கோகுலாஷ்டமி வழிபடுவது எப்படி?


கோகுலாஷ்டமி  வழிபடுவது எப்படி?

ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திர நாளில் கோகுலாஷ்டமி வருகிறது. கிருஷ்ணர் அஷ்டமி திதியன்று நள்ளிரவில் பிறந்ததால் - என்று அஷ்டமி நள்ளிரவில் வருகிறதோ அன்று கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது. 🌙✨ ரோகிணி நட்சத்திரமும், அஷ்டமியும் சேர்ந்து வந்தால் அது இரட்டிப்பு சந்தோஷத்தை தரும். 😊🎊

கோகுலாஷ்டமி வழிபாடு 🙏🛕

கோகுலாஷ்டமி நாளன்று வீட்டின் வாசலிலிருந்து பூஜை அறை வரை அரிசி மாவை நீரில் கரைத்து அந்த மாவைக் கொண்டு சிறு குழந்தையின் காலை வரைவதற்கு குழந்தை கிருஷ்ணர் வீட்டிற்குள் வருவதாகப் பொருள். 👣🏡

கோகுலாஷ்டமி தினத்தன்று கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். 🛕 கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக கூறப்படுவதால் நள்ளிரவு 12 மணிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். ⏰

அன்றைய தினம் கிருஷ்ணனுக்கு மலர் மாலைகள் சூட்டி வழிபடும் போது துளசி மாலையும் அணிவிப்பது சிறந்தது. 🌸🌿

பண்டிகையின் தத்துவம் 🕉️

அறிவாற்றல், நற்புத்தி, நேர்மை, சமயோசித புத்தி ஆகியவற்றின் மொத்த வடிவமான பகவானை வழிபட்டு அவர் காட்டிய கீதையை பின்பற்றுவதே இப்பண்டிகையின் தத்துவம். 🧠📖

கண்ணன், முகுந்தன், கோபால கிருஷ்ணன், நந்த கோபாலன் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் குழந்தைக் கிருஷ்ணனை, கோகுலாஷ்டமி தினத்தன்று நாமும் நம் வீடுகளில் வரவேற்று, வாழ்வில் வளம் பெறுவோம்! 🧑‍🍼🌺🙏

என்ன செய்ய வேண்டும்? 

🌾 கிருஷ்ண ஜெயந்தியன்று காலை லட்சுமியின் அம்சமான பசுவுக்கு உணவளிக்க வேண்டும். பூஜை அறையில் கண்ணன் படம் அல்லது விக்கிரகம் வைத்து அலங்காரம் செய்து, இருபுறமும் குத்துவிளக்கேற்றி, நடுவே பூஜை பொருட்களான தேங்காய், வெற்றிலை பாக்கு, பூ, பழம் வைக்க வேண்டும். 👶 குழந்தைகளை கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரிக்க வேண்டும்.

🥛 கிருஷ்ணர் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார். இதனால் அவருக்கு மிகவும் பிரியமான பால், தயிர், வெண்ணெய், அவல், நாவற்பழம், கொய்யாப்பழம், விளாம்பழம், வாழைப்பழம் போன்ற பழங்கள் மற்றும் வெண்ணெய் சர்க்கரை கலந்த நவநீதம் என்னும் கலவையை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். 🍬 வெல்லச்சீடை, உப்பு சீடை, முறுக்கு, லட்டு, மைசூர்பாகு, தேன்குழல், மனோகரம், திரட்டுப்பால், பர்பி போன்றவற்றையும் படைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.

📖 அன்று காலையில் இருந்து ஸ்ரீமந் பாகவதம், கிருஷ்ணாஷ்டகம், கிருஷ்ணன் கதைகள் படிக்க வேண்டும். துவாதச மந்திரமான 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' என்னும் மந்திரத்தை 108 முறை ஜெபித்து, மலர்களை அவரது படத்திற்கு தூவ வேண்டும். 🌸 தூப தீபம் (பத்தி, கற்பூர ஆரத்தி) காட்ட வேண்டும். 📚 பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும். இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும்.

🏡 கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள். வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி, அங்கு நடத்தும் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் ஆகியவற்றைக் கண்டு மகிழ்வது சிறப்பு. 🎶 ஆடல்-பாடல் கோலாட்ட நிகழ்ச்சிகள், குழந்தைகள் ஆடுவதை பார்க்கும்போது கண்ணன் ஒவ்வொரு கோபியர்களிடமும் ஆனந்த நடனம் ஆடிய தீராத விளையாட்டு பிள்ளையை நினைவுபடுத்தும்.

எப்படி விரதம் இருக்க வேண்டும்? 🍴

1. உணவில்லா விரதம்:

🌞 கிருஷ்ண ஜெயந்தி அன்று காலை முதல் உணவு, நீர் என எந்தவொரு வகையான உணவையும் எடுத்து கொள்ளாமல் விரதத்தை மேற்கொள்வார்கள். சரியாக அஷ்டமி திதி நடக்கும் நாளின் இரவு 12 மணிக்கு கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை, பிரசாதங்கள் படைத்த பின்னர் தன் விரதத்தை முடிப்பார்கள்.

📖 இவ்விரதத்தின்போது பகவத் கீதை, கிருஷ்ணர் குறித்த பஜனைகள், பாடல்கள், கீர்த்தனைகள் இசைத்து விரதத்தை முழுவதும் கிருஷ்ணரின் மீது லயிக்க விடுவார்கள்.

2. திரவ உணவுடன் விரதம்:

💼 பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் விரதம் இருக்க விரும்பினால், காலையிலிருந்து எந்த ஒரு திட ஆகாரத்தையும் எடுத்துக்கொள்ளாமல் நீர், பழங்கள், பழச்சாறு, பால் போன்ற திரவ ஆகாரத்தை எடுத்துக்கொண்டு விரதம் இருக்கலாம்.

🚫 உப்பு சேர்த்த உணவுகள், நீர் ஆகாரங்கள், தானியங்கள் ஆகியவற்றை கண்டிப்பாக இந்த விரதத்தின்போது எடுத்துக்கொள்ளக்கூடாது.

கிருஷ்ண ஜெயந்தி பூஜையால் உண்டாகும் பலன்கள் 🙌

கிருஷ்ண ஜெயந்தி பூஜையில் சிறுவர்கள் கிருஷ்ணரின் கதைகளை சொல்லி வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மாணவ-மாணவிகளுக்கு புத்தசாலித்தனம் கூடும். புரிந்து கொள்ளும் ஆற்றல் திறமை அதிகரிக்கும்.

*ராதா, கிருஷ்ணா* 


காயத்ரி மந்திரம்....அனைத்தும் கைகூடும் ....

பிரிந்தவர்கள் ஒன்று சேர, கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ராதா, கிருஷ்ணா காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் அனைத்தும் கைகூடும்.

கிருஷ்ண காயத்ரி :

ஓம் தேவகிநந்தனாய வித்மஹே, 

வாசுதேவாய தீமஹி,      

தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத். 

கிருஷ்ண காயத்ரி :

ஓம் தேவகிநந்தனாய வித்மஹே, 

வாசுதேவாய தீமஹி,          

தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத். 

ராதா காயத்ரி : 

ஓம் வ்ருஷபானுஜெய வித்மஹே, 

கிருஷ்ணப்ரியாயே தீமஹி, 

தந்நோ ராதா ப்ரசோதயாத்.

*சர்வம் சிவமயம்*




0/Post a Comment/Comments