மனதை வருடும் சிறுகதை

#சிறுகதை

ஒரு ஊர்ல ஒரு பையன் இருந்தான் ,அவனுக்கு ஏழு வயசு ,

அவன் பேர் தமிழ்ச்செல்வன்.

அவங்க பாட்டி வீட்டுக்கு கொஞ்ச நாள் வந்து இருந்தான் .

அப்போ நைட் ஆயிடுச்சு'பாட்டி தயிர் மம்மம் ஊட்டிவிட்டாங்க .

'' கதை சொல்லுங்க பாட்டி அப்போதான் சாப்பிடுவேன் '' அப்டின்னான் .

அதுக்கு அவங்க பாட்டி '' சரிப்பா , நீ ஒவ்வொரு வாயா ,ஆ வாங்கிட்டே கேளு சரியா ?''

'' சரி பாட்டி ''

'' ஒரு பெரிய காடு இருந்துச்சு , அந்த காட்டுல குதிரைங்க மட்டும் தான் இருந்துச்சு வேற மிருகங்களே இல்ல . ''

'' பாட்டி ,சிங்கம் தானே காட்டுக்கு ராஜா ''

'' சில காட்டுல தான் சிங்கம் ராஜாவா இருக்கும், நான் சொல்றது குதிரைங்க ராஜ்யம் , இங்க ராஜா ,ராணி ,மந்திரி ,மக்கள் எல்லாருமே குதிரைங்க தான் ''

''ம்ம்ம் ''

'''குதிரை ராஜாவுக்கு ஒரு குதிரை இளவரசி இருந்தா , அவ பேரு அஸ்வதி . அவ ஒருநாள் அவ தோழிங்களோட

விளையாடிட்டு இருந்தப்போ மொதோ முறையா ஒரு மனுஷனா பாத்தா . அது யாருனு கேளு ''

'' யார் பாட்டி அது ''

'' அவர் ஒரு முனிவர் , காட்ல தவம் பண்ணி முடிச்சுட்டு நடந்து போறாரு , இவ அவரை பாத்து , பாரேன் அந்த ஆள , ரெண்டு கால்ல நடந்து போறாருனு சொல்லி , சிரிப்பை அடக்க முடியாம சிரிச்சா . எதுக்கு இப்படி அசிங்கமா இருக்கீங்க உங்களா பாத்தா எனக்கு சிரிப்புதான் வருதுன்னா ''

''ம்ம்ம்ம் ''

'' முனிவருக்கு வந்துச்சு பாரு ,கோவம், ஏய் குதிரை, என்னை பாத்தா சிரிக்க , நீ மனுசியா மாறி கஷ்டத்தை அனுபவி னு சாபம் கொடுத்துட்டார் ''

'' அந்த குதிரை இளவரசி , அஸ்வதி , ஒரு பொண்ணா மாறிட்டா , அவ தோழிங்க எல்லாம் அவளை பாத்து சிரி சிரி னு சிரிச்சாங்க , இவ அவமானம் தாங்காம அந்த ஊரை விட்டே ஓடிட்டா ''

'' அப்பறம் என்னாச்சு பாட்டி''

'' நீ ஆஆ வாங்கிக்கப்பா ,''

'' ஆஆஆ ''

'' அவ மனுசங்க இருக்க ஊருக்கு ஓடிப்போனா , அந்த நாட்டு ராஜாவுக்கு குழந்தையே இல்ல , இவ தனியா நடந்து போறது பாத்து , நீ எங்க அரண்மனைக்கு வா , உன்னை நான் மக மாதிரி வளக்கறேன்னு சொன்னாரு ''

''ம்ம் ''

'' இவளும் சரினு போய்ட்டா , அவங்க கொடுக்கற சோறு ஒன்னும் இவளுக்கு புடிக்கல , யாருக்கும் தெரியாம புல்லு . கொள்ளு எடுத்து சாப்பிடுவா .. ராஜா வீட்ல குதிரைங்க இருக்க இடத்துக்கு இவ போக கூடாதுனு ராஜா தடை போட்டாரு , இவ திண்டாடி போயிட்டா ''

''அப்புறம் ''

'' அங்க இன்னொரு பொண்ணு இருந்தா ,இவளோட தோழி , அவ தான் என்னாச்சு உனக்கு,எதுக்கு எப்போ பாத்தாலும் அழுதுட்டே இருக்கனு கேட்டா ''

''ம்ம் ''

''இவ நடந்த விஷயத்தை பூராத்தியும் அவ கிட்ட சொன்னா ''

'' சரி , இங்க முதல் மந்திரி ஒருத்தர் இருக்காரு . பேரு தமிழ்ச்செல்வன். அவர்ட்ட யோசனை கேப்போம் வா போலம்னா '

'' பாட்டி , அது என் பேரு , அவருக்கு வேற பேரு சொல்லுங்க ''

''அவருக்கு அதான் பேரு , நான் என்ன செய்ய , அவரு ரொம்ப புத்திசாலி , தமிழ்ச்செல்வனு பேரு இருந்தாலே , ரொம்ப புத்திசாலியா இருப்பாங்க ""

''ம்ம் ''

'' ரெண்டு பேரும் ,அவர்ட்ட ரகசியமா வச்சுக்கோங்கனு சத்தியம் வாங்கிட்டு ,பிரச்சனைய சொன்னாங்க ''

அவரும் அதுக்கு ஒரு யோசனை சொன்னாரு , அதுப்படி ரெண்டு பேரும் முனிவரை தேடிக்கண்டுபிச்சு கால்ல விழுந்தாங்க ,சாமி என்ன மன்னிச்சுடுங்க , என்ன மறுபடி குதிரையா மாத்திடுங்க னு அழுதா ''

'' அப்பறம் அவரு குதிரையா மாத்திட்டாரா பாட்டி ''

'' அதான் இல்ல , கேளு கதைய , அவரு ஒரு விமோசனம் கொடுத்தார் , உனக்கு கல்யாணம் ஆனதும் உன்னோட புருஷன் சம்மதிச்சா நீ மறுபடி குதிரையா மாறிக்கலாம் னாரு ''

'' ம்ம்''

'' இதுங்க ரெண்டும் மறுபடி மந்திரி தமிழ்ச்செல்வன் கிட்ட வந்துச்சுங்க , ஐயா , முனிவர் இப்படி விமோசனம் குடுத்துட்டாரு , எனக்கு குதிரையா மாறதுக்கு சம்மதிக்கர மாப்பிளையா பாத்து சொல்லுங்கனா ''

''' ம்ம்ம் ''

'' பொண்டாட்டி குதிரையா மாறதுக்கு எந்த புருஷன் சம்மதிப்பான் , அந்த மாப்பிளைய கல்யாணம் முடிக்க ராஜா வேற சம்மதிக்கணும் . அவர் கிட்ட உண்மைய சொன்ன கோபத்துல கொன்னுட்டாருன்னா ''

''ம்ம்ம் ''

'' அந்த மந்திரி தமிழ்ச்செல்வன் ,பலே கில்லாடி , இதுக்கும் ஒரு யோசனை சொன்னாரு ''

'' சாப்பாடு போதும் , பாட்டி வயிறு நிறைஞ்சுடுச்சு ''

'' இன்னும் நாலு வாய் வாங்கிக்க , என் ராஜா ல ''

''வேண்டாம் பாட்டி . போதும் ''

'' அப்போ கதை சொல்ல மாட்டேன் ,சாப்ட்டாதான் சொல்லுவேன் ''

'' நாளைக்கு சொல்லுங்கப்பாட்டி , நான் தூங்கபோறேன் ''

இப்படி பாதி கதை கேட்டுட்டு , அந்தப் பையன் தமிழ்ச்செல்வன் தூங்கிட்டான் . அடுத்த நாள் அவங்க அப்பா வந்து வேற ஊருக்கு கூட்டிட்டு போயிட்டாரு , கொஞ்ச வருஷதக்கப்புறம் அந்த பாட்டி இறந்துட்டாங்க .

அவனுக்கு ரொம்ப நாள் அந்த கதையோட முடிவு தெரியவே இல்ல , நிறைய பேர் கிட்ட கேட்டுப் பாத்தான் ,யாருக்குமே தெரியல .

இப்படி ரொம்ப நாள் அந்த தமிழ்ச்செல்வன் கதையை பத்தியே யோசிச்சுட்டு இருந்தான் .

ரொம்ப வருஷம் போச்சு , தமிழ்ச்செல்வன் தாத்தா ஆயிட்டாரு , அவருக்கு இப்போ எழுவது வயசுக்கு மேல ஆச்சு , அவரை பாக்க அவரோட பேத்தி ஊர்ல இருந்து வந்துருந்தா

அவ பேரு அஸ்வதி. அவளுக்கு ஏழு வயசு , ஒரு நாள் நைட்டு அவளுக்கு தயிர் மம்மம் ஊட்டி விட்டாரு .

'' தாத்தா , ஒரு கதை சொல்லுங்க ''

'' என்ன கதை வேணும் , என் செல்லத்துக்கு ''

'' குதிரை கதை வேணும் , சொல்லுங்க ''

'' சரி சொல்றேன் , ஒரு காட்ல ஒரு குதிரை ராஜ்ஜியம் இருந்துச்சு , அங்க ஒரு குதிரை இளவரசி இருந்தா , அவ பேரு அஸ்வதி ''

'' அய்யோ தாத்தா , அது என்னோட பேரு , அவளுக்கு வேற பேரு சொல்லுங்க ,''

'' நான் என்ன செய்ய , அவ பேரே அதுதான் , அந்த பேரு வச்சவங்க எல்லாம் ரொம்ப அழகா இருப்பாங்க ''

'' ம்ம் , சரி ''

தாத்தா , அஸ்வதி குட்டிக்கு சோறு ஊட்டிடே அந்த கதைய சொல்லிட்டே வந்தாரு , அவரோட பாட்டி சொன்னாங்க இல்ல அதுவரைக்கும் சொல்லி முடிச்சாரு '

'' அப்பறம் , என்ன ஆச்சு, அந்த மந்திரி தமிழ்ச்செல்வன் என்ன யோசனை சொன்னாரு ''

'' அவரு என்ன சொன்னாருன்னா . ம்ம்ம் வந்து , நீ ஆ வாங்கிக்க ''

'' ஆஆ , ம்ம் , என்ன ஐடியா சொன்னாரு ''

'' அடுத்த நாளு , தமிழ்ச்செல்வன் , ராஜா கிட்ட பேசுனாரு , ராஜா ,ராஜா , அஸ்வதி பெருசாயிட்டா , அவளுக்கு கல்யாணம் பண்ண வேண்டாமா னு கேட்டாரு , அடுத்து என்ன செய்யலாம்னு ராஜா கேட்டாரு , நீங்க சுயம்வரம் நடத்துங்க , எல்லா நாட்டு இளவரசனையும் , வரச்சொல்லுங்க , இளவரசிக்கு யாரை புடிச்சு இருக்கோ , அவங்க கழுத்துல மாலை போட்டு , கல்யாணம் பண்ணிக்கட்டும்னாரு ''

''ம்ம்ம் , அப்புறம் ''

''சுயம்வரம் நடந்துச்சு , எப்படி நடந்துச்சு தெரியுமா ?. இளவரசி அரண்மனை பால்கனில நின்னு கையில மாலையோட பாத்துட்டே நின்னுட்டு இருந்தா , கீழ எல்லா நாட்டு இளவரசங்களும் வரிசையா அவங்க குதிரை மேல உக்காந்து ஊர்வலம் மாதிரி போயிட்டே இருந்தாங்க''

'' ம்ம்ம் ''

'' ஒரு வெள்ள குதிரைல உயரமா அழகா ,ஒரு ராஜகுமாரன் வந்தான் , இளவரசி கடகடன்னு வாசலுக்கு போனா , '''

' அந்த ராஜகுமாரன் கழுத்துல மாலையை போட்டாளா , தாத்தா ''

'' எல்லாரும் அப்படி தான் நினைச்சாங்க ,இவ ஓடிப் போயி அந்த ராஜகுமாரன் வந்த வெள்ளை குதிரை இருக்கில்ல , அதோட கழுத்துல மாலையை போட்டுட்டா ''

'' அச்சச்சோ ''

'' அப்பறமா இவ அந்த வெள்ளை குதிரை காதுல ஏதோ சொன்னா , அந்த குதிரை தலையை ஆட்டுச்சு, அவ புருஷன் இப்போ , குதிரை தானே , அதோட சம்மதம் கிடைச்சதால , இவளும் குதிரையா மாறிட்டா ..

'' ஐ , சூப்பர் இதான் அந்த மந்திரி தமிழ்ச்செல்வன் சொல்லி கொடுத்த ஐடியாவா ''

'' ஆமாடா ''

'' எதுக்கு தாத்தா , அழறீங்க ''

'' எங்க பாட்டி ஞாபகம வந்துச்சு மா ''

'' அழாதீங்க தாத்தா ''

'' ம்ம்ம் , ரெண்டு பேரும் இப்போ குதிரை தானே , அந்த குதிரை ராஜியத்துக்கே போயி சந்தோசமா ரொம்ப நாள் வாழ்ந்தாங்க. அம்புட்டுதான் தான் கதை ''

[ சுபம் ]

#04May2#சிறுகதை

ஆக்கம் தமிழ்ச்செல்வன் 

0/Post a Comment/Comments