Hykoo ஹைக்கூ போட்டி எண் 159ன் வெற்றியாளர்கள் ஹைக்கூ கவிதைகள் இதோ 🌹 🌹

 


ஹைக்கூ போட்டி எண் 159ன் வெற்றியாளர்கள் ஹைக்கூ கவிதைகள் இதோ 🌹 🌹 


1. வீசிய உணவுகளை

உண்டு பசியாறுகிறான்

விதவையின் மகன்

        சு.சுசீதா ஆனந்தகுமார்,இலங்கை.


2. உணவின் மிச்சங்கள்

ஆங்காங்கே இருக்கின்றன

பசியில் வயிறுகள்

          எ.சீனிவாச வரதன்


3. சிறுவனின் பசி

மண்சோற்றை உண்ண வைக்கிறது பெற்றோரின் வறுமை

        எம்.அஷ்ரப் இஸ்மாயில்


4. பசி

உண்டுகொண்டு இருக்கிறது

உடலை

        கலை செல்வன், கடலூர்


5. பசியின் கொடுமை

தாங்க முடியவில்லை

வறுமை

          சா.அம்சத் இப்ராகிம் ,திண்டுக்கல்


6. சிறுவனின் பசி

காணாமல் போகிறது

சிதறிய ரொட்டித்துண்டு

           தென்னன்


7. உண்ணும் உணவு

வறுமை நிலையை உணர்த்துகிறது சிறுவனின் சட்டை 

        முனிராம். மு


8. பட்டினி பயணம்

எப்பொழுது முடிவுக்கு வரும்

ஏழையின் கனவு

           மெய்யன் சிதம்பரநாதன், இலங்கை.


9. பசித்த வயிறு

ஏங்க வைக்கிறது

எஞ்சிய உணவு

            ஐ.துஷ்யந்தன் ,இலங்கை


10. சிறுவனின் வறுமை

சிந்திக்க வைக்கிறது

வாழ்வில் ஏழ்மை

           அரிமா ரவிக்குமார் சீத்தாராமன்


11. வீதியின் ஓரத்தில்

வெளிச்சமாய் தோன்றி மறையும் யாசகனின் சந்தோசம்

         காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா


12. பசியின் கொடுமை

தலை தூக்க முடியவில்லை

பஞ்சத்தில் நாடு 

           ஜெ.தேவதாஸ்


13. சிறுவனின் வயிறு 

சுருங்கிய நிலையில் காணப்படுகிறது  மனிதனின் மனநிலை

           கி.புஷ்பராஜ் 


14. விஞ்ஞான வளர்ச்சி

வியக்க வைக்கிறது

பாலகன் பசி

             மாணிக்கம் அருளானந்தம்


15. பசியில் சிறுவன்

வியந்து பார்க்கிறான்

சிதறிகிடக்கும் அன்னம்

             கவிநிலவன் ,வெள்ளகோவில்


16. வீசிய உணவு

பசிக்கு உருசியாக இருக்கிறது

பாற்சோறு

         கீழ்கரவை குலசேகரன் 


17. சிறுவனின் பசி 

அதிகமாகிக் கொண்டு இருக்கிறது

வீணாகும் உணவு 

           துரைசாமி கே.பி


18. இளமையில் வறுமை

மனதைக் கனக்க வைக்கிறது

உணவு விரயம் 

           கோ.கார்த்திகாதேவி


19. சிறுவனின் தேகம்

மெலிந்து காணப்படுகிறது

பசியுடன் நாய்

            வேலாயுதம்.ந சென்னை


20. சோற்றுப் பருக்கை 

தரையில் சிதறிக் கிடக்கிறது

ஏழ்மையின் நிலைமை

          கு.கதிரேசன்


21. கொட்டிய உணவு

குப்பையில் நிறைந்து இருக்கிறது சிறுவனின் பசி

         புதுகை ஆதிரா


22. சிந்திய உணவு

சிந்தனையைத் தூண்டும் எடுத்துச்செல்லும் எறும்புகள்

          தனராஜ் பாப்பணன்


23. வறுமையின் கொடுமையை வார்த்தையால் சொல்ல முடியவில்லை சிறுவனின் பசி/க்ஷ

            முனைவர் கவியருவி ஜோதிபாரதி 


24. பசியின் வீச்சு

பளிச்சென்று தெரிகிறது

சிறுவனின் முகம்

            கவி. செங்குட்டுவன், ஊத்தங்கரை


25. குடும்ப வறுமை

பசியால் வாட வைக்கிறது

தாயின் இழப்பு 

             நிஸ்வா ஸலாம்


26. வறுமையின் கொடுமை

 அவமானமாக இருக்கிறது

மடியும் மனிதநேயம்

             முனைவர். 'கண்மணி'-கண்ணன்


27. கடுமையான பசி

சிறுவனுக்கு வேதனையைத் தருகிறது ஆரோக்கியமற்ற தேகம்

               மு.நாகராஜன் 


அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்

நடுவர் : ஹைக்கூ வித்தகர் கவிஞர் சோ.ஸ்ரீதரன்

0/Post a Comment/Comments