நூல் வாசிப்பனுபவம்
நூலின் பெயர் : வானம் பருகும் குளம்
நூலாசிரியர் :அகவலன்
வெளியீடு : நூலேணி பதிப்பகம்
நூலின் விலை : 110
நூல் வாங்க : 9094978511
ஒவ்வொருமுறையும் ஒரு புத்தகத்தை கையில் எடுக்கும் போதும்
ஏதோ ஒன்றை புதிதாக கற்றுக்கொள்கிறேன்
ஏதோ ஒரு புதுவித அனுபவத்தை பெருகிறேன்
ஏதோ ஒரு புதியதை புத்தகம் எனக்கு கற்பித்துவிடுகிறது
ஏதோ ஒரு புதிய ஞானத்தை அடைவதை போல உணர்கிறேன் ..
வானம் பருகும் குளம் கையில் கிடைத்திருக்கிறது
கன்னிக்கோவில் ராஜா ஐயா அவர்களின் அணிந்துரையோடு புத்தகம் தொடங்குகிறது ..
'கரையில் தூண்டில்காரன்
நிச்சயமாக மீன் கிடைக்கும்
காத்திருக்கும் கொக்கு '
எவ்வளவு ஒரு நுனுக்கமான ஹைக்கூ கவிதை
மீன் நிச்சயம் கிடைக்கும்
தூண்டில்காரனுக்கா அல்லது கொக்குக்கா என்பதை
காலம் விடையளிக்கும் காத்திருப்போம் ..
பலூன் வாங்க போன குழந்தை
திரும்பி விட்டது
பட்டாம்பூச்சி ..
பலூன் வாங்க செல்லும் குழந்தையை வழிமறித்து
திரும்பும் பட்டாம்பூச்சி ஆஹா எத்தனை அழகு ..
புது வீடு கட்டியதும்
திரும்ப வரவில்லை
பழைய காக்கை குருவிகள் ..
என்கிற ஹைக்கூ கவிதையும் சிறப்பாக உள்ளது
பாவம் எங்கு சென்றதோ அந்த. காக்கை குருவிகள் ஏக்கத்தோடு தேடுகிறார்
கவிஞர் ..
அடுக்கு மாடி குடியிருப்பில்
மலர் தோட்டம்
லிப்ட் வழியாக
வண்ணத்துப்பூச்சி ...
ஆஹா சில சமயம் நாமும் இதை கவனித்திருப்போம் லிப்ட் வழியாக
பட்டாம்பூச்சிகள் அடுக்கு மாடி குடியிருப்புகளை சுற்றி சுற்றி வருவதை ..
வீசிய வலை
துடிதுடிக்கிறது மீன்
மௌனமாகவே கடல் ..
அழ்கடலின் மௌனத்தை அலைகள் வந்து சொல்லும் கரைக்கு ..
அதுபோல தான் கவிஞரின் ஹைக்கூ கவிதைகளும் கவிஞரின் மனதிலுள்ளதை கவிதைகள் சொல்கின்றன ..
கவிஞருக்கு வாழ்த்துகள் ..
நூல் விமர்சகர் கவிஞர் ச. இராஜ்குமார்
திருப்பத்தூர் மாவட்டம்
8867933021
Post a Comment