Kubera Mantra Lyrics in Tamil | செல்வம் பெருக குபேர மந்திரங்கள்
108 குபேரர் போற்றி : கோடீஸ்வர வாழ்வு தரும் மந்திரம்
மகாலட்சுமியின் அருளைப் பெற்று, செல்வத்திற்கு அதிபதியானவர் குபேரர். திருப்பதி ஏழுமலையானுக்கே கடன் கொடுக்கும் அளவிற்கு செல்வத்திற்குரிய அதிதேவதையாக விளங்குகிறார் குபேரர்.
செல்வ வளம் பெருகுவதற்கும், மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கும் உகந்த நாட்களான அட்சய திருதியை, வெள்ளிக்கிழமை உள்ளிட்ட நாட்களில் குபேரை அல்லது லட்சுமியுடன் இருக்கும் லட்சுமி குபேரரை வழிபட்டால் வாழ்வில் என்றும் குறையாத செல்வத்தை பெற முடியும்.
1. அளகாபுரி அரசே போற்றி
2. ஆனந்தம் தரும் அருளே போற்றி
3. இன்பவளம் அளிப்பாய் போற்றி
4. ஈடில்லாப் பெருந்தகையே போற்றி
5. உகந்து அளிக்கும் உண்மையே போற்றி
6. ஊக்கம் அளிப்பவனே போற்றி
7. எளியோனுக்கு அருள்பவனே போற்றி
8. ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி
9. ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி
10. ஒன்பது நிதி பெற்றவனே போற்றி
11. ஓங்கார பக்தனே போற்றி
12. கருத்தில் நிறைந்தவனே போற்றி
13. கனகராஜனே போற்றி
14. கனகரத்தினமே போற்றி
15. காசு மாலை அணிந்தவனே போற்றி
16. கிந்நரர்கள் தலைவனே போற்றி
17. கீர்த்தி அளிப்பவனே போற்றி
18. கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி
19. குருவாரப் பிரியனே போற்றி
20. குணம் தரும் குபேரா போற்றி
21. குறை தீர்க்கும் குபேரா போற்றி
22. கும்பத்தில் உறைபவனே போற்றி
23. குண்டலம் அணிந்தவனே போற்றி
24. குபேர லோக நாயகனே போற்றி
25. குன்றாத நிதி அளிப்பாய் போற்றி
26. கேடதனை நீக்கிடுவாய் போற்றி
27. கேட்டவரம் அளிப்பவனே போற்றி
28. கோடி நிதி அளிப்பவனே போற்றி
29. சங்க நிதியைப் பெற்றவனே போற்றி
30. சங்கரர் தோழனே போற்றி
31. சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி
32. சமயத்தில் அருள்பவனே போற்றி
33. சத்திய சொரூபனே போற்றி
34. சாந்த சொரூபனே போற்றி
35. சித்ரலேகா பிரியனே போற்றி
36. சித்ரலேகா மணாளனே போற்றி
37. சிந்தையில் உறைபவனே போற்றி
38. சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி
39. சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி
40. சிவபூஜை பிரியனே போற்றி
41. சிவ பக்த நாயகனே போற்றி
42. சிவ மகா பக்தனே போற்றி
43. சுந்தரர் பிரியனே போற்றி
44. சுந்தர நாயகனே போற்றி
45. சூர்பனகா சகோதரனே போற்றி
46. செந்தாமரைப் பிரியனே போற்றி
47. செல்வ வளம் அளிப்பவனே போற்றி
48. செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி
49. சொர்ணவளம் அளிப்பவனே போற்றி
50. சொக்கநாதர் பிரியனே போற்றி
51. சௌந்தர்ய ராஜனே போற்றி
52. ஞான குபேரனே போற்றி
53. தனம் அளிக்கும் தயாபரா போற்றி
54. தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி
55. திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி
56. திருவிழி அழகனே போற்றி
57. திருவுரு அழகனே போற்றி
58. திருவிளக்கில் உறைவாய் போற்றி
59. திருநீறு அணிபவனே போற்றி
60. தீயவை அகற்றுவாய் போற்றி
61. துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
62. தூயமனம் படைத்தவனே போற்றி
63. தென்னாட்டில குடி கொண்டாய் போற்றி
64. தேவராஜனே போற்றி
65. பதுமநிதி பெற்றவனே போற்றி
66. பரவச நாயகனே போற்றி
67. பச்சை நிறப் பிரியனே போற்றி
68. பவுர்ணமி நாயகனே போற்றி
69. புண்ணிய ஆத்மனே போற்றி
70. புண்ணியம் அளிப்பவனே போற்றி
71. புண்ணிய புத்திரனே போற்றி
72. பொன்னிற முடையோனே போற்றி
73. பொன் நகை அணிபவனே போற்றி
74. புன்னகை அரசே போற்றி
75. பொறுமை கொடுப்பவனே போற்றி
76. போகம்பல அளிப்பவனே போற்றி
77. மங்கல முடையோனே போற்றி
78. மங்களம் அளிப்பவனே போற்றி
79. மங்களத்தில் உறைவாய் போற்றி
80. மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி
81. முத்து மாலை அணிபவனே போற்றி
82. மோகன நாயகனே போற்றி
83. வறுமை தீர்ப்பவனே போற்றி
84. வரம் பல அருள்பவனே போற்றி
85. விஜயம் தரும் விவேகனே போற்றி
86. வேதம் போற்றும் வித்தகா போற்றி
87. வைர மாலை அணிபவனே போற்றி
88. வைகுண்டவாசப் பிரியனே போற்றி
89. நடராஜர் பிரியனே போற்றி
90. நவதான்யம் அளிப்பவனே போற்றி
91. நவரத்தினப் பிரியனே போற்றி
92. நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி
93. நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி
94. வளம் யாவும் தந்திடுவாய் போற்றி
95. ராவணன் சோதரனே போற்றி
96. வடதிசை அதிபதியே போற்றி
97. ரிஷி புத்திரனே போற்றி
98. ருத்திரப் பிரியனே போற்றி
99. இருள் நீக்கும் இன்பனே போற்றி
100. வெண்குதிரை வாகனனே போற்றி
101. கைலாயப் பிரியனே போற்றி
102. மனம் விரும்பும் மன்னவனே போற்றி
103. மணிமகுடம் தரித்தவனே போற்றி
104. மாட்சிப் பொருளோனே போற்றி
105. யந்திரத்தில் உறைந்தவனே போற்றி
106. யௌவன நாயகனே போற்றி
107. வல்லமை பெற்றவனே போற்றி
108. ரத்தின மங்கலத்தில் உறைந்தானே போற்றி
108 குபேரா போற்றி போற்றி.
கீழே குறிப்பிட்டுள்ள குபேர மந்திரத்தை நாள்தோறும் குறைந்தது 7 முறை உச்சரித்துக் குபேர தேவனை வேண்டுங்கள் குபேர உறவு வாய்க்கும்.
ஓம் …..ஹ்ரீம்….க்ளீம்சௌம்…..ஸ்ரீம்……கும் குபேராய…… நரவாகனாயயக்ஷ ராஜாய…… தன தான்யாதிபதியே… லக்ஷ்மி புத்ராய……ஸ்ரீம்… ஓம்… குபேராய நமஹ.
வெள்ளிக்கிழமைகளில் பூவும் காசும் சமர்ப்பித்து 108 குபேரன் போற்றி சொல்லிக் குடும்பத்துடன் வணங்கி வந்தால் வருமானம் பெருகும்…
குபேரன் மந்திரங்கள்
குபேரன் மூல மந்திரம்:
ஒம்ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லஷ்மி குபேராய நம:
குபேரன் துதி:
ஒம் குபேரம் மநு ஜாசினம் ஸகர்வம் கர்வ விக்ரஹம்
ஸ்வர்ணச்சாயம் கதா ஹஸ்தம் உத்தராதிபதிக் ஸ்மரேத்
பொருள்: குபேரனே,நர வாகனனே, வடதிசைக்கதிபனே,கதாயுதனே,விருப்பங்கள்
அனைத்தையும் அளிப்பவனே உன்னைத் தியானிக்கிறேன்.
ஒம் ஸ்ரீ யஷ ராஜாய குபேராய வைச்ரவணாய
தன தான்யாதிபதயே தனதான்யஸம் ருதிம்மே
தேஹி தாபய தாபஸ ஸ்வாஹா !!
பொருள்: யட்சராஜனே,குபேரனே,விச்ரவசின் புதல்வனே,செல்வங்களின் அதிபதியே என் அவசியமான தேவைகளை நிறை வேற்றிக் கொள்ள தேவையான செல்வத்தை எனக்கு அருளச் செய்வீராக.
ஒம் க்லீம் ல்ஷ்மி குபேராய தனதான்யாதிபதயே
மம ஐஸ்வர்யம் தனதான்ய விருத்திம் குருகுரு ஸ்வாஹா!!
பொருள்: ஸ்ரீ மகாலஷ்மியின் பூரண அருள் பெற்ற குபேரனே,எனது
வறுமை நீங்கிட தேவையான செல்வத்தை அளிப்பீராக.
குபேர வழிபாடு செய்ய நினைப்பவர்கள் செப்புத் தகட்டில் செய்யப்பட்ட குபேர எந்திரத்தை வாங்கி வந்து வெள்ளிக்கிழமைகளில் குபேர எந்திரத்தின் நான்கு முனைகளிலும் மஞ்சள், சந்தனம் மற்றும் குங்குமம் இட்டு, பூக்கள் சாற்றி, எந்திரத்திற்கு முன்பாக ஒரு தட்டில் சிறிது மஞ்சள் அட்சதை அரிசியை வைத்து தூபங்கள் கொளுத்தி, குபேர காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதித்து வருவதால் நீங்கள் விரும்பிய பணவரவு அதிகரிக்கும். செல்வம் பெருகும்.
குபேர காயத்ரி :
ஒம் யஷேசாய வித்மஹே
வைஸ்ரவனாய தீமஹி
த்ந்நோ ஸ்ரீத: ப்ரசோதயாத்…
குபேரனின் தியானம்:
மநு ஜவாஹ்ய விமாந வரஸ்திரம் கருடரத்ந
நிபம் நிதி தாயகம் சிவசகம் முகுடாதி விபூஷதம்
வரகம் தந்தம் பஜ துந்திலம்
பொருள்: மனிதர்களால் தாங்கப்படும் விமானத்தில் வருபவரும், கருடன் கண் போன்ற ரத்னம் அணிந்தவரும், நிதிகளின் தலைவரும் சிவபெருமானின் தோழருமான குபேரனை துதிக்கின்றேன்.
செவ்வாய்க் கிழமைகளில் இந்தத்துதியை 12 முறை கூறி வெங்கடாசலபதிக்கு துளசி அர்ச்சனை செய்து வந்தால் லட்சுமி குபேரனைப் போல தனவந்தர்கள் பொருள் உதவி செய்வார்கள்.
ஓம் ஸ்ரீம் ஓம்ஸ்ரீம் க்லீம்ஸ்ரீம்
விநேஸ்வராய நம!”
இந்த மந்திரத்தை தினம் 1008 வீதம் ஜெபித்து ஒரு லட்சம் ஒரு ஜெபித்து விட தரித்திரம் விலகி செல்வ நிலை உயரும் என்பது சாஸ்திரக் கருத்து.
“ஓம் யஷாய குபேராய வைஸ்ரவணாய
தனதான்யாதிபதயே தனதான்ய
ஸம்வ்ருத்திம்மே தேகி தாபய ஸ்வாஹா”
விஷ்ணு சகஸ்ரநாமத்தில் குபேர நிதி சேர்த்துத் தரும் மகா மந்திரம் 46-வது அனுவாகமாக (மந்திரப் பகுதி) வருகிறது. சனிக்கிழமை செவ்வாய்க் கிழமைகளில் இந்தத்துதியை 12 முறை கூறி திருப்பதி வெங்கடாசலபதி (பழைய மூலவர் கருப்பு படத்திற்கு)க்கு துளசி அர்ச்சனை செய்து வந்தால் லட்சுமி குபேரனைப் போல தனவந்தர்கள் பொருள் உதவி செய்வார்கள்.
“விஸ்தாரஸ் ஸ்தாவரஸ்தாணு: ப்ரம்மாணம்
பீஜமவ்யயம் அர்த்தோ நர்த்தோ
மகாகோசோ மகாபோகோ மகாதந:”
செல்வம் சேர வழிமுறைகள்:
வந்த செல்வத்தை மதித்துப் போற்றுங்கள்.
வராத வருமானத்தை எண்ணி ஏங்காதீர்கள்.
அவற்றின்மீது ஆசை வைக்காதீர்கள்.
பணம் வந்தால் வாய்பிழந்த ஏழைகளுக்கு வாரி வழங்கி வள்ளலாவேன்! என்று இறைவனிடம் திரும்பத் திரும்பக் கூறுங்கள்.
குபேர வாசலைத் திறந்து விடுவார்.
வரவு-செலவுக் கணக்கை, முறையாய் வைத்திருப்போர்க்குக் கணக்கின்றி செல்வம் வழங்க வேண்டும்! என்பது தெய்வச் சட்டம்.
கணக்கு வைத்து வாழுங்கள்.
கணக்கின்றிச் செல்வம் குவியும்.
பணத்தைப் பிறரிடம் வழங்கும்போது தலைப் பகுதியியை நம் பக்கம் வைத்தபடி வழங்கிப் பிரியா விடைதரவும்.
வாடகை….. பலசரக்கு…. பால்பாக்கி… எனப் பணத்தைப் பிறருக்கு வழங்கும்போதெல்லாம், சீக்கிரம் வேறு வழியில் என்னிடம் வந்து சேர்! எனப் பிரியா விடை கொடுத்து அனுப்புங்கள்.
ஈரம், ஈரத்தை ஈர்ப்பதுபோல் ஏற்கனவே இருக்கும் பணம்தான் புதிய பணத்தை ஈர்த்து வரும். எனவே பர்சில்… வங்கியில்…. பீரோவில் வறட்சி கூடாது. இருப்புத் தொகை அதாவது குறிப்பிட்ட தொகை இருக்கும்போதே செலவை நிறுத்தி விட வேண்டும். நாள்தோறும் கண்கள் பணத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கும் வகையில் பசுமையைப் பராமரிக்கவும்.
தூய்மையற்ற இடத்திற்குள் திருமகள் நுழைய மாட்டாள். வீடு…. அலுவலகம்… கல்லாப்பெட்டி….. பணப்பை…. எனச் செல்வம் புழங்கவேண்டிய இடங்களை எப்போதும் தூய்மையாக வைத்துப் பராமரிக்கவும்.
வணிகத்தை… தொழிலை…. அலுவலகப் பணியை மனமலர்ச்சியுடன் விளையாட்டகச் செய்யுங்கள். சிரிப்பவர்களைப் பார்த்தே செல்வ லட்சுமி வருகிறாள். சிடுமூஞ்சிகளையும் அழுமூஞ்சிகளையும் பார்த்து மூதேவிதான் விரும்பி வருகிறாள். சிரித்து வாழுங்கள். சிரிப்பவர்களுடன் சேர்ந்து வாழுங்கள்.
குபேர லிங்கம் படத்தைப் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பண வருமானம் குறையாது.
தீராத துன்பங்கள் இதனால் நீங்கப் பெற்று வாழ்வில் சுபீட்சம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், ஊதிய உயர்வு, பதவி உயர்வுக்காக காத்துக் கொண்டிருப்பவர்கள், உங்களுடைய ஏதாவது ஒரு துறை சார்ந்த வளர்ச்சியை நோக்கி பயணிப்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள், சாதிக்க நினைப்பவர்கள் இந்த மந்திரத்தை தினம்தோறும் ஏழு முறை உச்சரித்தால் நல்ல வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் உண்டாகும். குபேர தேவன் செல்வத்தை மட்டுமல்ல நம்முடைய வாழ்க்கையில் நாம் அடைய வேண்டிய உயரத்தையும், வளர்ச்சியையும் தீர்மானிக்கிறார். நம்முடைய வளர்ச்சியே செல்வ வளத்தையும் நிர்ணயிக்கிறது.
குபேர தேவன் படத்தை வீட்டில் வைத்து 108 முறை செல்வம் தரும் குபேர போற்றிகளை வெள்ளிக் கிழமைகளில் குடும்பத்தோடு அமர்ந்து பூஜை அறையில் குபேரனுக்கு வாசனை மிக்க மலர்களாலும், நாணயங்கள் கொண்டும் அர்ச்சனை செய்து வந்தால் சகல யோகங்களையும் பெறலாம். குடும்பத்தோடு குபேரனை வழிபடும் பொழுது அதற்குரிய பலன்களும் தனித்துவமானவை. இதற்கு பெரும்பாலும் பலரும் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. ஆனால் இதை செய்து பார்த்தால் நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்பது சாஸ்திர நியதி. முயற்சி செய்து பயன் அடையுங்கள்.
Post a Comment