ஹைக்கூ - Hykoo ஹைக்கூ போட்டி 155ன் வெற்றியாளர்கள் ஹைக்கூ

 .


ஹைக்கூ போட்டி 155 ன் வெற்றியாளர்கள் ஹைக்கூ கவிதைகள் 


1. பள்ளிச் சீருடையில் மாணாக்கர்கள்

 ஒற்றுமையை வெளிப்படுத்தும் 

 மிதிவண்டியின் வேகம்  


     பாண்டிச்செல்வி கருப்பசாமி 


2. தும்பைப்பூக்கள் 

வயல்வெளியில் வரிசையாய் 

சீருடையில் மாணவர்கள்


     புதுகை ஆதீரா


3. பள்ளி விடுமுறை

மாணவர்களுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி

இலவச சைக்கிள்


     மு.நாகராஜன்


4. மிதிவண்டிகளின் அணிவகுப்பு  

சீருடையில்    பயணிக்கிறார்கள்  

பள்ளி   மாணவர்கள்   

            

     அ .ஜேசுலாஸ் லெலிஸ் 

                          

5. சீருடையில்  பயணம் 

சீராகச் செல்கிறது 

சமத்துவம் 


     செந்தூர் குமார்


6. பள்ளிக்கு காலதாமதம்

அதிகமாகிக் கொண்டே போகிறது 

மிதிவண்டியின் வேகம்


      கோவை ஆறுமுகம்


7. மிதிவண்டிப் பயணம்

மாணவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்

உடற்கல்வி பாடம்


     சோ. ஸ்ரீதரன்


8. இலவச மிதிவண்டி 

முன்னேற்றப் பாதையில் பயணிக்கிறது //

அரசின் திட்டம்


     ஜெ முகம்மது ஹபீபுல்லா


9. மிதிவண்டிப் பயணம் 

மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் 

கோடை விடுமுறை 


       ரேணுகா ஸ்டாலின் 


10. மாணவர் உடை

மிகவும் சீராக இருக்கிறது

மிதிவண்டி வேகம்


    ஜோ.ஜேசு


11. மிதிவண்டி பயணம்

மகிழ்வாய் இருக்கிறது

பள்ளிப் பருவம்


     சிங்கை கார்முகிலன்


12. மிதிவண்டியோடும் நண்பர்கள் 

இடையிடையே வந்து போகும்

மேலெழும்பும் புழுதி


     பழனியாண்டி கனகராஜா


13. மிதிவண்டிப் பயணம்

ஆரோக்கியமாக இருக்கிறது

சுற்றுச் சூழல் 


     க.செல்வகுமார் நெய்விளக்கு


14. மிதிவண்டிப் பயணம்

கிராமத்தில் காணப்படவில்லை

வேகத்தடை


     ஓசூர் மணிமேகலை


15. மாணவர்களின்  சீருடை  

வெண்ணிறத்தில்  அழகாக  காட்சியளிக்கின்றது  

வானில்  மேகம் 


       யோகமலர்  மூர்த்தி  இலங்கை


16. பள்ளிச் சீருடை 

பளிச்சென்று அழகாக இருக்கிறது 

புதிய மிதிவண்டி 


       வள்ளல் இராமமூர்த்தி


17. மிதிவண்டி பயணம் 

மகிழ்ச்சியை தருகிறது

தேர்வின் மதிப்பெண்


         வேலாயுதம்.ந


18. மாணவர்களின் வெள்ளாடை

மனதை மிகவும் கவர்கின்றது

மரத்தில் வெள்ளைப்புறா


       க.செந்தில்குமார் 

         துபாயிலிருந்து


19. மிதிவண்டிப் பயணம்

மிக விரைவாக நடக்கிறது

போட்டிக்கான ஒத்திகை


      கீழ்கரவை குலசேகரன் இலங்கை


20. கிராமத்து வீதி 

இன்னும் திருத்தப்படாமல் இருக்கிறது 

பள்ளிக்கூடக் கூரை 


       அருண் சிவா


21. மிதிவண்டியில்  மாணவர்கள்

சுமந்து  செல்கிறார்கள்

பை நிறைய கனவுகள்


        சு.கேசவன்


22. விரையும் மிதிவண்டி

சட்டென மறைந்து போகின்றது

மஞ்சள் புத்தகப்பை


         தேவேந்திரன் சாமி


23. அரசு பள்ளிகள்

தொடர்ந்து அதிகரித்து வருகிறது

மாணவர்கள் எண்ணிக்கை


        தாஜ்.நியாஜ் அஹமது.துபாய்


24. மிதிவண்டி பயணம்

மாணவர்களிடம் அதிகரித்து இருக்கிறது

மரம் வளர்க்கும் ஆர்வம்


        எ.சீனிவாச வரதன்


25. மிதிவண்டிப் பிரயாணம்

மாணவர் போக்குவரத்தை இலகுவாக்கியுள்ளது

அழுத்தமான பாதை


          எம் ஐ எம் அஷ்ரப்


அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் 


நடுவர் : ஹைக்கூ வித்தகர் கவிஞர் கவிநிலா மோகன் அவர்கள் 

0/Post a Comment/Comments