*இன்று நண்பர்கள் தினம்*
நட்பை பற்றி தமிழ் இலக்கியங்கள் அழகாக சொன்னது...
நம்முடைய இதிகாசங்கள் நட்பையே உயர்வாக காட்டூகின்றன...
நட்பு இல்லையேல் உலகே இல்லை என சொன்ன மதம் இந்துமதம்...
ஒரு மனிதனுக்கு பல விஷயங்கள் பெற்றோர் குடும்பம் என பிறப்பில் அமையும், ஒரு சில உறவுகளை அவன் தேடி பெற்றுகொள்ள வேண்டும், அப்படி அமையும் விஷயங்களில் முக்கியமானது நட்பு...
ஒருவனின் விதிபலனை அதுதான் வழிநடத்தும், நட்பு அமைவதை பொறுத்தே ஒருவன் வாழ்வு மாறும், இதனால் நட்பினை எப்பொழுதும் கவனமாக தேர்ந்து கொள்ள வேண்டும் என்றது இந்துமதம்...
அது நட்பிற்கான தத்துவத்தை, அந்த வாழ்வியல் அவசியத்தை தன் இரு இதிகாசங்களிலுமே அழுத்தி சொன்னது...
ராமனுக்கும் குகனுக்குமான நட்பை அது ஆழமாக சொன்னது, நண்பனாய் வருபவனே குருவாகவும் மாறமுடியும் என ராமனுக்கும் ஆஞ்சநேயருக்கும் இடையில் எழுந்த உறவை சொன்னது...
நண்பன் என்பவன் எப்படி இருக்கவேண்டும் என மகாபாரதத்தில் கர்ணனை காட்டிற்ற்று, நட்பு ஒன்றுக்காகவே கடைசிவரை தன் சொந்த ரத்தத்தை எதிர்த்து நட்புக்காய் செத்தான் அந்த அவன் வாழ்வை எக்காலமும் நட்பின் சிகரமாகவே காட்டிற்று...
நல்லவனும் கெட்டவனும் நட்பாலே வழிநடத்தபடுகின்றார்கள் என்பதை அந்த பாரதம் அழகாக காட்டிற்று
நல்ல நண்பனே நல்ல குருவாக ஆகமுடியும் என்பதை கண்ணன் அர்ச்சுணன் நட்பில் மறுபடியும் அம்மதம் காட்டிற்று...
அதே நேரம் மனமொத்து பழகிய இரு நண்பர்கள் பிரிந்தால் அந்த அழிவு அணுபிளக்கும் அணுகுண்டை விட மோசமானது என்பதை துருபதனுக்கும் துரோணருக்குமான நட்பை சொல்லி அந்த நட்பின் பிளவு எவ்வளவு பெரும் விபரீதத்தை கொடுத்தது என்பதையும் சொல்லிற்று...
நண்பர்கள் பிரிய கூடாது என்பதையும் , மற்ற பகைகளைவிட பிரிந்த நண்பர்களின் பகை தீவிரமானது என்பதையும் இந்துமதம் தத்துரீதியாக போதித்தது....
அப்படியே கண்ணன் குசேலன் கதையினை சொல்லி அந்த நட்பின் பெருமையினையும் அது சுட்டிகாட்டிற்று நண்பர்களை எப்படி பெற வேண்டும்?, நட்பை எப்படி தக்கவைக்க வேண்டும் என்பதையே வனவாசத்தின் பொழுது ராமனும், பாண்டவர்களும் செய்தார்கள்...
அந்த நட்பின் பலத்தில்தான் வென்றார்கள்...
ஆம் கண்ணனுக்கும் ராமனுக்குமே நல்ல நண்பர்கள் தேவைபட்ட உலகில் ஒவ்வொருவனும் வெற்றிபெற நல்ல நண்பர்கள் அவசியம் என வலியுறுத்தியது இந்துமதம்...
நண்பர்களில் போஜராஜனும் காளிதாசனும் தனித்து நிற்கின்றார்கள், துரியோதனின் "எடுக்கவோ கோர்க்கவோ" என்ற கள்ளம் கபடமில்லா நட்பில் தன்னையும் இணைத்து கொள்கின்றான் போஜராஜன்...
காளிதாசன் பெரும் கவிஞன் சந்தேகமில்லை, ஆனால் கவிஞர்களுக்குள்ள பலவீனம் அவனுக்கும் உண்டு என தெரிந்தும் அவன் சந்தேகம் கொள்ளவில்லை, தன் மனைவியின் பாராட்டும் ரசனையுமே காளிதாசனின் உந்துசக்தி என தெரிந்தும் அவன் காளிதாசனையோ தன் மனைவியினயோ கொஞ்சமும் சந்தேகிக்கவில்லை
வரலாற்றில் உன்னதமான நட்பு அது...
தமிழக இந்து வாழ்வியலில் எத்தனையோ நட்புகளை இந்துமத வாழ்க்கைமுறை காட்டிற்று
அதனில் கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு உன்னதமானது...
பாரி இல்லாமல் வாழமாட்டேன் என கபிலர் அப்படியே வடக்கிருந்து இறந்த கதையில் தெரிகின்றது தமிழக இந்துக்களின் நட்பு உண்டர்வு...
அதியமானுக்கும் ஒளவைக்குமான நட்பு புறநானூற்று பக்கங்களில் முக்கியமானது, அதுதான் நட்பில் ஆண்பெண் வேறுபாடு இல்லை என்பதை சொல்லிற்று...
ஆண் பெண் நட்பு சாத்தியமா என்பதற்கு முழு இலக்கணம் கொடுத்த மதம் இந்துமதம், அது ஒளவையார் அதியமான் நட்பு என வரலாற்றில் காட்டிற்று....
மிக மிக அழகான நட்பாக பாஞ்சாலிக்கும் கண்ணனுக்குமான நட்பை அது சொன்னது, அவர்களுக்குள் ஒரு நட்பு இருந்தது, அவனை அவள் முழுக்க நம்பினாள்...
அவனும் அவள் தன்னை நம்பியதை அறிந்தும் அறியாதவன் போலிருந்தான்..
வெளியே சிறிய இலை என்றாலும் உள்ளுர அந்த நட்பு மகா பலமாய் இருந்தது, அவனை அவள் நண்பனாய் கருதினாலும் மனதிற்குள் பெரும் இடத்தில் வைத்திருந்தாள்..
அதனாலே அவள் அந்த சபையில் அமானபட்டபோது இனி காக்க யாருமில்லை என்றபோது அவனை நம்பி அழைத்தாள்..
இனி யாருமில்லை என்றபோது தான் நம்பிய பலமெல்லாம் உடைந்துவிட்டு நிர்கதியாய் நின்றபோது அவள் யாரை அழைத்தாளோ அதுதான் அந்த இடம்தான் நட்பின் வலிமையான இடம்..
அந்த இடத்தை உணர்ந்துதான், அவள்தன் மேல் கொண்ட நம்பிக்கையினை உணர்ந்து புரிந்துதான் அவளை காத்தான் கண்ணன்..
அதுமட்டுமன்றி அவள் சபதம் நிறைவேற கடைசிவரை நின்று தன் வியூகத்தால் போரை நடத்தி அவள் கணவர்களை காத்து அவள் கடைசியில் துச்சாதனின் ரத்தம் பார்த்து துரியனின் சாவை கண்டு நிம்மதி கொண்டு கூந்தலை முடியும் வரை கூட இருந்தவன் அவனே...
அதுதான் நட்புகளில் உன்னதமானது..!!
துரியனுக்கும் கர்னனனுக்கும் வந்தது ஆச்சரியமல்ல, கண்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் நட்பு வந்ததும் வியப்பல்ல..
ஆனால் பாஞ்சாலிக்கும் கண்ணனுகக்கும் வந்த நட்புதான், அந்த மிக மிக தூய்மையான உண்மையான நட்புதான் பாரதம் எனும் கதையினையே தாங்கி நடத்திற்று..
கர்ணனுக்கும் துரியனின் மனைவிக்கும் தூய்மையான நட்பு இருந்தது, அதை மதித்து கொண்டாடும் அளவு துரியனும் இருந்தான் என்பது பாரதம் காட்டும் இன்னொரு கோணம்..
மகாபாரதம் முழுக்க ஏகபட்ட நட்புக்களை பார்த்தாலும் கதையின் முத்தாய்ப்பான நட்பு பாஞ்சாலிக்கும் கன்னனுக்குமான நட்பே...
காளிதாசனுக்கும் போஜராஜனின் மனைவிக்கும் அப்படி ஒரு ஆத்மமான நட்பு இருந்ததை வரலாறு சொல்கின்றது, அந்த நட்புதான் அவனை அந்த அளவு காவியங்களை எழுத வைத்தது...
ஆண் பெண் நட்புக்கும் இலக்கணம் வகுத்ததும், அப்படி நட்பு பெரும் வரம் பெரும் ஆதாரம் என சொன்னதும் இந்துமதமே..
கண்ணன் என்பவன் கடவுளாய் இருக்கலாம் ஆனால் அவன் தன்னை நிரூபிக்க வாய்ப்பினை அவன் தோழி பாஞ்சாலிதான் உருவாக்கி கொடுத்தாள், அவளின்றி அவன் இல்லை...
அவள்தான் அவனை அழைக்கவேண்டிய நேரம் அழைத்து அந்த வாய்ப்பினை கண்ணனுக்கு கொடுத்தாள்...
காளிதாசனுக்கு அவனின் ஆத்ம தோழி கொடுத்தாள் பாஞ்சாலியினை கண்ணன் அணு அணுவாய் புரிந்திருந்தான், அவள் அவனைவிட அவனை யார் என தெரிந்திருந்தாள்...
அந்த புரிதல்தான், அந்த மிக மிக அடிப்படையான புரிதல்தான் அந்த நட்பினை வரலாற்றில் நிற்கும்படி செய்தது, அவளை ஒரு இடத்திலும் அவன் சுமையாக கருதியதில்லை அவளும் அவனை எந்நொடியிலும் சந்தேகித்ததுமில்லை..
அப்படிபட்ட தோழமைகள் அமைவதெல்லாம் வரம், அமைந்தவர்கள் இந்த உலகில் பாக்கியசாலிகள், அவர்களை போல் நிறைவானவர்கள் வேறு யாருமில்லை, அதைவிட வேறொன்று வாழ்வில் தேவையுமில்லை...
Post a Comment