மின்சார பில் 100 to 150 யூனிட் கள் குறைப்பதற்கான சில டிப்ஸ்கள்
இப்போ EB 500 யூனிட் வந்தா 1725 ரூபாய் அதுவே 600 யூனிட்னா 2750 ரூபாய்கள் நம்மில் பலர் அந்த 100 யூனிட்களை எப்படி குறைகிறதுன்னு தெரியாம முழிக்கிறாங்க அவங்களுக்கான டிப்ஸ் இது. இது என்னோட வீட்லயே டெஸ்ட் பண்ண மெத்தேட் என்னோட கஸ்டமர்களுக்கும் இதை நான் சொல்லி பயணடைந்திருக்கின்றனர்.
* வீட்ல பிரிட்ஜ் இருக்கா அது எந்த மாடலா இருந்தாலும் சரி அதுக்கு போட்டிருக்கிற stabilizer ஐ தூக்கிடுங்க அது தேவையில்ல ஆணி தவிர அது இரண்டு மாதங்களுக்கு சராசரியாக 30 to 45 யூனிட்கள் சாப்பிடுது. இப்ப வர்ற எல்லா பிரிட்ஜ்மே SMPS மாடல் தான் அதுக்கு stabilizer தேவையே இல்லை. அது போல டிவி கும் stabilizer தேவையில்லை தூக்கிக்கீடுங்க
* வீட்டு பேன்கள BLDC பேனா மாத்திடுங்க அட்லீஸ் தினமும் அதிக நேரம் ஓடும் பேன்களையாவது மாத்திடுங்க சாதாரண பேன் 80 வாட்ஸ் எடுக்கும் BLDC அதிகப் பட்சம் 32 வாட்ஸ் தான் அதையும் ஸ்லோவில் வைத்தால் 15 வாட்ஸ் தான் தினமும் 20 மணி நேரம் ஓடும் ஒரு சாதா பேன்ணை BLDC பேனாக மாற்றினால் சராசரியாக 60 யூனிட் மிச்சமாகும்.
* பழைய சோக் டைப் டியூப் லைட்களை LED டியூப்பா மாத்திடுங்க அப்படி மாத்தினா ஒரு டியூப்க்கு 4 யூனிட் மிச்ச மாகும்.
* மோட்டார் சின்னதா சர்வீஸ் பண்ணி பேரிங்க்கு கிரீஸ் அடிச்சி விடுங்க சராசரியா 10 யூனிட் மிச்சமாகும்
*வாசிங் மெஷின், RO பில்டர், மிக்ஸி எல்லாம் நிறைய கரண்ட் எடுக்காது அதனால அது ஓடுதேன்னு கவலைப் படாதீங்க
* AC இன்வெர்டர் AC னா stabilizer தேவையில்லை உங்க AC நேம் பிளேட் அல்லது மேனுவலை பாருங்க அதுல இன்புட் ரேஞ்ச் 140 to 260 ன்னு போட்டிருந்தா stabilizer தேவையில்லை & AC பில்டரை 15 நாட்களுக்கு ஒருக்கா கழட்டி சுத்தம் பண்ணி போடுங்க இதன் மூலமா சராசரியா 15 யூனிட் மிச்சப் படுத்தலாம்
இதெல்லாம் நான் சும்மா அடிச்சி விடல என் வீட்ல நான் பரிசோதனை பண்ணிய ரிசல்ட் குறிப்பா bldc பேன் 3 போட்டிருக்கேன் இதன் மூலமா எனக்கு 120 யூனிட் மிச்சமாகுது.
பிரிட்ஜ்க்கு stabilizer நான் எப்போதுமே போட்டது இல்லை 2006 ல் வாங்கிய பிரிட்ஜ் இன்னமும் ரிப்பேர் இல்லாமல் ஓடிக்கிட்டு இருக்கு. இன்னுமொரு அதிர்ச்சியான விஷயம் என்னவெனில் 80% பிரிட்ஜ் ரிப்பேர்கள் stabilizer மூலமாகவே வருகிறது அதற்கான டெக்கினிகல் விளக்கத்தை பின்னால் இனொரு பதிவில் தர முயற்சிக்கிறேன்.

Post a Comment