப்பிலை,கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரைத்த பருப்பு, நறுக்கிய பொருள்கள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
குழம்பு செய்முறை :
நல்லெண்ணெய் 50 கிராம் ஊற்றி பெருஞ்சீரகம்,கரு வேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் 10 பல் பூண்டு, 15 சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.
வதங்கியவுடன் 4 ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் போட்டு பச்சை வாசனை போக வதக்கி அதனுடன் நறுக்கிய 2 தக்காளி பேட்டு வதக்கவும்.
நெல்லிக்காய் அளவு புளி ஊற வைத்து அதனை கரைத்து வதங்கிய மசாலாவுடன் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் கால் மூடி தேங்காய் அரைத்த விழுது, உப்பு ,குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
இந்த குழம்பு கொஞ்சம் தண்ணியா தான் இருக்க வேண்டும்.
உருண்டை வெந்து வரும் போது சிறிது கரைந்து குழம்பு கெட்டியாகி விடும்.
குழம்பு கொதித்து பச்சை வாசனை போனவுடன் பருப்பு உருண்டையை சின்ன சின்னதாக உருட்டி குழம்பில் போட வேண்டும்.
பருப்பு உருண்டை வெந்தவுடன் மேல் எழும்பி வரும் கரண்டி விட்டு கிளர வேண்டாம். மிகவும் சுவைாயான பருப்பு உருண்டை குழம்பு ரெடி.
Post a Comment